search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chandra Babu Naidu"

    • ஆந்திர சட்டசபை தொகுதிகளில் 175-ல் 160 இடங்களில் தெலுங்கு தேசம் கட்சி முன்னிலை வகிக்கிறது.
    • தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு முதல் மந்திரி ஆவது உறுதியாகி உள்ளது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் மற்றும் ஆந்திரா, ஒடிசா சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.

    ஆந்திராவில் உள்ள மொத்த சட்டசபை தொகுதிகளின் எண்ணிக்கை 175 ஆகும். இதில் 88 இடங்களை வெல்லும் கட்சி ஆட்சியை பிடிக்கும்.

    இதற்கிடையே, ஆந்திர சட்டசபை தொகுதிகளில் 175-ல் 160 இடங்களில் தெலுங்கு தேசம் கட்சி முன்னிலை வகிக்கிறது.

    தேவையான இடங்களுக்கு மேல் தெலுங்குதேசம் முன்னிலையில் இருப்பதால் அக்கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு முதல் மந்திரி ஆவது உறுதியாகி உள்ளது.

    இந்நிலையில், ஆந்திராவில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அமோக வெற்றி பெற்றுள்ள தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ஆந்திர சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு அவர்களுக்கு வாழ்த்துகள். தங்களது தலைமை ஆந்திரத்துக்கு வளத்தையும் வளர்ச்சியையும் தந்து, அம்மாநில மக்களின் கனவுகளையும் நம்பிக்கையையும் நிறைவேற்றட்டும் என பதிவிட்டுள்ளார்.

    • நடிகர் ரஜினி தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    நடிகர் ரஜினி தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இதில் முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ரஜினி வருகிறார். இந்த படத்தில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் மற்றும் வசந்த் ரவி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


    ஜெயிலர் 

    சமீபத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடிகர் மோகன்லால் இணைந்துள்ளார் என்ற அதிகாரப்பூர்வமான தகவலை படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்துடன் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது. இதனிடையே, ஜெயிலர் படப்பிடிப்பிற்காக நடிகர் ரஜினிகாந்த் ஹைதராபாத் சென்றுள்ளார். அங்கு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஆந்திர முன்னாள் முதல்-மந்திரியும் தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடுவை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்துள்ளார்.


    மோகன் லால்

    இது தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் தனது சமூக வலைதளப் பக்கத்தில், "நீண்ட நாட்களுக்கு பிறகு என் அருமை நண்பர் மரியாதைக்குரிய சந்திரபாபு நாயுடுவுடன் மறக்கமுடியாத நேரத்தை கழித்தேன். அவருக்கு நல்ல உடல் ஆரோக்கியம் கிடைக்கவும் அரசியல் வாழ்க்கையில் சிறந்து விளங்கவும் வாழ்த்துகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.



    31 கிரிமினல் வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ள ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டுமா? என சந்திரபாபு நாயுடு கேள்வி எழுப்பினார். #LSPolls #ChandrababuNaidu #JaganMohanReddy
    அமராவதி:

    ஆந்திர முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு இன்று கட்சி தலைவர்களிடையே டெலிகான்பரன்ஸ் மூலம் உரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:-

    பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி தாக்கல் செய்த வேட்பு மனுவுடன்  தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில், அவர் மீது 31 குற்றவழக்குகள் உள்ளதாக கூறியுள்ளார். நாட்டில் எந்த ஒரு தலைவருக்கும் இந்த அளவுக்கு குற்ற வழக்குகள் இருந்திருக்காது. இப்படி 31 குற்ற வழக்குகளில் தொடர்புடைய ஒரு தலைவருக்கு மக்கள் வாக்களிக்க வேண்டுமா?



    ஜெகன் மோகன் ரெட்டி மூலம் ஆந்திராவில் அதிகாரம் செலுத்த தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர்ராவ் முயற்சி செய்கிறார். ஆந்திராவில் உள்ள வளங்களைப் பார்த்து ஜெகன் மூலம் அதிகாரங்களை கைப்பற்ற முயற்சி மேற்கொள்கிறார்.  ஜெகன் மோகன் ரெட்டி, மாநிலத்தை சந்திரசேகர் ராவிடம் கொடுத்துவிடுவார் என மக்கள் பயப்படுகிறார்கள்.

    தெலுங்கானா முதலமைச்சர் தனது தவறான செயல்பாடுகளால் ஐதராபாத்தின் பெருமையை அழித்துவிட்டார். எனவே, ஜெகன் மோகன் ரெட்டிக்கும், சந்திரசேகர்  ராவுக்கும் பொதுத் தேர்தலில் பாடம் புகட்ட மக்கள் தயாராக உள்ளனர்.

    இவ்வாறு அவர் பேசினார். #LSPolls #ChandrababuNaidu #JaganMohanReddy
    ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டதன் பின்னணியில் பாஜக இருப்பதாக வெளியான குற்றச்சாட்டை அமித் ஷா மறுத்துள்ளார். #AmitShah #ChandrababuNaidu #GodavariProtest
    ஐதராபாத்:

    மகாராஷ்டிரா-ஆந்திரா இடையே கோதாவரி நதிநீர் பிரச்சினை இருந்து வருகிறது. 2010-ம் ஆண்டு ஒருங்கிணைந்த ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது கோதாவரியில் நான்டெட் மாவட்டம் பாப்லி என்ற இடத்தில் புதிதாக அணை கட்டும் திட்டத்தை மகாராஷ்டிர அரசு செயல்படுத்தியது.

    இதனை எதிர்த்து போராட்டம் நடத்திய சந்திரபாபு நாயுடு மற்றும் எம்எல்ஏக்கள், மகாராஷ்டிர மாநிலத்திற்குள் நுழைய முயன்றபோது மகாராஷ்டிர போலீசாரால் கைது செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. தற்போது இந்த வழக்கில் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட 16 பேருக்கும் மகாராஷ்டிர கோர்ட் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

    பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட விவகாரத்தில் பாஜக பின்னணியில் இருப்பதாக பரபரப்பாக பேசப்பட்டது. இந்த குற்றச்சாட்டை பாஜக தலைவர் அமித் ஷா மறுத்துள்ளார்.



    இதுபற்றி ஐதராபாத்தில் இன்று செய்தியாளர்களிடையே பேசிய அமித் ஷா, சந்திரபாபு நாயுடுவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்ததன் பின்னணியில் பாஜக இல்லை என்றும், தேர்தல் நேரங்களில் மக்களின் அனுதாபத்தை பெறுவதற்காக இதுபோன்ற குற்றச்சாட்டுக்களை சுமத்துவதாகவும் தெரிவித்தார்.

    சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டபோது, மத்தியிலும் மகாராஷ்டிராவிலும் காங்கிரஸ் கட்சிதான் ஆட்சியில் இருந்தது என்றும் அமித் ஷா கூறினார். #AmitShah #ChandrababuNaidu #GodavariProtest
    ×