search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "chidambaram natarajar"

    • இந்த மாதத்தில்தான் வைகுண்ட ஏகாதசி, ஆருத்ரா தரிசனம், ஆஞ்சநேய உற்சவம் ஆகியன வரும்.
    • இந்தத் திருவாதிரை நட்சத்திரமே சிவபெருமானுக்கு உகந்த நட்சத்திரம் ஆகும்.

    மார்கழி மாதம் இறைவழிபாட்டுக்கான மாதம்.

    இந்த மாதத்தில்தான் வைகுண்ட ஏகாதசி, ஆருத்ரா தரிசனம், ஆஞ்சநேய உற்சவம் ஆகியன வரும்.

    இதில் ஆருத்ரா தரிசனம் எனப்படும் திருவாதிரைத் திருவிழா அனைத்து சிவாலயங்களிலும் சிறப்பாக நடைபெறும்.

    அதிலும் குறிப்பாக சிதம்பரத்தில் இந்தத் திருவிழா பிரம்மோற்சவமாக நடைபெறும்.

    ஆருத்ரா என்பது ஒரு நட்சத்திரத்தின் பெயர்.

    தமிழில் ஆதிரை, அல்லது திருவாதிரை என்று அழைக்கப்படும் நட்சத்திரமே சமஸ்கிருதத்தில் ஆருத்ரா என்று அழைக்கப்படுகிறது.

    'ஆருத்ரா' என்ற சொல்லுக்கு 'ஈரமான', 'இளகிய', 'புத்தம் புதிய', 'பசுமையான' என்ற பல அர்த்தங்கள் உண்டு என்கிறார்கள்.

    இந்தத் திருவாதிரை நட்சத்திரமே சிவபெருமானுக்கு உகந்த நட்சத்திரம் ஆகும்.

    அந்த நாளில் பக்தர்கள் விரதம் இருந்து சிவனை வழிபடுவார்கள்.

    அதிலும் குறிப்பாக மார்கழி மாதத்தில் வரக்கூடிய திருவாதிரை தினம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த விரத நாள்.

    இந்த நாளில் சிவாலயங்களில் நடராஜப் பெருமானுக்கு சிறப்பு வாய்ந்த அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் நடைபெறும்.

    இந்நாளில் நாம் காணும் சிதம்பரம் நடராஜரின் அற்புதமான நடனத் திருக் காட்சியே ஆருத்ரா தரிசனம் என்று போற்றப்படுகிறது.

    இத்தகைய சிறப்பு வாய்ந்த நாளில் பெண்கள் விரதம் இருந்தால் தீர்க்க சுமங்கலி வரம் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.

    இதை மையமாகக் கொண்டு பெண்கள் சிலர் திருவாதிரை விரதம் எடுத்து தங்கள் தாலியினை மாற்றிக் கொண்டு சிவபெருமானை வழிபட்டு தங்களின் கணவருக்கு தீர்க்க ஆயுள் கிடைக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்வர்.

    • சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடராஜருக்கு பிரசாதமாக கற்கண்டு சாதம் படைக்கப்படுகிறது.
    • சித்சபையில் உள்ள நடராஜமூர்த்தியின் வலது பக்கசுவரில் உள்ள மந்திரசக்தியாக உள்ளது.

    சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடராஜருக்கு பிரசாதமாக கற்கண்டு சாதம் படைக்கப்படுகிறது.

    கற்கண்டு, நெய், முந்திரியில் செய்யப்படும் இச்சாதம் மிகவும் ருசியாக இருக்கும்.

    அதுபோன்று சம்பா சாதம், எண்ணை கொஸ்து மற்றொரு பிரசாதமாக படைத்து பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.

    இவையல்லாமல் திருவாதிரை நட்சத்திரத்தில் திருவாதிரைக்களி நடராஜருக்கு படைத்து விநியோகிக்கப்படும்.

    சித்சபையில் உள்ள நடராஜமூர்த்தியின் வலது பக்கசுவரில் உள்ள மந்திரசக்தியாக உள்ளது.

    இது இறைவனின் 3 நிலைகளில் ஒன்றான அருவ நிலையைக் குறிக்கும்.

    இத்தலம் பஞ்சபூதங்களில் ஆகாய ஸ்தலமாக விளங்குவதால் இறைவனை மந்திர வடிவமாக யந்திரமாக நிறுவியுள்ளனர்.

    இங்குள்ள யந்திரத்தை திருவரும் பலச்சக்கரம் என்றும் சிவசக்தி சம்மேளனச் சக்கரம் என்றும் குறிப்பிடுவார்கள்.

    இதற்கு ஆண்டுக்கு ஒருமுறை புணுகு சாத்துவார்கள்.

    இதன்மீது தங்க வில்வ மாலை தொங்கவிடப்பட்டுள்ளது.

    இதன் மீது தொங்கும் திரை வெளிப்புறம் கருப்பும், உட்புறம் சிவப்பும் கொண்டதாக உள்ளது.

    மறைப்பு சக்தியே அருட்சக்தியாக மாறி உதவும் என்பதை விளக்குகிறது.

    • நேராக சிவனை தரிசித்து, அம்பாளை தரிசித்து விட்டு வெளியேறுதல் முழுமையான தல தரிசனம் ஆகாது.
    • இத்தல நாயகன் நடராஜன் ஆடல் வல்லானாய் இருப்பதால் கூத்தன் கோவில் என்ற திருநாமமும் உண்டு.

    கோவில்களில் உள்ள அனைத்துச் சன்னதிகளையும் தரிசித்து, பின்னர் அம்பாளை தரிசித்து, கடைசியாகத்தான் மூலவர் சிவனை தரிசிக்க வேண்டும்.

    நேராக சிவனை தரிசித்து, அம்பாளை தரிசித்து விட்டு வெளியேறுதல் முழுமையான தல தரிசனம் ஆகாது.

    எனவே இத்திரு கோவில்களில் உள்ள நவகிரக சன்னதி, பதஞ்சலி சன்னதி, கம்பத்து இளையனார் சன்னதி ஆகிய சன்னதிகளை வணங்க வேண்டும்.

    திருக்கோவில் சிறப்பு தங்களது பக்தியால் அறுபத்து மூவர் என்று சிறப்பு பெற்றவர்களுள், முக்கியமானவர்கள் நால்வர்.

    அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகியோரே அந்நால்வர்-என்பது சிவனடியார்களுக்குத் தெரிந்ததுதான்.

    இவர்கள் நால்வரும் இத்திருத்தல நாயகன் திருமூல நாதர் மீதும், உமையாம்பிகை மீதும் தேவாரப் பாடல்கள் பாடியுள்ளனர்.

    இத்தல நாயகன் நடராஜன் ஆடல் வல்லானாய் இருப்பதால் கூத்தன் கோவில் என்ற திருநாமமும் உண்டு.

    தில்லை மரங்கள் நிறைந்த காடாக இருந்ததால் தில்லை கூத்தன் கோவில் என்றும் அழைக்கப்படும்.

    சித் என்ற ஞானத்தையும், அம்பரம் என்ற ஆகாயத்தையும் குறிப்பதால் சிதம்பரம்.

    அதனால் சிதம்பரம் தில்லை கூத்தன் கோவில் என்றே அழைக்கப்படுகிறது.

    சிதம்பரம் என்ற பெயரே வழக்கில் இருந்தாலும் புலிக்கால் முனிவர் வியாக்கிரபாதர் பூசை செய்த காலத்தில் புலியூர் என்றும் இதுவே பூலோகக் கைலாயம் என்றும் அழைக்கப்படுகிறது.

    பஞ்சபூதத் தலங்களில் முதல் தலமாக சிதம்பரம் உள்ளது. பஞ்சபூத தலங்களை வழிபட விரும்புபவர்கள், அந்த பயணத்தை சிதம்பரத்தில் இருந்து தொடங்குவது நல்லது.
    * ஆன்மிக ரீதியாக சிவபெருமானின் பஞ்ச பூத தலங்கள் இருக்கின்றன. அவை:- காஞ்சீபுரம் (நிலம்), திருவானைக்காவல் (நீர்), காளஹஸ்தி (காற்று), திருவண்ணாமலை (நெருப்பு), சிதம்பரம் (ஆகாயம்).

    * பஞ்சபூதத் தலங்களில் முதல் தலமாக சிதம்பரம் உள்ளது. பஞ்சபூத தலங்களை வழிபட விரும்புபவர்கள், அந்த பயணத்தை சிதம்பரத்தில் இருந்து தொடங்குவது நல்லது.

    * சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக அமைந்துள்ளது, சிதம்பரம் நடராஜர் ஆலயம். மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய 3 பெருமைகளை கொண்ட அற்புத தலம் இது.

    * இங்குள்ள நடராஜ பெருமானின் சன்னிதிக்கான, கொடி மரம் தங்கத்தகடு வேய்ந்ததாகும்.

    * இத்தலத்தில் நடராஜர் என்ற உருவமாகவும், ஆகாயம் என்ற அருவமாகவும், ஸ்படிக லிங்கம் என்ற அருவுருமாகவும் இறைவன் அருள்பாலிக்கிறார். நடராஜர் ஆலயத்துக்குள் தினமும் 27 லிங்கங் களுக்கு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்படுகின்றன.

    * சிவாலயங்களில் கர்ப்பக்கிரக கோஷ்டத்தை சுற்றி, தெய்வ உருவங்கள் இருக்கும். சிதம்பரத்தில் அத்தகைய அமைப்பு இல்லை.

    * திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரும் சிதம்பரம் திருத்தலத்தைப் பற்றிப் பாடியுள்ளனர். எனவே அந்த நால்வரின் குரு பூஜையும், இந்த ஆலயத்தில் பெரிய திருவிழா போல கொண்டாடப்படுகிறது.

    * சிதம்பரத்தில் நடக்கும் திருவிழாக்களில் திருவாதிரை திருவிழா மிகவும் முக்கியமானது.

    * முத்து தாண்டவர் என்ற புலவர் தினமும் சிதம்பரம் கோவிலுக்குள் நுழைந்ததும், முதலில் தன் காதில் எந்த சொல் விழுகிறதோ, அதை வைத்து கீர்த்தனை இயற்றி, நட ராஜரை துதித்து வழிபடுவார். அவர் பாடி முடித்ததும் தினமும் அவருக்கு நடராஜர் படிக்காசு கொடுப்பாராம்.

    * சிதம்பரம் நடராஜர் ஆடிக் கொண்டிருக்கும் ஆனந்த தாண்டவம் என்ற கோலம் ‘காஸ்மிக் டான்ஸ்' என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கப்படுகிறது.

    * சிவகங்கை தீர்த்த குளம் நான்கு புறமும் படிக்கட்டுகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்த்த குளம் அருகில் சிறு தூண் நடப்பட்டிருக்கும். அங்கிருந்து பார்த்தால், ஆலயத்தின் 4 ராஜ கோபுரங்களையும் தரிசிக்க முடியும்.

    * சிதம்பரம் ஆலயம் என்றதுமே நம்மில் பெரும்பாலானவர்களுக்கு, அந்த ஆலயத்தின் மூலவர் நடராஜர் என்பதாகத்தான் நினைப்பு வரும். அனைவரும் ஆலயத்திற்குள் நுழைந்ததும் நடராஜரைத் தேடியே ஓடுவார்கள். ஆனால் உண்மையில் இந்த ஆலயத்தின் மூலவர், லிங்க வடிவில் ஆதிமூலநாதர் என்ற பெயரில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.

    பஞ்சபூதங்களையும் தன்னுள் அடக்கிய சிதம்பரம் நடராஜரை ஒரு மனிதன் வாழ்நாளில் ஒரு முறையாவது தரிசிக்கும் பட்சத்தில் முக்தி அடைவான் என்பது நம்முன்னோர்கள் சொன்னவழி.
    நடராஜரை 2 வழிகளில் தரிசிக்க வேண்டும்.

    1)மேலிருந்து கீழாக முதலில் திருமுகத்தை தரிசிக்க வேண்டும், பின்னர் அபய ஹஸ் தத்தையும் (அபயம் அளிக்கும் வலது கை) தூக்கிய திருவடியையும் மனதை ஒருமுகப் படுத்தி தரிசிக்க வேண்டும்.

    2) கீழிருந்து மேலாக முதலில் தூக்கிய திருவடியையும், அபயஹஸ்தத்தையும், திரு முகத்தையும் தரிசிக்க வேண்டும்.

    இவ்வாறு 2 வழிகளில் நடராஜரை தரிசிக்க வேண்டும்.

    நடராஜர் ஓம் என்ற பிரணவ மந்திர வடிவில் காட்சி அளிக்கிறார். அவருக்கு துணையாக சிவகாமி அம்மன் அருள் செய்கிறார். இந்த நடராஜரும், சிவகாமியும் நாம் பார்க்கும் போது 2 உருவங்களாக தெரிந்தாலும் தத்துவப்படி அவர்கள் ஒன்றாக இணைந்தே அருள்செய்கிறார்கள். உதாரணமாக அர்த்தநாரீஸ்வரர் வடிவில் சிவனும்-சக்தியும் இணைந்தே காட்சி அளிக்கின்றனர்.

    பரத கலையை கற்றுக்கொடுப்பவர்களும், பரத கலையை கற்றுக்கொள் பவர்களும் மாற்று மதத்தினராக இருந்தாலும் கூட அவர்கள் சிதம்பர நடராஜரை முன்னுதாரணமாக வைத்து வணங்குகிறார்கள். தங்களுடைய வீடுகள், வரவேற்பு அறைகளில் நடராஜர் சிலையை வைத்து மகிழ்கிறார்கள்.

    இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு பிரமுகர்களுக்கு இந்தியாவின் சார்பில் நம்நாட்டு அடையாள சின்னமாக நம்முன்னோர்கள் நடராஜர் சிலையையே பரிசாக அளிக்க அனுமதித்தது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

    சைவ சமயத்துக்கு உருவகமாக 2 திருவுருவங்கள் பழக்கத்தில் உள்ளன. முதலில் சிவலிங்க வழிபாட்டை கூறலாம். சிவலிங்கத்துக்கு சிறப்பு உருவமாக சிதம்பரம் நடராஜர் சிலையை நம்முன்னோர்கள் கண்டிருக்கிறார்கள் என்பது மேன்மையான சிறப்பாகும்.

    மேலும் பஞ்சபூதங்களையும் தன்னுள் அடக்கிய சிதம்பரம் நடராஜரை ஒரு மனிதன் வாழ்நாளில் ஒரு முறையாவது தரிசிக்கும் பட்சத்தில் முக்தி அடைவான் என்பது நம்முன்னோர்கள் சொன்னவழி.

    பக்தர்கள் தாங்கள் பிறந்த நாளிலோ, பிறந்த நட்சத்திரத்திலோ நடராஜ பெருமானை வழிபடுவது சிறப்பானதாகும்.

    தகவல்:

    வெங்கடேசதீட்சிதர்
    சிதம்பரம் நடராஜர் கோவில்.
    செல்: 98944-06321.
    சிவாலயங்களில் சிவலிங்கத்துக்கு ஒரு நாளைக்கு 4, 5 மற்றும் 6 காலம் என்ற முறையில் பூஜைகள் நடைபெறும். ஆனால் சிதம்பரம் நடராஜருக்கோ ஆண்டுக்கு 6 முறை மட்டுமே அபிஷேகம் நடைபெறுகிறது.
    பொதுவாக 2 வழிகள் நம்முடைய சாஸ்திரத்தில் உள்ளன. அவை தட்சிணாயனமும் என்றும், உத்திராயணம் என் றும் உள்ளது.

    அந்த வகையில் உத்திராயணம் என்று சொல்லப்படுகின்ற தை மாதம் தொடங்கி ஆனி மாதம் வரை உத்திராயணம் வழிபாடு நடக்கிறது.

    சூரியன் பூமத்திய ரேகைக்கு தெற்கு பகுதியில் சென்றால் தட்சிணாயனமும், வடக்கு பகுதியில் சென்றால் உத்திராயணமும் கணக்கிடப்படுகிறது.

    தற்போது உத்திராயண வழிமுறையில் ஆனி திருமஞ்சனம் கொண்டாடப்படுகிறது. சிதம்பரம் நடராஜருக்கு ஆண்டுதோறும் 6 அபிஷேகங்களை நிர்ணயித்துள்ளார்கள்.

    பொதுவாக சிவாலயங்களில் சிவலிங்கத்துக்கு ஒரு நாளைக்கு 4, 5 மற்றும் 6 காலம் என்ற முறையில் பூஜைகள் நடைபெறும்.

    ஆனால் சிதம்பரம் நடராஜருக்கோ ஆண்டுக்கு 6 முறை அபிஷேகம் நடைபெறுகிறது. அதன்படி உத்திராயணத்தில் 3 அபிஷேகங்களும், தட்சிணாயனத்தில் 3 அபிஷேகங்களும் நடைபெறும். தற்போது ஆனி திருமஞ்சன உற்சவத்தை முன்னிட்டு உத்திராயணத்தில் 3-வது அபிஷேகமாக இந்த ஆனி திருமஞ்சன மகா அபிஷேகம் நடைபெறுகிறது.
    ஆனி திருமஞ்சன தினத்தன்று சாமியை தரிசனம் செய்தால், மக்களின் வேண்டுதல்கள் அனைத்தும் மிக விரைவில் நிறைவேறும். மக்கள் நல்ல பயனை அடைவார்கள்.
    பூலோக கைலாயமாக விளங்கும் சிதம்பரத்தில் நடராஜர் கோவில் உள்ளது.இங்கு ஆண்டுக்கு 2 முறை உற்சவங்கள் நடைபெறுகிறது. ஒன்று ஆனி திருமஞ்சனம், 2-வதாக மார்கழி மாத திருவாதிரையில் ஆருத்ரா தரிசனம். இந்த ஆண்டுக்கான ஆனி திருமஞ்சன மகாஉற்சவம் இந்த மாதம் 12-ந் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.

    இதைத்தொடர்ந்து தினமும் 2 வேளைகளிலும் வாகனங்களில் 4 வீதிகளில் சாமி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. நாளை (20-ந் தேதி) தேரோட்டம் நடக்கிறது. மூலவரும் உற்சவருமான ஆனந்த நடராஜரும், சிவகாமி அம்மனும் திருத்தேரில் எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசிக்கிறார்கள்.

    21-ந் தேதி இன்று ஆனிதிருமஞ்சன நிகழ்ச்சி நடக்கிறது. அதிகாலை 2 மணியில் இருந்து காலை 6 மணி வரை அபிஷேகம் நடக்கிறது. இந்த அபிஷேகத்தை காண்பது மனிதர்களின் பெரும்பாக்கியம்.

    ஆனிதிருமஞ்சனத்தின் பயன்கள்

    ஆனி திருமஞ்சன தினத்தன்று சாமியை தரிசனம் செய்தால், மக்களின் வேண்டுதல்கள் அனைத்தும் மிக விரைவில் நிறைவேறும். மக்கள் நல்ல பயனை அடைவார்கள். வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும். ஆண்-பெண் இருபாலரின் திருமணம் போன்ற வைபவங்கள் நடக்கும்.

    இந்த ஆனியை தொடர்ந்து ஆவணி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை என மாதங்கள் வளர்ந்து வரும். அந்த காலங்களில் பக்தர்களின் வேண்டுதல்கள் நிறைவேறும். அனைத்து பக்தர்களும் அவரவர்களின் ஊர்களுக்கு அருகே உள்ள சிவன் கோவிலுக்கு சென்று அங்கு நடைபெற கூடிய ஆனி திருமஞ்சன மகாஅபிஷேகத்தில் தங்களால் முடிந்த அபிஷேக பொருட்களை கொடுத்து அபிஷேகம் செய்ய வேண்டும்.

    அவ்வாறு செய்தால், பல்வேறு நற்பயன்கள் கிடைக்கும். அபிஷேகம் செய்யப்படும் ஒவ்வொரு பொருட்களும் அதற்கு கிடைக்கும் பலன்களும் வருமாறு:-

    அபிஷேக பொருட்களின் பயன்கள்

    பால்:- சந்ததி உண்டாகும்.
    தயிர்:- சந்ததி வளம் பெறும்.
    தேன்:- குரல் வளம் கிடைக்கும்.
    பஞ்சாமிர்தம்:- எதிரிகள் அழிக்கப்படுவார்கள்.
    நாட்டுச்சர்க்கரை:- எமபயம் நீங்கும்.
    சந்தனம்:- வாழ்வு சிறக்கும்.
    விபூதி:- எண்ணங்கள் நிறைவேறும்.
    பழச்சாறு:- குடும்பம் வளர்ச்சியை பெறும்.
    கங்கா தீர்த்தம்:- ஞானம் உண்டாகும்.
    எலுமிச்சை சாறு:- நினைத்தது எல்லாம் கிடைக்கும்.



    பக்தர்கள் தங்களுடைய வேண்டுதலுக்கேற்ப இதுபோன்ற அபிஷேக பொருட்களை கொடுத்து பலன் பெறலாம். இதுமட்டு மின்றி பட்டு உள்ளிட்ட வஸ்திரங்கள், வாசனை திரவியங்கள் உள்ளிட்ட பொருட்களையும் பக்தர்கள் வழங்கலாம். இதன் மூலம் பக்தர்களின் வாழ்வில் மேன்மை உண்டாகும்.

    மலர் மாலைகள், பூச்சரங்கள், வாசனைமிக்க பூக்களை வைத்து இறைவனை அர்ச்சித்தால் நமக்கு நல்ல பயன்கள் கிடைக்கும். இறைவனால் அளிக்கப்பட்ட பொருட்களை இறைவனுக்கே நாம் அர்ப்பணித் தால் நமக்கு பல மடங்கு பலன் கிடைக்கும்.

    எல்லா வற்றிற்கும் மேலாக இறை வனுக்கு படைக்கப்பட்ட பிரசாதங்களை ஆனி திருமஞ்சனத்தன்று பெறுவது மிகபாக்கியமாக கருதப்படுகிறது.

    வழிபாடு

    ஆனி திருமஞ்சன வழிபாடு சிதம்பரம் நடராஜர் கோவில் மற்றும் தமிழகத்தில் உள்ள சிவாலயங்களில் மட்டுமல்லாமல் உலகில் உள்ள அனைத்து நடராஜர் சன்னதிகளிலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

    சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா மற்றும் பல்வேறு வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் ஆனி திருமஞ்சன விழாவை சிறப்பாக கொண்டாடுகிறார்கள்.
    விஞ்ஞானிகள் வியப்பு

    ஜெனீவாவுக்கும், சுவிட்சர்லாந்துக்கும் நடுவில் இருக்கக்கூடிய அணுஆராய்ச்சி கூடத்தில் சிதம்பரம் நடராஜரின் முழுஉருவச்சிலையை நிறுவி இருக்கிறார்கள். நடராஜர் வழிபாட்டிற்கு நம்முன்னோர்கள் எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள் என்பதற்கு இதுவே சான்று.

    அங்கு வைக்கப் பட்டுள்ள சிதம்பரம் நடராஜரின் முழுஉருவ சிலையானது உலக விஞ்ஞானிகளே வியக்கும் வகையில் தத்ரூபமாக அமைக் கப்பட்டுள்ளது.
    பஞ்சபூதங்களையும் தன்னுள் அடக்கி ஆள்பவராக நடராஜரின் சிலை அமைப்பு காணப்படுகிறது. அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உள்ளது. பிண்டத்தில் உள்ளது அண்டத்தில் உள்ளது என்று மேற்கோள் காட்டும் விதமாக மனித உடலின் இயக்கங்கள் பஞ்சப்பூதத்தை ஒன்றி உள்ளது என்ற திருமூலரின் சொல்லுக்கிணங்க மனிதனுடைய இயக்கமும், பிரபஞ்சத்தின் இயக்கமும் பஞ்சபூதத்தின் ஆட்சியின் கீழ் நடைபெறுகிறது என்பதை சிதம்பரம் நடராஜர் சிலை அமைப்பு விளக்குகிறது.

    நடராஜரின் திருவுருவ சிலையில் வலது மேல் கையில் உடுக்கையும் (படைத்தல்), இடது மேல் கையில் அக்னியும் (அழித்தல்), வலது கை அபயஹஸ்தம் (காத்தல்), வலது ஊன்றிய பாதம் (ஆணவங்களை நீக்குதல்), தூக்கிய திருவடி (அருள் பொழியும் தன்மை)ஆகியவற்றை கொண்டு விளங்குகிறது. இடது கீழ் கையானது தூக்கிய திருவடியை காட்டும் வண்ணம் அமைந்துள்ளது.

    வெங்கடேசதீட்சிதர்
    சிதம்பரம் நடராஜர் கோவில்.
    செல்: 98944-06321.

    ×