என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "commercial cylinder rate"
- நவம்பர் 1-ந்தேதி 101.50 ரூபாய் உயர்த்தப்பட்டு, 16-ந்தேதி 57 ரூபாய் குறைக்கப்பட்டது.
- 1942 ரூபாயில் இருந்து தற்போது 1968.50 ரூபாயாக அதிகரித்துள்ளது.
எண்ணெய் நிறுவனங்கள் மாதந்தோறும் சர்வசே சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, குறைவுக்கு ஏற்ப பெட்ரோல், டீசல், எரிவாயு சிலிண்டர் விலைகளை மாறியமைக்கும். அந்த வகையில் டிசம்பர் 1-ந்தேதியான இன்று விலைகளை மாற்றியமைத்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையிலும் மாற்றம் செய்யப்படவில்லை. ஏற்கனவே விற்பனை செய்யப்பட்ட 918 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஆனால் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலையை உயர்த்தியுள்ளது. முன்னதாக 1942 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது 26.50 ரூபாய் உயர்த்தப்பட்டு 1968.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் இந்த விலைக்கு விற்பனை செய்யப்படும் நிலையில் டெல்லி, மும்பை, கொல்கத்தா போன்ற நகரங்களில் விலையில் சற்று ஏற்றம் இறக்கம் காணப்படும்.
முன்னதாக, நவம்பர் 1-ந்தேதி விலை மாற்றியமைக்கப்பட்டு, சிலிண்டர் ஒன்றுக்கு ரூ. 101.50 ரூபாய் உயர்த்தப்பட்டு, இதனால் சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் 1999.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. பின்னர் 16-ந்தேதி 57 ரூபாய் குறைக்கப்பட்டு 1942 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.