search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Criminal Law Amendment Bill"

    பாலியல் வன்கொடுமைகள் தொடர்பான அனைத்து வழக்குகளையும் இனி பெண் நீதிபதிகளே விசாரிக்கும் வகையில் இந்திய கிரிமினல் சட்டத்தில் திருத்தம் செய்யும் மசோதா மக்களவையில் இன்று நிறைவேறியது. #MonsoonSession
    புதுடெல்லி:

    இந்திய தண்டனை சட்டத்தில் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ள தண்டனைகளை திருத்தம் செய்யும் மசோதா மக்களவையில் இன்று விவாதிக்கப்பட்டது. ஏற்கனவே, 12 வயதுக்கு உள்பட்ட சிறார்களை பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வகை செய்யும் சட்ட மசோதாவும் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில், இந்த மசோதா மீதான விவாதத்தில் பேசிய மத்திய உள்துறை இணை மந்திரி கிரண் ரெஜிஜு, “பலத்கார வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களிடம் இனி பெண் போலீஸ் அதிகாரிகளே வாக்குமூலம் வாங்கும் வகையிலும், பெண்கள் பாலியல் வன்கொடுமை தொடர்பான அனைத்து வழக்குகளையும் பெண் நீதிபதிகளே விசாரணை செய்யும் அம்சங்களும் இந்த மசோதாவில் இடம் பெற்றுள்ளது” என கூறினார்.

    விவாதங்களுக்கு பின்னர் மசோதா வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. உறுப்பினர்களின் ஒருமித்த ஆதரவுடன் மசோதா நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்தார். 
    ×