என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » competent officers
நீங்கள் தேடியது "competent officers"
புதிய சட்டத் திருத்தத்தின்படி குழந்தைகளை தத்து கொடுக்கும் அதிகாரம் மாவட்ட கலெக்டர் அளிப்பார் என பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மத்திய மந்திரி மேனகா காந்தி தெரிவித்துள்ளார். #ManekaGandhi #Adoption
புதுடெல்லி:
பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மத்திய மந்திரி மேனகா காந்தி டெல்லியில் நடந்த அனைத்து மாநில பெண்கள் நலத்துறை மந்திரிகள் மாநாட்டில் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், ‘‘குழந்தைகள் நீதி சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வருவதற்கு முடிவு செய்துள்ளது. தற்போது குழந்தைகளை தத்துக் கொடுப்பதற்கான ஒப்புதல் கோர்ட்டுகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. புதிய சட்டத் திருத்தத்தின்படி இனி இதற்கான ஒப்புதலை மாவட்ட கலெக்டர் அளிப்பார். நாட்டில் உள்ள அனைத்து குழந்தைகள் பாதுகாப்பு மையங்களும் அடுத்த ஒருமாதத்துக்குள் தத்துக் கொடுப்பதற்கான தலைமை அமைப்பிடம் தங்களை பதிவு செய்து கொள்ளவேண்டும்’’ என்று தெரிவித்தார்.
அண்மையில் ஜார்கண்ட் மாநிலத்தின் ராஞ்சி நகரில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு மையம் ஒன்றில் சட்டவிரோதமாக குழந்தைகள் தத்து கொடுப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து, அங்கு போலீசார் நடத்திய சோதனையில் ஒரு குழந்தை ரூ.1.20 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டது, தெரிய வந்தது. நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை தொடர்ந்து மத்திய அரசு இந்த முடிவுக்கு வந்திருப்பதாக தெரிகிறது. ManekaGandhi #Adoption #tamilnews

×

X