என் மலர்
நீங்கள் தேடியது "Chennai International Film Festival"
இந்தோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் (Indo Cine Appreciation Foundation) கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவை நடத்தி வருகிறது.
அந்த வகையில் 23வது சென்னை சர்வதேச திரைப்பட விழா வரும் டிசம்பர் 11 முதல் 18 வரை சென்னை பிவிஆர் சினிமாஸ் -இல் நடைபெற உள்ளது.
51 நாடுகளை சேர்ந்த 122 திரைப்படங்கள் இந்த விழாவில் திரையிடப்பட உள்ளன. அவற்றில் 13 திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்படும்.
உலகளவில் உள்ள திரைப்பட இயக்குனர்கள், வெளிநாட்டு தூதர்கள், உள்ளிட்ட பலர் இந்த விழாவில் பங்கேற்கின்றனர்.
உலகின் மற்ற பிரபலமான திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்ட படங்கள் இந்த ஆண்டு திரையிடப்படும் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
அந்த வகையில் இதில் திரையிடப்பட்ட 12 தமிழ் படங்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில், டூரிஸ்ட் ஃபேமிலி, மாமன், பறந்து போ, 3 பிஎச்கே, அலங்கு, வேம்பு, பிடிமண், காதல் என்பது பொது உடைமை, மாயக்கூத்து, ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ், மெட்ராஸ் மேட்னி, மருதம், ஆகிய திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.
இவை தவிர்த்து சிறப்பு திரையிடலுக்கு பாட்ஷா படம் தேர்வாகி உள்ளது.
ரஜினியின் 50 ஆண்டுகால சினிமா பங்களிப்பை போற்றும் விதமாக மற்றும் பாட்ஷா படத்தின் 30 ஆண்டு கால பயணைத்தையும் சத்யஜோதி பிலிம்ஸ் 60 ஆண்டு கால பயணத்தையும் கொண்டாடும் விதமாக இப்படம் திரையிடப்படுகிறது.
- டிசம்பர் 14 -ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரை சென்னை சர்வதேச திரைப்பட விழா நடைபெறுகிறது.
- அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் கடந்த 2003-ஆம் ஆண்டு முதல் இந்த விழாவை நடத்தி வருகிறது.
21-வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழா, டிசம்பர் 14 -ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தோசினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் (Indo Cine Appreciation Foundation) கடந்த 2003-ஆம் ஆண்டு முதல் இந்த விழாவை நடத்தி வருகிறது.

இந்நிலையில், இந்த விழாவில் இந்த ஆண்டு போட்டியில் தமிழ் பிரிவில், வசந்த பாலனின் அநீதி, மந்திர மூர்த்தியின் அயோத்தி, தங்கர் பச்சானின் கருமேகங்கள் கலைகின்றன, மாரி செல்வராஜின் மாமன்னன், விக்னேஷ் ராஜா மற்றும் செந்தில் பரமசிவம் ஆகியோரின் போர் தோழில், விக்ரம் சுகுமாரனின் இராவண கோட்டம், அனிலின் சாயவனம், பிரபு சாலமனின் செம்பி, சந்தோஷ் நம்பிராஜனின் ஸ்டார்ட் கேமரா ஆக்ஷன், கார்த்திக் சீனிவாசனின் உடன்பால் மற்றும் வெற்றிமாறனின் விடுதலை பகுதி 1 உள்ளிட்ட படங்கள் திரையிடப்படுகின்றன.
- 21-வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழா டிசம்பர் 14-ம் தேதி தொடங்கியது.
- இதன் நிறைவு விழா டிசம்பர் 21-ஆம் தேதி நடைபெற்றது.
21-வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழா டிசம்பர் 14-ம் தேதி தொடங்கியது. இதில் மொத்தம் 57 நாடுகளின் 126 படங்கள் திரையிடப்பட்டன. இதன் நிறைவு விழா டிசம்பர் 21-ஆம் தேதி நடைபெற்றது.
இந்த விழாவில் இந்த ஆண்டு போட்டியில் தமிழ் பிரிவில், வசந்த பாலனின் அநீதி, மந்திர மூர்த்தியின் அயோத்தி, தங்கர்பச்சானின் கருமேகங்கள் கலைகின்றன, மாரி செல்வராஜின் மாமன்னன், விக்னேஷ் ராஜா மற்றும் செந்தில் பரமசிவம் ஆகியோரின் போர் தோழில், விக்ரம் சுகுமாரனின் இராவண கோட்டம், அனிலின் சாயவனம், பிரபு சாலமனின் செம்பி, சந்தோஷ் நம்பிராஜனின் ஸ்டார்ட் கேமரா ஆக்ஷன், கார்த்திக் சீனிவாசனின் உடன்பால் மற்றும் வெற்றிமாறனின் விடுதலை பகுதி 1 உள்ளிட்ட படங்கள் திரையிடப்பட்டது.

இதில் சிறந்த படமாக தேர்வான அயோத்தி பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளருக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கப்பட்டது. இரண்டாவது சிறந்த படமாக தேர்வான உடன்பால் படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளருக்கு தலா ரூ.50,000 வழங்கப்பட்டது. விடுதலை படத்தின் முதல் பாகத்துக்காக இயக்குனர் வெற்றிமாறனுக்கு சிறப்பு ஜூரி விருது அறிவிக்கப்பட்டது.

பிரீத்தி அஸ்ரானி
மாமன்னன் படத்துக்காக வடிவேலுவுக்கு சிறந்த நடிகர் விருது கொடுக்கப்பட்டது. அயோத்தி படத்துக்காக பிரீத்தி அஸ்ரானிக்கு சிறந்த நடிகை விருதும், போர்தொழில் பட ஒளிப்பதிவாளர் கலைச்செல்வன் சிவாஜி சிறந்த ஒளிப்பதிவாளராகவும், போர்தொழில் பட எடிட்டர் ஸ்ரீஜித் சாரங் சிறந்த எடிட்டராகவும், மாமன்னன் படத்தில் பணியாற்றிய சுரேன் சிறந்த ஒளிப்பதிவாளராகவும், சிறந்த குறும்படமாக பகவத் இயக்கிய லாஸ்ட் ஹார்ட் தேர்வு செய்யப்பட்டது. உலக சினிமா பிரிவிலும் விருதுகள் வழங்கப்பட்டது.








