search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "child will be blessed"

    • கருட பஞ்சமிக்கு முன்பு சதுர்த்தி திதி அமையும் நாள் நாகசதுர்த்தி.
    • பித்ருக்களின் ஆசி நமக்கு பரிபூரணமாக கிடைக்கும்.

    பாற்கடலை கடையும் போது வெளிப்பட்ட ஆலகால விஷத்தை சிவபெருமான் உண்ட தினமாக நாகசதுர்த்தி கொண்டாடப்படுகிறது. கர்நாடக மாநிலத்தில் நாகசதுர்த்தி அன்று தம்பிட்டு என்ற ஒருவகை லட்டுவை சிவபெருமானுக்கு நைவேத்தியமாக படைக்கின்றனர்.

    கருட பஞ்சமிக்கு முன்பு சதுர்த்தி திதி அமையும் நாள் தான் நாகசதுர்த்தி என்று அழைக்கப்படுகிறது. நாக சதுர்த்தி நாள் அன்று அஷ்ட நாகங்களான வாசிகி, ரட்சகன், காளிங்கன், மணிபக்தன், சராவதன், திருதிராஷ்டிரன், கார்கோடகன், தனஞ்செயன் இவர்களை வணங்க வேண்டும்.

    ராகு-கேது தோஷங்களால் திருமணம் நடக்காதவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் இந்நாளில் நாகங்களை வழிபாடு செய்ய வேண்டும். ஆடி அல்லது ஆவணி வளர்பிறை சதுர்த்தியை நாகசதுர்த்தி என்று அழைக்கிறார்கள்.

    ராகு கேது கிரக தோஷங்கள் நீங்கவும், ஆரோக்கியம் மேம்படவும், செல்வ வளம் அதிகரிக்கவும், பித்ருக்களின் ஆசி நமக்கு பரிபூரணமாக கிடைக்கவும் இந்த ஆவணி ஞாயிறு விரதத்தை அனுஷ்டிக்கலாம். தந்தை இல்லாதவர்கள் வாழ்வில் வளம் பெற சூரியனைத் தந்தையாக ஏற்றுக் கொண்டு இந்த விரதத்தை அனுஷ்டிக்கலாம். இதனால் இரட்டிப்பு பலன் உங்களுக்கு கிடைக்கும். சனிபகவானின் பாதிப்பு குறைந்து வாழ்வில் நிம்மதி கிடைக்கவும், சூரிய புத்தியால் ஏற்படும் தோஷங்கள் தீரவும் நாகசதுர்த்தி விரதத்தை கடைபிடிக்கலாம்.

    அந்த காலத்தில் விவசாயிகள் ஆவணி மாதத்தில் நன்கு விளைந்து நிற்கும் வயல்வெளிகளில் இருக்கும் பாம்பு போன்ற விஷ ஜந்துக்களிடம் இருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டி பெண்கள் நாகருக்கு புற்றில் பால் ஊற்றி இந்த நாளில் வழிபாடுகள் செய்வார்கள். அரசு வேலைக்காக தேர்வு எழுதிவிட்டு காத்திருப்பவர்களும், வேலையில்லாதவர்கள் வேலை கிடைக்க ராகு கேதுவான நாகர் சிலைக்கு பால் ஊற்றி வேண்டிக் கொள்ளலாம். நாக சதுர்த்தி அன்று நாக தோஷம் நீங்கவும், கால சர்ப்ப தோஷங்கள் நீங்கவும் நாகர்களை வழிபடலாம்.

    நாகங்கள் தீண்டி இறந்த சகோதரர்களுக்கு உயிர்பிக்க வேண்டும் என்று ஒரு பெண் வேண்டியதாகவும். அந்த பெண்ணின் பக்திக்கு இணங்கி அவளுடைய சகோதரர்களுக்கு நாகபஞ்சமி அன்று உயிர் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நாளை பற்றி சதுவேத சிந்தாமணி என்னும் நூலில் கூறப்பட்டுள்ளது.

    ×