என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Cauliflower Recipes"
- சூடான டீ, காபியுடன் சாப்பிட இந்த வடை சூப்பராக இருக்கும்.
- இன்று இந்த வடையை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
காலிஃபிளவர் - ஒரு கப்
கடலை பருப்பு - அரை கப்
சோம்பு - 1 டீஸ்பூன்
கசகசா - கால் டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவைகேற்ப
மிளகாய் தூள் - அரை டீஸ்பூன்
பச்சை மிளகாய் - ஒன்று
செய்முறை
கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடலைப்பருப்பை நன்றாக கழுவி 2 மணிநேரம் ஊறவைத்த பின் மிக்சியில் போட்டு அதனுடன் சோம்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
காலிஃபிளவரை நன்றாக சுத்தம் செய்து துருவிக்கொள்ளவும். ஒரு கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்கவைத்து அதில் துருவிய காலிஃபிளவர் போட்டு ஒரு கொதி வந்ததும் தண்ணீர் இல்லாமல் வடிகட்டி வைத்து கொள்ளவும்.
இன்னொரு கிண்ணத்தில் தண்ணீரை வடிகட்டிய காலிஃபிளவர், அரைத்த கடலை மாவு, கசகசா, கொத்தமல்லி, உப்பு, மிளகாய் தூள், பச்சை மிளகாய், சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் காலிஃபிளவர் மசாலாவை சிறு சிறு உருண்டைகளாக எடுத்து வடை போல் தட்டி, அதில் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.
சூப்பரான காலிஃபிளவர் பருப்பு வடை ரெடி.
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- காலிஃப்ளவரில் புரதச்சத்து, நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
- ரத்த குழாய்களில் கொழுப்பு சேர்வதை தடுக்கிறது.
தேவையான பொருட்கள் :
காலிஃப்ளவர் - 1 பூ
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
வெங்காயம் - 2
இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
சீரகத்தூள் - 1 டீஸ்பூன்
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
மல்லித்தூள் - 2 டீஸ்பூன்
கொத்தமல்லி இலை - சிறிதளவு.
செய்முறை :
வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
காலிஃப்ளவரை சிறு சிறு பூக்களாக பிரித்து வைக்கவும்.
கொதிக்க வைத்த நீரில் காலிஃப்ளவர், உப்பு மஞ்சள் தூள் சேர்த்து ஒரு 5 நிமிடம் மூடி வைக்கவும். பின்பு நீரை வடிகட்டி விடவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய வெங்காயம் போட்டு சிவக்க வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் காலிஃப்ளவர் துண்டுகள் சேர்த்து நன்றாக பிரட்டி விடவும்.
அடுத்து அதில் மிளகாய்த்தூள், மிளகு, சீரகத்தூள், மல்லித்தூள் அனைத்தும் சேர்த்து பிரட்டி விட்டு சிறிது தண்ணீர் தெளிக்கவும்.
மூடி போட்டு 5 நிமிடம் வேக விடவும்.
அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்.
உப்பு சிறிது சேர்த்து, சரி பார்க்கவும்.
மசாலா வாடை நன்கு அடங்கி காலிஃப்ளவர் சுருண்டு வரும் போது நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து பிரட்டு அடுப்பை அணைக்கவும்.
சூப்பரான காலிஃப்ளவர் சுக்கா ரெடி.
- இது அனைவருக்கும் பிடித்தமான ஸ்நாக்ஸ்.
- 15 நிமிடத்தில் இந்த ரெசிபியை செய்யலாம்.
தேவையான பொருட்கள்:
சுத்தம் செய்த காலிஃப்ளவர் -1 கப்,
மஞ்சள் தூள்- 1/2 டீஸ்பூன்,
கான்ஃபிளவர் மாவு – 2 ஸ்பூன்,
கடலை மாவு – 1 ஸ்பூன்,
காஷ்மீரி சில்லி – 2 ஸ்பூன்,
மிளகு தூள் – 1 ஸ்பூன்,
சீரகத்தூள் -1/2 ஸ்பூன்,
உப்பு – 1ஸ்பூன்,
கரம் மசாலா – 1/2 ஸ்பூன்,
தனியா தூள் -1 ஸ்பூன்,
கறிவேப்பிலை -1 கொத்து,
எண்ணெய் – 250 கிராம்.
செய்முறை
அடுப்யில் ஒரு பாத்திரத்தை வைத்து தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வையுங்கள். தண்ணீர் கொதிக்கும் போது அதில் அரை ஸ்பூன் உப்பு, கால் டீஸ்பூன் மஞ்சள் தூள், இதை சேர்த்த பிறகு அடுப்பை அணைத்து விட்டு சுத்தம் செய்து வைத்து காலிஃப்ளவரை இதில் சேர்த்து பத்து நிமிடம் கழித்து காலிஃப்ளவரை எடுத்து தண்ணீர் இல்லாமல் வடித்து வைத்துக் கொள்ளுங்கள்.
ஒரு பவுலில் கான்பிளவர் மாவு, கடலை மாவு, காஷ்மீரி சில்லி தூள், தனியா தூள், கரம் மசாலா, மிளகு தூள், சீரகம் தூள், மஞ்சள் தூள், உப்பு இவை அனைத்தையும் சேர்த்து பிறகு 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி (இது போன்று மசாலா பொருட்களை பொரிக்க தயார் செய்யும் போது அத்துடன் எப்போதும் எண்ணெய் சேர்த்து பிசையும் போது மசாலாக்கள் அதில் நன்றாக ஊறி உதிராமல் இருக்கும் அதே நேரத்தில் நல்ல மொறு மொறுப்பாகவும் இருக்கும்). அத்துடன் லேசாக தண்ணீர் தெளித்து பஜ்ஜி மாவை விட கொஞ்சம் கெட்டியான பதத்தில் மாவை கரைத்து கொள்ளுங்கள்.
காலிஃப்ளவரை மசாலாவில் 10 நிமிடம் ஊற வைக்கவும்.
அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான சூட்டிற்கு மாற்றி வைத்துக் கொள்ளுங்கள். எண்ணெய் அதிக சூட்டுடன் இருக்கும் போது காலிஃப்ளவரை போட்டால் கருகி ருசி மாறி விடும். எண்ணெய் அதிகம் சூடாகாமல் காலிஃப்ளவரை பொரித்தால் எண்ணெய் அதிகமாக குடித்து காலிஃப்ளவர் மெது மெது வென்று ஆகி விடும்.
இப்போது காய்ந்த எண்ணெயை மிதமான சூட்டிற்கு மாற்றிய பிறகு, மசாலா கலந்த காலிஃப்ளவரை ஒவ்வொன்றாக எடுத்து போட்டு விடுங்கள். காலிஃப்ளவரை போட்ட உடன் திருப்பி போடக் கூடாது. எதையும் செய்யாமல் இரண்டு நிமிடம் அப்படியே விட்டு விடுங்கள். எண்ணெய் சலசலப்பு பாதி வரை அடங்கிய பிறகு தான், அதை மறுபுறம் திருப்பிப் போட வேண்டும். எண்ணெய் சலசலப்பு முழுதாக அடங்கிய பிறகு காலிஃப்ளவரை அதிலிருந்து எடுத்து ஒரு டிஷ்யூ பேப்பரில் போட்டு எண்ணெய் உறிஞ்சிய பிறகு கறிவேப்பிலை மேலே தூவி பரிமாறுங்கள்.
- காலிஃப்ளவரில் பல்வேறு ருசியான ரெசிபிகளை செய்யலாம்.
- இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பாசுமதி அரிசி - ஒரு கப்,
நறுக்கிய காலிஃப்ளவர் - ஒரு கப்,
வெங்காயம் - 2,
தக்காளி - 2,
பச்சை மிளகாய் - 2,
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
கார்ன்ஃப்ளார் - கால் கப்,
அரிசி மாவு - ஒரு டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்,
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,
தனியாத்தூள் - அரை டீஸ்பூன்,
பட்டை - ஒரு துண்டு,
ஏலக்காய், கிராம்பு - தலா ஒன்று,
நெய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
அரிசியை நன்றாக கழுவி அரை மணிநேரம் ஊற வைத்த பின்னர் நெய்யில் வறுத்து கொள்ளவும்.
வெங்காயம், தக்காளி, ப.மிளகாயை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
கொதிக்கும் நீரில் நறுக்கிய காலிஃப்ளவரை போட்டு, 2 நிமிடத்துக்குப் பிறகு தண்ணீரை வடிக்கவும்.
காலிஃப்ளவரை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் கார்ன்ஃப்ளார், அரிசி மாவு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்றாகப் பிசைந்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய்-விட்டு, மசாலா கலந்த காலிஃப்ளவரைப்போட்டு பொரித்தெடுக்கவும்.
குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய்விட்டு சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளித்த பின்னர் பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கிதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போனதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
தக்காளி நன்கு வதங்கியதும் தனியாத்தூள், உப்பு சேர்த்துக் கலக்கவும்.
அடுத்து அதில் நெய்யில் வறுத்த அரிசியைச் சேர்த்து, தண்ணீர் விட்டு, பொரித்து வைத்திருக்கும் காலிஃப்ளவரை போட்டு மூடி, ஒரு விசில் வந்ததும் இறக்கிப் பரிமாறவும்.
இப்போது சூப்பரான காலிஃப்ளவர் பிரியாணி ரெடி.
- இந்த குருமாவை இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி உடன் சேர்த்து சாப்பிடலாம்.
- இந்த குருமாவை செய்ய அரை மணி நேரமே போதுமானது.
தேவையான பொருட்கள்:
காலிஃப்ளவர் - 1
பச்சை பட்டாணி - 1/4 கப்
வெங்காயம் - 1
தக்காளி - 1
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
அரைப்பதற்கு...
தேங்காய் - 1/4 கப்
சோம்பு - 1 டீஸ்பூன்
முந்திரி - 5
வெங்காயம் - 1
தக்காளி - 1
பொட்டுக்கடலை - 1 டேபிள் ஸ்பூன்
பூண்டு - 4 பற்கள்
பச்சை மிளகாய் - 2
பட்டை - 1/2 இன்ச்
கிராம்பு - 1
செய்முறை:
முதலில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு, தண்ணீர் ஊற்றி மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
தக்காளி, கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
காலிஃப்ளவரை சுத்தம் செய்து, அதனை சுடுநீரில் போட்டு ஒருமுறை அலசி, பின் அதனை குக்கரில் போட்டு, அத்துடன் பச்சை பட்டாணி, உப்பு மற்றும் 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து, தண்ணீர் சிறிது ஊற்றி குக்கரை மூடி 1 விசில் விட்டு இறக்கி கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, பின் தக்காளியை சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்க வேண்டும்.
பிறகு அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறி, பின் அரைத்து அதில் அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை சேர்த்து, 1/4 கப் தண்ணீர் ஊற்றி, பச்சை வாசனை போக நன்கு கொதிக்க விட வேண்டும்.
இறுதியில் வேக வைத்துள்ள காலிஃப்ளவர் மற்றும் பட்டாணியை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து 5 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், காலிஃப்ளவர் பட்டாணி குருமா ரெடி!!!
- சப்பாத்தி, சாம்பார் சாதத்திற்கு அருமையாக இருக்கும்.
- பத்தே நிமிடத்தில் இந்த ரெசிபியை செய்து விடலாம்.
தேவையான பொருட்கள்
காலிஃப்ளவர் - 1
தக்காளி - 150 கிராம்
வெங்காயம் - 150 கிராம்
இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
தனியா தூள் - 2 டீஸ்பூன்
சீரகத்தூள் - 1 டீஸ்பூன்
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
கரம்மசாலா தூள் - அரை டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
தாளிக்க
பட்டை - 1
கிராம்பு - 2
ஏலக்காய் - 1
பிரியாணி இலை - 1
சோம்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை
காலிஃப்ளவரை நீரில் போட்டு அதனுடன் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து 10 நிமிடங்கள் கொதிக்க வைத்து பின்னர் காலிஃப்ளவரை தனியாக தட்டில் எடுத்து வைக்கவும்.
கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
தக்காளியை தண்ணீர் ஊற்றி வேக வைத்து தோல் நீக்கி அரைத்து கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கியதும், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் அரைத்த தக்காளி விழுதை சேர்த்து வதக்கவும்.
அடுத்து மிளகாய் தூள், தனியா தூள், கரம் மசாலா தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
மசாலா பச்சை வாசனை போனவுடன் அதில் காலிஃப்ளவரை சேர்த்து நன்றாக கிளறி அடுப்பை மிதமான தீயில் வைத்து மூடி போட்டு வேக வைக்கவும்.
மசாலா நன்றாக காலிஃப்ளவரில் சேர்ந்து எண்ணெய் பிரிந்து வரும் போது மிளகுத்தூள், கொத்தமல்லி தூவி இறக்கி பரிமாறவும்.
சூப்பரான காலிஃப்ளவர் சுக்கா ரெடி.
- காலிஃப்ளவரில் பல்வேறு ருசியான ரெசிபிகளை செய்யலாம்.
- இந்த ரெசிபி சாம்பார், தயிர் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
காலிஃப்ளவர் - 1
நெய் - 1 டீஸ்பூன்
கடுகு, உளுத்தம் பருப்பு - சிறிது
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
மிளகு - 1டீஸ்பூன்
சீரகம் - 1டீஸ்பூன்
செய்முறை
காலிஃப்ளவரை சிறு துண்டுகளாக நறுக்கி கொதிக்கும் நீரில் 15 நிமிடங்கள் போட்டு வைக்கவும்.
மிளகு, சீரகத்தை கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பிறகு காலிஃபிளவரைப் போட்டு மிதமான தீயில் வதக்கவும்.
காலிஃப்ளவர் நன்றாக வெந்ததும் பொடித்து வைத்த மிளகு சீரகம் தூள் தூவி இறக்கவும்.
சூப்பரான காலிஃப்ளவர் பெப்பர் பிரை ரெடி.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்