என் மலர்
நீங்கள் தேடியது "dancer ramesh"
- டிக்டாக் மூலம் பிரபலம் அடைந்தவர் டான்சர் ரமேஷ், தனியார் தொலைகாட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார்.
- இவர் தொலைக்காட்சிகள் மட்டுமல்லாமல் திரைப்படங்களிலும் நடனமாடி இருக்கிறார்.
டிக்டாக் மற்றும் சமூக வலைதளம் மூலம் பிரபலம் அடைந்தவர் டான்சர் ரமேஷ். இவர் தனியார் தொலைகாட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார். தொலைகாட்சி நிகழ்ச்சி மட்டுமின்றி தமிழ் திரைப்படங்களிலும் நடனம் ஆடி இருக்கிறார்.
டான்சர் ரமேஷ்
சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற அஜித்-இன் துணிவு படத்தில் நடனம் ஆடி இருக்கிறார். முன்னதாக தமிழ் சினிமா திரைப்படங்களில் நடனம் ஆடி வந்த டான்சர் ரமேஷ், ரஜினிகாந்த் உடனும் திரையில் நடனம் ஆடி இருக்கிறார். இது தவிர ரஜினி காந்த் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் படத்திலும் நடனம் ஆடி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
டான்சர் ரமேஷுக்கு இரண்டு மனைவிகள் இருக்கின்றனர். பிரபலம் ஆவதற்கு முன்னர் மூர் மார்க்கெட் பகுதியில் உள்ள முதல் மனைவி சித்ரா மற்றும் 2 மகள்களுடன் வசித்து வந்துள்ளார். பிரபலம் ஆன பிறகு, முதல் மற்றும் 2-வது மனைவிகளுக்கு இடையே தகராறு ஏற்படவே, பின்னர், கே.பி. பார்க் பகுதியில் உள்ள 2-வது மனைவியான இன்பவள்ளி வீட்டில் தங்கி வந்துள்ளார்.
டான்சர் ரமேஷ் - முதல் மனைவி சித்ரா
இதையடுத்து, ரமேஷ் தனது பிறந்த நாளான நேற்று (ஜனவரி 28) நண்பர்களுக்கு விருந்து வைக்க தனது 2-வது மனைவி இன்பவள்ளியிடம் பணம் கேட்டதாக கூறப்படுகிறது. மனைவி பணம் தர மறுக்கவே, ரமேஷ் விரக்தியில் புளியந்தோப்பில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் பத்தாவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
தகவலின் பேரில் வந்த போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இரண்டாவது மனைவி தரப்பில், ரமேஷ் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. எனினும், முதல் மனைவி சித்ரா, தனது கணவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில், சந்தேக மரணமாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- டிக்டாக் மூலம் பிரபலம் அடைந்தவர் டான்சர் ரமேஷ், தனியார் தொலைகாட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார்.
- தொலைகாட்சி நிகழ்ச்சி மட்டுமின்றி தமிழ் திரைப்படங்களிலும் நடனம் ஆடி இருக்கிறார்.
டிக்டாக் மற்றும் சமூக வலைதளம் மூலம் பிரபலம் அடைந்தவர் டான்சர் ரமேஷ். இவர் தனியார் தொலைகாட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார். தொலைகாட்சி நிகழ்ச்சி மட்டுமின்றி தமிழ் திரைப்படங்களிலும் நடனம் ஆடி இருக்கிறார்.
சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற அஜித்-இன் துணிவு படத்தில் நடனம் ஆடி இருக்கிறார். முன்னதாக தமிழ் சினிமா திரைப்படங்களில் நடனம் ஆடி வந்த டான்சர் ரமேஷ், ரஜினிகாந்த் உடனும் திரையில் நடனம் ஆடி இருக்கிறார். இது தவிர ரஜினி காந்த் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் படத்திலும் நடனம் ஆடி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், டான்சர் ரமேஷ் சென்னை புளியந்தோப்பில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் பத்தாவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.