என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "confiscation case"
- பாஜக தமிழ்நாடு அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகத்திற்கு சிபிசிஐடி போலீசார் சம்மன்.
- மனு மீதான விசாரணை இன்று நீதிபதி சி.சரவணன் முன்னிலையில் வருகிறது.
தாம்பரம் ரெயில் நிலையத்தில் 4 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என தமிழக பாஜக அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
பாஜக தமிழ்நாடு அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகத்திற்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பிய நிலையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
எந்தக் காரணமும் இல்லாமல் அனுப்பப்பட்ட சம்மனை ரத்து செய்ய வேண்டும் என கேசவ விநாயகம் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், பறிமுதல் செய்யப்பட்ட பணத்துக்கும், எனக்கும எந்த தொடர்பும் இல்லை எனவும் கேசவ விநாயநகம் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், இந்த மனு மீதான விசாரணை இன்று நீதிபதி சி.சரவணன் முன்னிலையில் வருகிறது.
- 15 பேரிடம் விசாரணை நடத்தி, 350 பக்க விசாரணை அறிக்கையை தயார்.
- 4 பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னை தாம்பரம் ரெயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில் ஆவணங்கள் நேற்று ஒப்படைக்கப்பட்டது.
எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில், டிஎஸ்பி சசிதரன் முன்னிலையில், விசாரணை அதிகாரியான சிபிசிஐடி காவல் ஆய்வாளர் லோகநாதனிடம் ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டது.
இந்த வழக்கில் தாம்பரம் போலீசார் இதுவரை 15 பேரிடம் விசாரணை நடத்தி, 350 பக்க விசாரணை அறிக்கையை தயார் செய்தனர்.
இந்நிலையில், இந்த விவகாரத்தில், சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
வழக்கு தொடர்பான ஆவணங்களை தாம்பரம் போலீசார் நேற்று சிபிசிஐடியிடம் ஒப்படைத்த நிலையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் 4 பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட பணம் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமானது என கைதானவர்கள் வாக்குமூலம் அளித்திருந்தனர்.
ஆனால், கைப்பற்றப்பட்ட பணத்திற்கும், தனக்கும் தொடர்பில்லை என நயினார் நாகேந்திரன் விளக்கம் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்