என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "collector santha"
பெரம்பலூர்:
பெரம்பலூர் பாராளு மன்ற தொகுதிக்குட்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் நடத்தும் உதவி தேர்தல் அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
ஆலோசனை கூட்டத்திற்கு பெரம்பலூர் மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியுமான சாந்தா தலைமை தாங்கினார். கூட்டத்தில் கலெக்டர் சாந்தா பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட குளித்தலை, லால்குடி, மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர் (தனி) மற்றும் பெரம்பலூர் (தனி) ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளின் தேர்தல் முன்னேற்பாடுகள், நகர்புறங்களிலும், கிராமபுறங்களிலும் பொது மற்றும் தனியார் சுவர்களில் வாக்காளர்களை கவரும் விதத்தில் தற்போது செய்யப்பட்டுள்ள அரசியல் கட்சி விளம்பரங்கள், கொடி கம்பங்கள் உள்ளிட்ட வற்றை அகற்றுதல், தேர்தல் விதிமுறைகள் கண் காணித்திடும் பொருட்டும், தேர்தல் நடத்தை விதிமீறல்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளவும் அமைக்கப்பட்டுள்ள பறக்கும்படை குழு, நிலையான கண்காணிப்புக்குழு மற்றும் வீடியோ கண்காணிப்புக் குழுக்களின் செயல்பாடுகள் குறித்து அந்தந்த சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுடன் கேட்டறிந்தார்.
மேலும் கலெக்டர் சாந்தா பதற்றமான மற்றும் நெருக்கடியான வாக்குச்சாவடி மையங்களின் விபரம், அனைத்து வாக்குசாவடி மையங்களிலும் அமைக்கப்பட்ட உறுதி செய்யப்பட்ட குறைந்தபட்ச அடிப்படை வசதிகள், வாக்குச் சாவடி மையங்களில், மைய எண்ணை குறியிடுதல், அனைத்து சட்டமன்ற தொகுதிகளின் அச்சிடப்பட்ட வாக்காளர் பட்டியலை சமர்ப்பித்தல், தேர்தல் தொடர்பான மண்டல அளவிலான அலுவலர்களை நியமித்தல் மற்றும் தேர்தல் நாளில் வாக்குச்சாவடி மையத்தில் தேர்தல் பணிக்காக ஈடுபடுத்தப்படும் அலுவலர்களை நியமித்தல், அலுவலர்களுக்கு பயிற்சி அளித்தல் காப்பறையில் வைக்கப்பட்டுள்ள வாக்குபதிவு எந்திரங்களின் விபரம் குறித்தும் கேட்டறிந்தார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அழகிரிசாமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதிவியாளர் (பொது) ராஜராஜன், அனைத்து சட்டமன்ற தொகுதிகளின் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்ட எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நாளை நடைபெறுகிறது. இதுதொடர்பாக பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
எரிவாயு உருளைகள் மறு நிரப்பு வழங்குவதில் காணப்படும் குறைபாடுகள், நுகர்வோர்கள் பதிவு செய்த குறைகளின்மீது நடவடிக்கை எடுப்பதில் எரிவாயு முகவர்களின் மெத்தனப்போக்கு தொடர்பாக வரப்பெறும் புகார்களை பெற்று உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. எண்ணெய் நிறுவனங்களின் விதிமுறைகளுக்குட்பட்டு எரிவாயு உருளை விநியோகத்தை சீர்படுத்துவது தொடர்பாக, எரிவாயு நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நாளை (18.05.2018) பிற்பகல் 4 மணியளவில் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில் எரிவாயு முகவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட எண்ணெய் நிறுவன விற்பனை அலுவலர்கள் கலந்து கொள்ள உள்ளார்கள். எரிவாயு நுகர்வோர்கள் எரிவாயு சம்பந்தமாக குறைகள் இருப்பின், மேற்படி கூட்டத்தில் கலந்து கொண்டு தெரிவிக்கலாம். எரிவாயு விநியோகம் தொடர்பாக காணப்படும் குறைபாடுகள் களைவது தொடர்பாக ஆலோசனைகள் வழங்கலாம்.
இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்