search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "chennai weather center"

    வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. #Rain #IMD
    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் காலை நேரத்தில் கடுமையான வெயில் தாக்கம் இருந்து வருகிறது. நேற்று இரவு ஒன்றிரண்டு இடங்களில் லேசான மழை பெய்துள்ளது. இன்று காலை கடுமையான வெயில் தாக்கம் இருந்து வருகிறது. அதேவேளையில் சில இடங்களில் வானம் மேக மூட்டமும் காணப்பட்டது.

    இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல இடங்களில் மழை செய்ய வாய்ப்பு உள்ளதாக வானிமை மையம் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து வானிமை மையம் தெரிவித்துள்ள செய்தியில், ‘‘தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கை பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டமாக காணப்படும். சில இடங்களில் மழை பெய்யலாம்’’ என்று தெரிவித்துள்ளது.
    வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. #TamilNaduRain
    சென்னை:

    தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து, மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்களில் கனமழை பெய்தது. இந்த தொடர் மழை காரணமாக நீர்நிலைகள் நிரம்பி பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. உள்மாவட்டங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது.

    இந்நிலையில், வெப்பச் சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் இன்று முதல் 26-ம் தேதி வரை இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையை பொருத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. 

    குறிப்பாக 26-ம் தேதி தொலைதூரப் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. #TamilNaduRain
    வெப்பசலனம் காரணமாக நேற்று போல் இன்றும் பிற்பகலிலும் இடி-மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. #ChennaiRain
    சென்னை:

    தமிழ்நாடு முழுவதும் பல பகுதிகளில் அவ்வப்போது கோடை மழை பெய்து வந்தாலும் சென்னைக்கு மழை பாராமுகமாகவே இருந்தது. பக்கத்தில் காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மழை பெய்த நிலையில் சென்னையில் மழை இல்லாததால் வெயில் கொளுத்தியது.

    கத்திரி வெயில் முடிந்த பிறகும் சென்னையில் வெயிலின் தாக்கம் குறையவில்லை. சொல்லப் போனால் கத்திரி வெயிலுக்கு பின்னர்தான் சென்னையில் வெயில் சுட்டெரித்தது. நேற்று அதிகபட்சமாக சென்னையில் 105 டிகிரி வெப்பம் நிலவியது. இதனால் பகலில் மக்கள் கடும் அவதிப்பட்டனர்.

    ஆனால் பிற்பகல் 2 மணிக்கு திடீர் என்று மேகங்கள் திரண்டு மழை பெய்யத்தொடங்கியது. சிறிது நேரத்தில் பலத்த மழை கொட்டியது. மாலை வரை மழை தூறிக்கொண்டே இருந்தது.


    இந்த மழையால் வெப்பம் தணிந்து பூமி குளிர்ந்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். சென்னையின் அனைத்துப் பகுதியிலும் நல்ல மழை பெய்தது. தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    சென்னையில் நுங்கம்பாக்கத்திலும், மீனம்பாக்கத்திலும் 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. வெப்பசலனம் காரணமாக இந்த மழை பெய்ததாகவும், நேற்று போல் இன்று பிற்பகலிலும் இடி-மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. #ChennaiRain
    ×