search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "contouring makeup"

    • முகத்தில் களைப்பு தெரியாமல் இருக்க, மேக்கப் பயன்படுகிறது.
    • இந்த வகை மேக்கப்கள் போட்டோ ஷூட்டுகளுக்கு ஏற்றவை.

    அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது பழைய மொழி. அகத்தில் சோர்வு இருந்தாலும் முகத்தில் தெரியக்கூடாது என்பது புது மொழி.

    இந்த புதுமொழிக்கு ஏற்ப, முகத்தை பொலிவாக்க பல்வேறு மேக் அப் கலைகள் வந்து உள்ளன. அதில், கான்டூரிங் மேக்கப் முக்கியமானது.

    பொதுவாக, திருமணம் நிச்சயதார்த்தம், வரவேற்பின் போது மணப்பெண்ணால் சரியாக தூங்க முடியாது சோர்வாக – களைப்பாக இருப்பார். இதை அவர் முகமே காட்டிக் கொடுத்துவிடும்.

    அந்த சூழலில் முகத்தில் களைப்பு தெரியாமல் இருக்க, மேக்கப் பயன்படுகிறது.

    மேக்கப்களில் முகத்தில் தண்ணீர் பட்டாலோ அல்லது வியர்வை வழிந்தாலோ கலைந்து விடும். இந்த நிலையை மாற்ற, புதிய முறைகள் அறிமுகமாகிவிட்டன.

    வாட்டர் ஃப்ரூப் மேக்கப், ஏர் பிரஷ் மேக்கப். எச்.டி மேக்கப், கான்டூரிங் மேக்கப் வகைகள் என பல உண்டு. இவற்றில், முதலாவது மேக்கப் வகையான வாட்டர் ஃப்ரூப் மேக்கப் முகத்தில் தண்ணீர் பட்டாலும் மேக்கப் கலையாமல் இருக்கும்.

    'ஏர் பிரஷ் மேக்கப்' என்பது தனி வகை. இது முகத்தில் உள்ள மருக்கள், பருக்களால் ஏற்பட்ட தழும்புகள், சருமத் திட்டுகள் ஆகியவற்றை மறைத்து விடும். முகம் முழுக்க ஒரே கலரில் அழகாக தோன்றும்.

    இன்னொன்று எச்.டி மேக்கப். இந்த வகை மேக்கப்கள் போட்டோ ஷூட்டுகளுக்கு ஏற்றவை. இது முகத்தை வண்ணமயமாக காட்டும்.

    அடுத்து கான்டூரிங் மேக்கப். இதை கரெக்ட்டிங் மேக்கப் என்றும் சொல்வது உண்டு. சப்பையான நாசியை எடுப்பாகக் காட்டவும், சற்று பூசினாற் போல இருக்கும் கண்ணங்களை ஒல்லியாக காட்டவும் உதவும்.

    ×