search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chennai Spartans"

    சென்னை ஸ்பார்ட்டன்ஸ் அணி கொச்சி புளூ ஸ்பைக்கர்ஸ் அணியை வீழ்த்தி ‘திரில்’ வெற்றியை ருசித்ததுடன் இறுதிபோட்டிக்கும் முன்னேறியது. #ProVolleyball #ChennaiSpartans #KochiBlueSpikers
    சென்னை:

    முதலாவது புரோ கைப்பந்து லீக் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த 2-வது அரைஇறுதிப்போட்டியில் சென்னை ஸ்பார்ட்டன்ஸ்-கொச்சி புளூ ஸ்பைக்கர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் மாறி, மாறி புள்ளிகள் குவித்ததால் ஆட்டம் பரபரப்பாக இருந்தது. ரசிகர்களுக்கு விருந்து படைத்த இந்த ஆட்டத்தில் சென்னை ஸ்பார்ட்டன்ஸ் அணி 16-14, 9-15, 10-15, 15-8, 15-13 என்ற செட் கணக்கில் கொச்சி புளூ ஸ்பைக்கர்ஸ் அணியை வீழ்த்தி ‘திரில்’ வெற்றியை ருசித்ததுடன் இறுதிபோட்டிக்கும் முன்னேறியது. அத்துடன் லீக் ஆட்டத்தில் கொச்சி அணியிடம் கண்டு இருந்த தோல்விக்கு பதிலடி கொடுத்தது. சென்னை ஸ்பார்ட்டன்ஸ் அணியில் ருஸ்லான்ஸ் 17 புள்ளிகளும், நவீன்ராஜா ஜேக்கப் 13 புள்ளிகளும், ருடிவெரேப் 11 புள்ளிகளும் சேர்த்து அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தனர்.

    நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறும் இறுதிப்போட்டியில் கோழிக்கோடு ஹீரோஸ்-சென்னை ஸ்பார்ட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி சிக்ஸ், சோனி டென்3 சேனல்கள் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.
    புரோ கைப்பந்து போட்டியில் இன்று நடக்கும் அரையிறுதி ஆட்டத்தில் சென்னை ஸ்பார்ட்டன்ஸ் - கொச்சி புளூ ஸ்பைக்கர்ஸ் அணிகள் மோதுகின்றன. #ProVolleyball #ChennaiSpartans #KochiBlueSpikers
    சென்னை:

    முதலாவது புரோ கைப்பந்து ‘லீக்’ போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது.

    இதன் 2-வது அரை இறுதி ஆட்டம் இன்று இரவு 7 மணிக்கு நடக்கிறது. இதில் ஸ்பார்ட்டன்ஸ்- கொச்சி புளூஸ் பைக்கர்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இதில் சென்னை அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை அணியில் விளையாடும் கனடா வீரர் ரூடி வெர்ஹோப் மீது அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது.

    சென்னை ஸ்பார்ட்டன்ஸ் ‘லீக்’ ஆட்டத்தில் கொச்சியிடம் தோற்று இருந்தது. அதற்கு பதிலடி கொடுக்க வேண்டிய நிலையும் உள்ளது. சென்னையை ஏற்கனவே வீழ்த்தி இருந்ததால் கொச்சி அணி இறுதிப்போட்டிக்கு நுழையும் நம்பிக்கையுடன் இருக்கிறது.

    நேற்று நடந்த முதல் அரை இறுதியில் கோழிக்கோடு ஹீரோஸ் அணி 15-12, 15-9, 16-14 என்ற நேர்செட் கணக்கில் மும்பையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்தது. இறுதி ஆட்டம் 22-ந்தேதி நடக்கிறது. #ProVolleyball #ChennaiSpartans #KochiBlueSpikers
    ×