search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Citroen Basalt"

    • அக்டோபர் 31-ம் தேதி வரை புக் செய்பவர்களுக்கு இந்த விலையில் கிடைக்கும்.
    • டாடா கர்வ், ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், ஹோண்டா எலிவேட் ஆகியவற்றிற்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சிட்ரோன் பசால்ட் சொகுசு கார் அதிகாரப்பூர்வமாக இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றது. யாருமே எதிர்பாராத வகையில் ரூ.7.99 லட்சம் என விலை நிர்ணயம் செய்துள்ளது சிட்ரோன் நிறுவனம். ஏற்கனவே இருக்கும் ஷோரூமில் மட்டுமே இந்த விலைக்கு கிடைக்கும் குறிப்பிடத்தகுந்தது. அக்டோபர் 31-ம் தேதி வரைதான் இந்த விலைக்கு கிடைக்கும்.

    சாய்வான மேற்கூரை, மூன்று அடுக்குகளாக காட்சியளிக்கும் முகப்பு பகுதி, கவர்ச்சியான எல்இடி ஹெட்லைட் மற்றும் டிஆர்எல் உள்ளிட்டவை இந்த காரில் வழங்கப்பட்டு உள்ளன. இதுதவிர ஒரு ஹாலோஜன் பனி மின் விளக்கும் இந்த காரில் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இவைகள் இந்த காரின் முன் பக்கத்திற்கு அழகு சேர்க்கும் விதமாக உள்ளன.

    டைமண்ட் கட் அலாய் வீல், பிளாஸ்டிக் கிளாடிங், எல்இடி டெயில் லைட், இரண்டு வண்ணங்கள் கொண்ட ரியர் பம்பர் ஆகியவையும் சேர்க்கப்பட்டு இருக்கின்றன.

    ப்ளஷ் (Plush) வகை இருக்கை இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது. 3 படிகளாக அட்ஜெஸ்ட் செய்துக் கொள்ளக் கூடிய இருக்கையே பின் பக்கத்தில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதன் வாயிலாக, உயரமான பயணிகள் தங்களின் தேவைக்கேற்ப இருக்கையை அட்ஜெஸ்ட் செய்துக் கொள்ள முடியும். இதுதவிர, பின் பக்கத்திற்கு என தனி ஏசி துவாரங்கள் உள்ளன.

    டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், ஆட்டோ க்ளைமேட் கன்ட்ரோல் உள்ளிட்டவையும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

    கியர்பாக்ஸை பொருத்த வரை 5 ஸ்பீடு மேனுவல் மட்டுமே இந்த மோட்டாருடன் வழங்கப்படுகின்றது. ஆனால், 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் மோட்டார் ஆப்ஷனில் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் என இரண்டு வகையான கியர்பாக்ஸ ஆப்ஷனும் வழங்கப்படுகின்றது.

    விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் டாடா கர்வ்-க்கு இது மிகப்பெரிய போட்டியாக இருக்கும். இதுதவிர, ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், ஹோண்டா எலிவேட், மற்றும் மாருதி கிராண்ட் விட்டாரா உள்ளிட்ட கார் மாடல்களுக்கும் இது போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • இன்டீரியர் C3 ஏர்கிராஸில் உள்ளதை போன்றே காட்சியளிக்கிறது.
    • சி3 ஏர்கிராஸ் போலல்லாமல், பாசால்ட் தரமான 1.2 பெட்ரோல் மற்றும் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் வழங்கப்படுகிறது.

    சிட்ரோயன் பாசால்ட் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னதாக சில விவரங்கள் வெளியாகி உள்ளது. அதன் விவரம் வருமாறு;-

    இந்தியாவில் இது சிட்ரோயனின் நான்காவது கார். இது C-Cubed திட்டத்தில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் இருவிதமான பெட்ரோல் எஞ்சின் விருப்பங்களில் வழங்கப்படும்.

    உட்புறங்கள் மற்றும் அம்சங்கள்:-

    இப்போது முதல் முறையாக, சிட்ரோயன் வாகனத்தின் உட்புற தோற்றம் வெளியாகியுள்ளது. கேபின் ஒரு பழுப்பு மற்றும் கருப்பு நிறத்தில் பினிஷ் செய்யப்பட்டுள்ளது. இதன் இன்டீரியர் C3 ஏர்கிராஸில் உள்ளதை போன்றே காட்சியளிக்கிறது.

    இருப்பினும், பின்புற ஏசி வென்ட்களுடன் கூடிய காலநிலை கட்டுப்பாடு, இரண்டாவது வரிசையை அட்ஜெட் செய்யும் வசதி, முழு எல்இடி ஹெட்லேம்ப்கள், இரண்டு வரிசைகளுக்கும் ஆர்ம்ரெஸ்ட்கள் மற்றும் ஆறு ஏர்பேக்குகள் ஆகியவற்றை உள்ளடக்கி உள்ளது.

    சன்ரூஃப், சுற்றுப்புற விளக்குகள், காற்றோட்டமான இருக்கைகள் மற்றும் பட்டன்கள் போன்ற அம்சங்கள் இந்த காரில் இடம்பெறவில்லை. பூட் ஸ்பேஸ் 470-லிட்டராக உள்ளது, அதே நேரத்தில் வீல்பேஸ் 2.64-மீட்டராக உள்ளது, இது செக்மென்ட்டில் உள்ள பெரிய கார்களில் ஒன்றாகும்.


    பவர்டிரெய்ன் விருப்பங்கள்:-

    சி3 ஏர்கிராஸ் போலல்லாமல், பாசால்ட் தரமான 1.2 பெட்ரோல் மற்றும் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் வழங்கப்படுகிறது.

    இதன் NA யூனிட் 82bhp மற்றும் 155Nm உற்பத்தி செய்கிறது மற்றும் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் உடன் வழங்கப்படுகிறது.

    டர்போ பெட்ரோல் யூனிட் 109 bhp மற்றும் 190 nm டார்க் திறனை வெளிப்படுத்துகிறது.

    நிறங்கள் மற்றும் வடிவமைப்பு சிறப்பம்சங்கள்:-

    பாசால்ட் ஆறு வெவ்வேறு வண்ணங்களில் வழங்கப்படும் மற்றும் மாறுபாட்டைப் பொறுத்து அலாய் வீல்களுக்கு இரண்டு வெவ்வேறு வடிவமைப்புகளை கொண்டிருக்கும்.

    வழக்கமான கதவு கைப்பிடிகள், ஃபாஸ்ட்பேக் ரூஃப்லைன், வீல் ஆர்ச்களில் பிளாக் கிளாடிங் மற்றும் முழு LED லைட் பேக்கேஜ் ஆகியவை இதன் மற்ற சிறப்பம்சங்கள் ஆகும்.

    போட்டி மற்றும் துவக்கம்

    பசால்ட் இந்த ஆண்டின் பிற்பகுதியில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது சிட்ரோயனின் புதிய பட்ஜெட் ரக ஃபிளாக்ஷிப் மாடல் ஆகும்.

    இது ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், எம்ஜி ஆஸ்டர் மற்றும் ஹோண்டா எலிவேட் போன்ற கார்களுக்கு போட்டியாக இருக்கும்.

    இந்த காரில் உள்ள புது அம்சங்கள் இந்நிறுவனத்தின் மற்ற 3 சிட்ரோயன் பட்ஜெட் கார்களுக்கும் வழங்கப்பட இருக்கிறது.

    • டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வரும் மாதங்களில் அறிமுகப்படுத்தும் பல கார்களில் கர்வ் ஐசி எஞ்சின் வேரியண்ட் இடம்பெற்றுள்ளது.
    • மெர்சிடிஸ் பென்ஸ் வருகிற 8-ந்தேதி இரண்டு புதிய மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த உள்ளது.

    இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் நாளை தொடங்க உள்ள ஆகஸ்ட் மாதம்த்தில் பட்ஜெட் மற்றும் சொகுசு ரகங்களை சேர்ந்த பலவித கார்கள் வெளிவர உள்ளன. அவை குறித்து பார்ப்போம்...

    நிசான் எக்ஸ்-டிரெயில்

    2024 நிசான் எக்ஸ்-டிரெயில் 1.5-லிட்டர், மூன்று சிலிண்டர், டர்போ-பெட்ரோல் எஞ்சினுடன் கிடைக்கும். இந்த எஞ்சின் 161 ஹெச்பி பவர் மற்றும் 300 நியூட்டன் மீட்டர் டார்க் வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் சிவிடி (CVT) கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இந்த கார்ல் லிட்டருக்கு 13.7 கிமீ மைலேஜ் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    டாடா கர்வ் ICE

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வரும் மாதங்களில் அறிமுகப்படுத்தும் பல கார்களில் கர்வ் ஐசி எஞ்சின் வேரியண்ட் இடம்பெற்றுள்ளது. வருகிற 7-ந்தேதி அறிமுகமாக உள்ள கர்வ் ICE பல்வேறு அம்சங்களைப் பெற்றுள்ளது. டிராஸ்மிஷன் ஆப்ஷன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் DCT யூனிட் வழங்கப்படுகிறது. இந்த கார் 1.2லிட்டர் டர்போ-பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களை கொண்டிருக்கலாம்.

    டாடா கர்வ் EV

    டாடா கர்வ் எலெக்ட்ரிக் சில மாற்றங்களுடன் ICE மாடலை தவிர்த்து தனித்து நிற்கும். இதில் ADAS சூட், பனோரமிக் சன்ரூஃப், 12.3-இன்ச் டச்ஸ்கிரீன் யூனிட், ஏசி கன்ட்ரோல்களுக்கான டச்-அடிப்படையிலான பட்டன்கள், இயங்கும் டெயில்கேட் மற்றும் பல அம்சங்கள் அடங்கும். இந்த கார் ஒருமுறை முழு சார்ஜில் 600 கிலோ மீட்டர்கள் வரை செல்லும் என்று கூறப்படுகிறது.

    புதிய மெர்சிடிஸ் பென்ஸ் கேப்ரியோலெட் (Cabriolet)

    மெர்சிடிஸ் பென்ஸ் வருகிற 8-ந்தேதி இரண்டு புதிய மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த உள்ளது. CBU முறையில் இந்தியா கொண்டுவரப்படும் இரண்டு கார்களில் ஒன்று முற்றிலும் புதிய கேப்ரியோலெட் ஆகும். இது நான்கு இருக்கைகள் கொண்ட முதல் கன்வெர்ட்டிபிள் காராக அமைக்கப்பட்டுள்ளது.

    இது மெர்சிடிஸ் பென்ஸ்-இன் டாப் எண்ட் வெஹிக்கிள் (TEV) பிரிவின் ஒரு பகுதியாக இருக்கும். இந்த மாடலில் 3.0-லிட்டர், 6 சிலிண்டர்கள் கொண்ட டர்போ-பெட்ரோல் எஞ்சின் வழங்கப்படுகிறது. இந்த எஞ்சின் 375 ஹெச்பி பவர், 500 நியூட்டன் மீட்டர் டார்க் வெளிப்படுத்தும். இத்துடன் 9 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

    மெர்சிடெஸ் AMG GLC 43 4மேடிக் கூபே ஃபேஸ்லிஃப்ட்

    புது மாற்றங்கள் செய்யப்பட்ட GLC மாடல் ஆகஸ்ட் மாதம் இரண்டாவது வாரத்தில் வெளியாக உள்ளது. 2023 செப்டம்பரில் வெளியிடப்பட்ட GLC ஃபேஸ்லிஃப்ட், உட்புறம் மற்றும் வெளிப்புறத்தில் சில மாற்றங்களை பெறுகிறது.

    இந்த கார் 3.0-லிட்டர், 6-சிலிண்டர்கள் கொண்ட டர்போ-பெட்ரோல் எஞ்சின், 2.0-லிட்டர், 4-சிலிண்டர்கள் கொண்ட எஞ்சின் மற்றும் மைல்டு ஹைப்ரிட் மோட்டார் வழங்கப்படுகிறது. இந்த யூனிட்கள் 362 ஹெச்பி பவர், 520 நியூட்டன் மீட்டரில் இருந்து 421 ஹெச்பி பவர், 500 நியூட்டன் மீட்டர் டார்க் வரை அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.

    லம்போர்கினி உருஸ் SE

    லம்போர்கினி பிராண்டின் புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடல் ஆகஸ்ட் 9-ந்தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. உருஸ் SE மாடலில் 4.0-லிட்டர் ட்வின்-டர்போ V8 எஞ்சின் மற்றும் 25.9kWh பேட்டரி பேக் ஒரு மின்சார மோட்டாருடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த யூனிட் 800 ஹெச்பி பவர் மற்றும் 950 நியூட்டன் மீட்டர் டார்க் வெளிப்படுத்தும்.

    மஹிந்திரா தார் ரோக்ஸ்

    இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கார்களில் ஒன்று மஹிந்திரா தார் 5-டோர் மாடல். இப்போது இந்த கார் "தார் ரோக்ஸ்" என்று அழைக்கப்படுகிறது. இதன் விலை ஆகஸ்ட் 15 அன்று அறிவிக்கப்படுகிறது. மாருதி ஜிம்னி போன்றவற்றுக்கு போட்டியாக அமைக்கப்பட்டுள்ள தார் ரோக்ஸ், ஹூண்டாய் க்ரெட்டா, மாருதி கிராண்ட் விட்டாரா, எம்ஜி ஆஸ்டர், கியா செல்டோஸ், ஹோண்டா எலிவேட் மற்றும் பல நடுத்தர அளவிலான எஸ்யூவிகளுக்கு போட்டியாக அமையும்.

    2024 தார் ரோக்ஸ்ஆனது பனோரமிக் சன்ரூஃப், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், பின்புற ஏசி வென்ட்கள், ADAS சூட் மற்றும் வென்டிலேட்டெட் முன்புற இருக்கைகள் என பல புதிய அம்சங்களைப் பெற்றுள்ளது. இந்த கார் 2.0-லிட்டர் டர்போ-பெட்ரோல் மற்றும் 2.2-லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது. இத்துடன் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்கள் வழங்கப்படுகிறது.

    சிட்ரோயன் பசால்ட்

    ஆகஸ்ட் 2-ந்தேதி சிட்ரோயன் தனது பாசால்ட் ப்ரோடக்ஷன் வெர்ஷன் விவரங்களை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருக்கிறது. மேலும் இந்த காரின் விலையை மாத இறுதிக்குள் வெளியிடலாம். இந்த கார் CMP மாடுலர் பிளாட்ஃபார்ம் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கும் இந்த கூபே SUV ஆனது C3 ஏர்கிராசை சார்ந்து உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    புதிய பாசால்ட்டின் குறிப்பிடத்தக்க அம்சங்களாக ஸ்பிலிட் ஹெட்லேம்ப்கள், ஸ்லோப்பிங் ரூஃப்லைன், டூயல்-டோன் அலாய் வீல்கள், புரொஜெக்டர் ஹெட்லைட்கள், டூயல்-டோன் இன்டீரியர் ஆகியவை அடங்கும்.

    ×