என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Congress struggle"
- மத்திய அரசு இளைஞர்களை ராணுவத்தில் சேர்க்க அக்னிபத் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
- இதற்கு வடமாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
புதுச்சேரி:
மத்திய அரசு இளைஞர்களை ராணுவத்தில் சேர்க்க அக்னிபத் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
அக்னிபத் திட்டத்தின் கீழ் 4 ஆண்டு பணி முடிக்கும் இளைஞர்களில் 25 சதவீதத்தினர் தவிர்த்து மற்றவர்கள் ராணுவத்தி லிருந்து வெளியனுப்பப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கு வடமாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அரசியல் கட்சிகளும் இளைஞர்களின் வேலைக்கு உத்திரவாதம் இல்லாத அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. காங்கிரஸ் சார்பில் அக்னிபத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டம் நடந்தது.
அதுபோல் புதுவை மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் 16 இடங்களில் தர்ணா போராட்டம் நடந்தது. சாரம் அவ்வை திடலில் நடந்த போராட்டத்துக்கு வைத்திலிங்கம் எம்.பி. தலைமை வகித்தார். போராட்டத்தில் முன்னாள் முதல்- அமைச்சர் நாராயணசாமி, மாநில தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் வாழ்த்தி பேசினர்.
போராட்டத்தில் முன்னாள் கவுன்சிலர் தமிழரசி, ராஜா, வினோத் மற்றும் காங்கிரசார் பங்கேற்றனர்.
ஜென்மராக்கினி கோவில் அருகே நடந்த போராட் டத்துக்கு காங்கிரஸ் சீனியர் துணைத்தலைவர் தேவதாஸ் தலைமை வகித்தார். காங்கிரஸ் நிர்வாகிகள் மருதுபாண்டியன், வேல்முருகன், பிரதீஷ்இருதயராஜ், திருமுருகன், ராமலிங்கம், டாக்டர் விஜயகுமாரி, சார்லஸ், ஜோசப், வக்கீல் சுரேஷ், ஜெரால்டு உட்பட பலர் பங்கேற்றனர்.
அண்ணா சிலை அருகே நடந்த போராட்டத்துக்கு முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் இளையராஜா தலைமை வகித்தார். போராட்டத்தில் லட்சுமணன், குமரன், ராஜ்குமார், செல்வம், அய்யப்பன், ராமலிங்கம், சீனிவாசன், சக்திவேல், சுகுமார் ஆகியோர் பங்கேற்றனர்.
லாஸ்பேட்டை உழவர்சந்தை அருகே நடந்த போராட்டத்திற்கு வைத்தியநாதன் எம்.எல்.ஏ., தலைமை வகித்தார். போராட்டத்தில் நந்தாகலைவாணன், அய்யப்பன் மற்றும் திரளான காங்கிரசார் பங்கேற்றனர்.
இதுபோல் மத்திய அரசு கொண்டு வந்துள்ள அக்னிபத் திட்டத்தை எதிர்த்து அரியாங்குப்பம் வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் சத்யாகிரக போராட்டம் அரியாங்குப்பம் பிரம்மன் சதுக்கம் சிலை அருகே நடந்தது. போராட்டத்துக்கு மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் சங்கர் தலைமை தாங்கினார். வட்டார காங்கிரஸ் தலைவர்கள் அய்யப்பன், சிவராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இப்போராட்டத்தில் மாநில செயலாளர் சூசைராஜ், விளையாட்டு பிரிவு தலைவர் ராஜாராம், பி.சி.சி. அன்புமணி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மேலும் புதிய பஸ்நிலையம், முதலியார்பேட்டை தபால் நிலையம், தவளகுப்பம் நான்குமுனை சந்திப்பு, கன்னியக்கோவில் சந்திப்பு, முத்தியால்பேட்டை மணிக்கூண்டு, ராஜீவ்காந்தி சதுக்கம், வில்லியனூர் கொம்யூன் அலுவலகம், பத்துக்கண்ணு சந்திப்பு, மதகடிப்பட்டு சந்திப்பு, திருக்கனூர் கடைவீதி, நெல்லித்தோப்பு சுப்பையா சிலை என மொத்தம் 16 இடங்களில் போராட்டம் நடந்தது.
போராட்டத்தில், அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு கைவிட வலியுறுத்தி பதாகைகளை ஏந்தியிருந்தனர். போராட்டம் நடந்த இடங்களுக்கு முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, மாநில தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் ஆகியோர் சென்று வாழ்த்தி பேசினர்.
கேரள மாநிலம் சொர்னூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் சசி.
கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த இவர் மீது அந்த கட்சியின் இளைஞர் அமைப்பான இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்த பெண் நிர்வாகி ஒருவர் கட்சி மேலிடத்தில் பாலியல் புகார் கொடுத்துள்ளார்.
இந்த புகார் பற்றி அவர், மேலிட தலைவரான சீதாராம் யெச்சூரிக்கு விரிவாக கடிதமும் எழுதி உள்ளார். இதை தொடர்ந்து கேரள மாநில கம்யூனிஸ்டு கட்சி மேலிடத்தை இதுபற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி சீதாராம் யெச்சூரி உத்தரவிட்டுள்ளார். எம்.எல்.ஏ. மீதான புகார் பற்றி அந்த கட்சியின் மாநில கமிட்டியும் விசாரணை நடத்தி வருகிறது.
அதேசமயம் தன் மீதான புகாரை சசி எம்.எல்.ஏ. மறுத்துள்ளார். ஒரு கம்யூனிஸ்டுகாரன் என்ற முறையில் கட்சி நடத்தும் விசாரணையை சந்திக்க தான் தயாராக இருப்பதாகவும் அவர் கூறி உள்ளார்.
இந்த புகாரை வைத்து தனது அரசியல் வாழ்வை முடக்கி வீட்டில் உட்கார வைத்து விடலாம் என்று யாராவது நினைத்தால் அது நடக்காது என்றும் சசி எம்.எல்.ஏ. கூறினார்.
சசி எம்.எல்.ஏ. மீது பாலியல் புகார் கூறிய பெண் நிர்வாகி, அதுபற்றி போலீசில் புகார் எதுவும் செய்யவில்லை. அதேசமயம் தேசிய மகளிர் கமிஷன் இதில் தலையிட்டு சசி எம்.எல்.ஏ. மீதான புகார் பற்றி விசாரணை நடத்தும்படி கேரள மாநில டி.ஜி.பி.யை கேட்டுக் கொண்டுள்ளது.
இதனால் அடுத்தக்கட்ட நடவடிக்கை பற்றி சட்ட நிபுணர்களுடன் டி.ஜி.பி. ஆலோசித்து வருகிறார். அதே சமயம் சசி எம்.எல்.ஏ.வுக்கு எதிராக கேரளாவில் எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
அவரை கைது செய்ய வேண்டுமென்று தொடர் போராட்டம் நடந்து வருகிறது. இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் நேற்று டி.ஜி.பி. அலுவலகத்திற்கு பேரணியாக சென்று முற்றுகையிட முயன்றனர். தடுப்பு வேலிகளை தாண்டி அவர்கள் முன்னேற முயன்றதால் போலீசார் தண்ணீரை பீய்ச்சி அடித்து அவர்களை விரட்டினார்கள்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அதேபோல கேரள மாணவர் சங்கம் சார்பில் திருவனந்தபுரத்தில் உள்ள மாநில மகளிர் கமிஷன் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. சசி எம்.எல்.ஏ. மீதான பாலியல் புகார் பற்றி விசாரணை நடத்த தேசிய மகளிர் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. ஆனால் மாநில மகளிர் கமிஷன் இந்த புகாரில் மவுனம் சாதிப்பது ஏன்? என்று அவர்கள் கோஷங்களை எழுப்பினார்கள்.
மேலும் பிளாஸ்டிக் பாட்டில்களில் கரைத்து கொண்டு வந்திருந்த மாட்டு சானத்தையும் அவர்கள், அங்கு கொட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களையும் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விரட்டி அடித்தனர்.
இதற்கிடையில் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவரான அச்சுதானந்தன் இந்த பிரச்சினை பற்றி சீதாராம் யெச்சூரிக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில், சசி எம்.எல்.ஏ. மீதான பாலியல் புகார் காரணமாக மக்கள் மத்தியில் கம்யூனிஸ்டு கட்சிக்கு கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். #Congress
பூரி:
ஒடிஷா மாநிலத்தில் நவீன் பட்நாயக் தலைமையில் பிஜு ஜனதா தளம் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது.
முதல்-மந்திரி பட்நாயக் பூரியில் நடைபெறும் விழாவில் கலந்து கொள்வதற்காக காரில் சென்றார்.
பூரி, கோனார்க் தேசிய நெடுஞ்சாலையில் முதல்- மந்திரி கார் சென்றபோது காங்கிரஸ் தொண்டர்கள் அங்கு திரண்டு நவீன் பட்நாயக்குக்கு எதிராக கோஷமிட்டனர். அதோடு கருப்புக் கொடியும் காட்டினார்கள்.
சில காங்கிரஸ் தொண்டர்கள் முதல்-மந்திரி கார் மீது அழுகிய தக்காளிகளை வீசினார்கள். இதை நவீன் பட்நாயக்கும், அதிகாரிகளும் எதிர்பார்க்கவில்லை. பாதுகாப்பில் உள்ள குறைபாடே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்து முதல்-மந்திரிக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
பஞ்சாபில் ஏற்பட்ட இந்த குளறுபடி குறித்து டி.ஜி.பி. சர்மா விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். நவீன் பட்நாயக் கார் மீது தக்காளிகளை வீசிய காங்கிரஸ் தொண்டர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். #CMNaveenPatnaik
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்