என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Cardamom price"
போடி:
கேரளமாநிலம் இடுக்கி மாவட்டம் குமுளி மற்றும் போடிமெட்டு, கம்பம்மெட்டு ஆகிய பகுதிகளில் அதிகளவு ஏலக்காய் விளைவிக்கப்படுகிறது. இந்த ஏலக்காய் தேனி மாவட்டம் போடி முந்தல் சாலையில் உள்ள இந்திய நறுமணப்பொருட்கள் வாரியத்தில் ஏலம் எடுக்கப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இங்கு நடந்த ஏலத்தில் தமிழகம் மட்டுமின்றி கேரளா, வடமாநிலங்களை சேர்ந்த ஏராளமான வியாபாரிகள் கலந்து கொண்டு போட்டிபோட்டு ஏலக்காயை வாங்கினர்.
அதிகபட்சமாக ஒருகிலோ ரூ.2025-க்கு விற்பனையானது. நடுத்தரவகை ஏலக்காய் ஒரு கிலோ ரூ.1500 வரை விலைபோனது. தற்போது ஏலத்தோட்டங்களில் காய்கள் இல்லை. இதனால் வரத்து குறைந்துள்ளது.
மேலும் சில வியாபாரிகள் அதிகவிலை கிடைப்பதற்காக ஏலக்காய்களை பதுக்கி வைத்து விற்பனை செய்கின்றனர். இதனால் இருப்பு ஏலக்காய் வைத்து ஏலம் எடுப்பவர்கள் மட்டுமே விலை ஏற்றத்தால் பயன்படுகிறார்கள். விவசாயிகளுக்கு விலை கிடைப்பதில்லை.
போடி:
போடி முந்தல்சாலையில் இந்திய நறுமண பொருட்கள் வாரியம் சார்பில் ஏலக்காய் ஏல மையம் உள்ளது. இங்கு விவசாயிகள் தங்கள் நிலங்களில் விளைந்த ஏலக்காய்களை விற்பனைக்கு கொண்டு வருவார்கள். போடி, கம்பம், பட்டிவீரன்பட்டி, விருதுநகர், மும்பை, கொல்கத்தா ஆகிய பகுதிகளில் இருந்து வரும் வியாபாரிகள் இவற்றை கொள்முதல் செய்து வருகின்றனர்.
ஏலக்காய் ஆக்ஷன் கம்பெனி நடத்திய ஏலத்தில் 82,314 கிலோ ஏலக்காய் விற்பனையானது. ஒருகிலோ ரூ.2253க்கு உச்சபட்ச விலையாக நிர்ணயிக்கப்பட்டது. சராசரி விலையை விட ரூ.1230 கூடுதலாக விற்பனை யானதால் வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
ஒரே நாளில் ரூ.603 வரை விலை உயர்வு ஏற்பட்டதால் வியாபாரிகள் கடும் அதிர்ச்சிக்குள்ளானார்கள். கேரளாவில் புயல், வெள்ளம் மற்றும் மண்சரிவால் ஏலக்காய் விளைச்சல் குறைந்துள்ளது. இதனால் விவசாயிகள், வியாபாரிகள் ஏலக்காயை பதிவு செய்வதில் குழப்பம் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் தெரிவிக்கையில், ஏலக்காய் வியாபாரிகள் ஆக்ஷன் சென்டரில் எடுத்த ஏலக்காயை மீண்டும் ஏலம் எடுத்து பதிவு செய்வதால் கூடுதல் விலை ஆகிறது. ஏலக்காய் ஏற்றுமதி ஆர்டர்கள் கிடைக்காத நேரத்தில் இந்த விலை உயர்வு அதிர்ச்சி அளிக்கிறது.
மேலும் அதிகவிலையில் தொழில்செய்ய அச்சமாக உள்ளது. திடீரென விலை குறைந்தால் கடும் நஷ்டம் ஏற்படும். இதனால் சில வியாபாரிகள், பங்குதாரர்கள் மொத்தமாக வாங்கி திடீரென விலையை உயர்த்தி விடுகின்றனர். இதனால் சிறுவியாபாரிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
எனவே ஏலம் விடப்பட்ட ஏலக்காய்களை மீண்டும் பதிவு செய்ய மாற்று ஏற்பாடு செய்யவேண்டும் என்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்