search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cm manohar parrikar"

    கோவா முதல் மந்திரி மனோகர் பாரிக்கர் மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். #GoaCM #ManoharParrikar #RIPManoharParrikar
    புதுடெல்லி :

    கோவா முதல் மந்திரி மனோகர் பாரிக்கர் இன்று இரவு காலமானார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    இதுதொடர்பாக, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் டுவிட்டரில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், மனோகர் பாரிக்கர் மறைவு செய்தி மிகுந்த வருத்தத்தை அளித்துள்ளது. பொதுவாழ்க்கையில் மனோகர் பாரிக்கரின் சேவையை நாட்டு மக்கள் என்றும் மறக்க மாட்டார்கள் என பதிவிட்டுள்ளார்.



    பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், மனோகர் பாரிக்கர் ஈடு இணையில்லாத தலைவர். உண்மையான தேசபக்தர். சிறந்த நிர்வாகி. அனைவராலும் பாராட்டப் பெற்றவர். நாட்டிற்கு அவர் ஆற்றிய பணிகள் பல தலைமுறையினரின் நினைவில் இருக்கும். அவரது மறைவு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

    இதேபோல், காங்கிரஸ் தலைவர் ராகுல் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தனது நோயை எதிர்த்து ஒரு ஆண்டுக்கும் மேலாக போராடிய கோவா முதல்வர் மனோகர் பாரிக்கரின் மறைவு வருத்தமளிக்கிறது. கட்சி எல்லைகளை தாண்டி அவருக்கு அனைவரும் மரியாதை அளித்தனர். அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். #GoaCM #ManoharParrikar #RIPManoharParrikar
    முன்னாள் ராணுவ அமைச்சரும் கோவா முதல் மந்திரியுமான மனோகர் பாரிக்கர் மறைவுக்கு மத்திய அமைச்சரவை சார்பில் நாளை இரங்கல் கூட்டம் நடைபெறுகிறது. #GoaCM #ManoharParrikar #RIPManoharParrikar
    புதுடெல்லி;

    முன்னாள் ராணுவ மந்திரியும் கோவா முதல்-மந்திரியுமான மனோகர் பாரிக்கர் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டார். கோவா மற்றும் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். அதன்பிறகு, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

    அவருக்கு கணையத்தில் புற்றுநோய் பாதித்திருப்பதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதற்காக சிகிச்சை பெற்றவாறு தனது இல்லத்தில் இருந்தபடி முதல் மந்திரி பணிகளை கவனித்து வந்தார் மனோகர் பாரிக்கர்,

    இதற்கிடையே, இன்று மாலை உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால் மனோகர் பாரிக்கர் சிகிச்சை பலனின்றி காலமானார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

    இந்நிலையில், முன்னாள் ராணுவ அமைச்சரும் கோவா முதல் மந்திரியுமான மனோகர் பாரிக்கர் மறைவுக்கு மத்திய அமைச்சரவை சார்பில் நாளை காலை 11 மணியளவில் இரங்கல் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
     
    மேலும், மனோகர் பாரிக்கர் மறைவையொட்டி நாளை துக்க தினமாக அனுசரிக்கப்படும் என்றும், தேசிய தலைநகரம் மற்றும் மாநில தலைநகரங்களில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. #GoaCM #ManoharParrikar #RIPManoharParrikar
    உடல்நலக் குறைவால் கோவா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதல் மந்திரி மனோகர் பாரிக்கர் இன்று மாலை டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினார். #ManoharParrikar
    பனாஜி:

    கோவா முதல் மந்திரி மனோகர் பாரிக்கர் கணைய அழற்சி நோயால் அவதிப்பட்டு வருகிறார். இதற்காக, வெளிநாட்டில் சிகிச்சை பெற்ற மனோகர் பாரிக்கர், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையிலும் தங்கி சிகிச்சை எடுத்துக்கொண்டார்.

    இதற்கிடையே, மனோகர் பாரிக்கர் மீண்டும் உடல் நலக்குறைவால் கோவாவில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில், கோவா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதல் மந்திரி மனோகர் பாரிக்கர் இன்று மாலை டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினார்.

    அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளது. தொடர்ந்து அவரது வீட்டில் தேவையான சிகிச்சைகள் அளிக்கப்படும் என கோவா முதல் மந்திரி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. #ManoharParrikar
    கோவா முதல்-மந்திரி மனோகர் பாரிக்கர் டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து கோவா திரும்பினார் என முதல் மந்திரி அலுவலகம் தெரிவித்துள்ளது. #ManoharParrikar
    பனாஜி:

    கோவா மாநிலத்தில் முதல் மந்திரி மனோகர் பாரிக்கர் தலைமையில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடந்துவருகிறது. அந்த கூட்டணியில் கோவா பார்வர்டு கட்சி, மகாராஷ்டிராவாடி கோமந்தக் கட்சி மற்றும் மூன்று சுயேட்சைகள் முக்கிய அங்கம் வகித்து வருகின்றனர்.

    கடந்த ஆண்டு முதல்-மந்திரி மனோகர் பாரிக்கருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மருத்துவ பரிசோதனையில் அவருக்கு மீள முடியாத நோய் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து மனோகர் பாரிக்கர் அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று திரும்பினார். இடையிடையே உடல் நலக்குறைவு ஏற்பட்டபோது அவர் டெல்லி, மும்பை, பனாஜியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    கடந்த வாரம் அவர் உடல் நலம் மேலும் பாதிக்கப்பட்டு மூக்கில் ‘டியூப்’ பொருத்தப்பட்ட நிலையில் அவர் கோவா சட்டசபைக்கு வந்து பட்ஜெட்டை தாக்கல் செய்தார். கடந்த 31-ம் தேதி முதல்-மந்திரி மனோகர் பாரிக்கரின் உடல் நிலையில் மேலும் பாதிப்பு ஏற்பட்டதால் டெல்லி அழைத்து செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.

    அங்கு அவருக்கு டாக்டர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்தது. அவரை பா.ஜ.க. மூத்த தலைவர்கள் சிலர் சந்தித்து உடல் நலம் விசாரித்தனர்.

    இந்நிலையில், கோவா முதல்-மந்திரி மனோகர் பாரிக்கர் டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து கோவா திரும்பினார் என முதல் மந்திரி அலுவலகம் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து முதல் மந்திரி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில், திட்டமிட்டபடி சிகிச்சை முடிந்து டெல்லியில் இருந்து முதல் மந்திரி மனோகர் பாரிக்கர் இன்று கோவா திரும்பினார் என தெரிவித்துள்ளது. #ManoharParrikar
    அமெரிக்காவில் தனது சிகிச்சையை முடித்துக்கொண்டு முதல் மந்திரி மனோகர் பாரிக்கர் இன்று கோவா திரும்பினார். #ManoharParrikar #ReturnIndia
    பனாஜி:

    கோவா முதல் மந்திரியாக உள்ள மனோகர் பாரிக்கர் கணைய அழற்சி நோயால் பாதிக்கப்பட்டார். இதற்காக கடந்த மார்ச் மாதம் அமெரிக்காவுக்கு சிகிச்சைக்கு சென்றார். 3 மாதத்துக்கு பிறகு ஜூன் 14-ல் அவர் இந்தியா திரும்பினார்.

    அதன்பின்னர், மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மனோகர் பாரிக்கர் கடந்த மாதம் 29-ம் தேதி மேல் சிகிச்சைக்காக மீண்டும் அமெரிக்கா சென்றார்.

    இந்நிலையில், அமெரிக்காவில் தனது சிகிச்சையை முடித்துக்கொண்டு முதல் மந்திரி மனோகர் பாரிக்கர் இன்று கோவா திரும்பினார்.

    அமெரிக்காவில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக மனோகர் பாரிக்கருக்கு மேல் சிகிச்சை அளிக்கப்பட்டு அளிக்கப்பட்டது.
     
    தற்போது அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை நிறைவுற்றுள்ளது. இதையடுத்து, மனோகர் பாரிக்கர் இன்று மாலை நாடு திரும்பினார். அமெரிக்காவில் இருந்து விமானம் மூலம் வந்த மனோகர் பாரிக்கர் கோவா விமான நிலையம் வந்தார். அங்கு செய்தியாளர்களை பார்ப்பதை தவிர்த்த அவர் நேராக வீட்டுக்கு சென்றார். #ManoharParrikar #ReturnIndia
    ×