என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Congrss"
- மாநில தலைவரை நியமிக்கும் அதிகாரம் மற்றும் அகில இந்திய தலைமையை தேர்வு செய்யும் அதிகாரத்தை சோனியா காந்திக்கு வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
- கூட்டத்துக்கு தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், அகில இந்திய செயலாளர் ஸ்ரீவல்ல பிரசாத் ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள்.
சென்னை:
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தல் அடுத்த மாதம் நடைபெறுகிறது. இதில் வாக்களிக்க தகுதியான பொதுக்குழு உறுப்பினர்களை வைத்து ஒவ்வொரு மாநிலத்திலும் வருகிற 20-ந் தேதிக்குள் பொதுக்குழு கூட்டம் நடத்தி தீர்மானத்தை அகில இந்திய காங்கிரஸ் தலைமைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
இதையடுத்து தமிழக காங்கிரஸ் பொதுக்குழு கூட்டம் நாளை வேப்பேரியில் உள்ள ஓம்.எம்.இ.ஏ. மண்டபத்தில் காலை 11.30 மணிக்கு பொதுக்குழு கூட்டம் நடக்கிறது.
தமிழகத்தில் 680 பொதுக்குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி ஒவ்வொரு பொதுக்குழு உறுப்பினருக்கும் செல்போனில் எஸ்.எம்.எஸ். அனுப்பப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை தாங்குகிறார்.
மாநில தலைவரை நியமிக்கும் அதிகாரம் மற்றும் அகில இந்திய தலைமையை தேர்வு செய்யும் அதிகாரத்தை சோனியா காந்திக்கு வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
இந்த கூட்டத்துக்கு தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், அகில இந்திய செயலாளர் ஸ்ரீவல்ல பிரசாத் ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள்.
இந்நிலையில் பிரதமர் மோடி மூன்று வேளாண்மை சட்டங்களை ரத்துச் செய்யப்படும் என தெரிவித்துள்ளார். இதனை கொண்டாடும் வகையில் குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நாகர்கோவில் உள்ள குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் அலுவலகத்தில் இருந்து விஜய் வசந்த் எம்.பி. தலைமையில் குஞ்சன் நாடார் சிலை வரை பேரணியாக சென்று கொண்டாடினர். விவசாயிகளுக்கு எதிரான சட்டத்தை மோடி ரத்து செய்ததை காங்கிரஸ் கட்சி போராட்டம் வெற்றிபெற்றது என கோஷங்கள் எழுப்பினர்.
இதில் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ்கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன், வர்த்தக காங்கிரஸ் தலைவர் முருகேசன், ஸ்ரீநிவாசன், நவீன், அருள் சபிதா, மகேஸ் லாசர், கால பெருமாள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதனிடையே, கன்னியாகுமரி மாவட்டம் விளாத்துறை ஊராட்சி ஒன்றியம் மாராயபுரம் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் தனது சொந்த செலவில் கணினி வழங்கினார்.
தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பார்வையாளர்களாக முகுல் வாஸ்னிக், சஞ்சய்தத் ஆகியோர் உள்ளனர். சமீபத்தில் சென்னையில் நடந்த மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் கூட்டத்தில் கட்சியின் மேலிட பார்வையாளர்களான முகுல்வாஸ்னிக், சஞ்சய்தத் ஆகியோர் பங்கேற்றனர். அப்போது மாநிலத்தில்ங கட்சி நிலவரம் பற்றி கேட்டு அறிந்தனர்.
கட்சி வளர்ச்சிக்கு என்ன செய்யலாம்? பாராளுமன்ற தேர்தல் கூட்டணி எவ்வாறு அமைய வேண்டும் என்பது குறித்து நிர்வாகிகளிடம் கேட்டு அறிந்தனர். யாரை புதிய தலைவராக நியமிக்கலாம் என்பது பற்றியும் கருத்து கேட்டதாக சொல்லப்படுகிறது.
தமிழக மேலிட பார்வையாளர்களில் ஒருவரான சஞ்சய்தத் நேற்று முன்தினம் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சென்னையில் சந்தித்து பேசினார். அப்போது பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி அமைப்பது குறித்து கருத்துக்கள் பரிமாறப்பட்டன.
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, மாநிலங்களின் நிர்வாகிகள், கட்சியின் பார்வையாளர்களை சந்தித்து ஆலோசித்து வருகிறார். இன்று காலை குஜராத் மாநில காங்கிரஸ் நிர்வாகிகளை சந்திக்கிறார்.
இன்று மாலை தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பார்வையாளர்களான முகில் வாஸ்னிக், சஞ்சய்தத் ஆகியோரை சந்தித்து பேசுகிறார். அப்போது தமிழ்நாடு காங்கிரஸ் புதிய தலைவராக யாரை நியமிக்கலாம் என்பது குறித்து கருத்து கேட்கிறார்.
இதையடுத்து புதிய தலைவர் முடிவு செய்யப்படுவார் என்று தெரிகிறது. பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளுடன் தமிழ்நாட்டில் எப்படி இணைந்து செயல்படுவது என்பது குறித்தும் இதில் ஆலோசிக்கப்படுகிறது. #Congress #RahulGandhi #MukulWasnik
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்