search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Delhi Dynamos"

    டெல்லியில் நடைபெற்ற 5வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் டெல்லி டைனமோஸ் எப்.சி. - எப்.சி.கோவா அணிகளுக்கிடையிலான போட்டி டிராவில் முடிந்தது. #IndianSuperLeague
    புதுடெல்லி:

    5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி தொடரில் டெல்லியில் நேற்று இரவு நடந்த 69-வது லீக் ஆட்டத்தில் டெல்லி டைனமோஸ் எப்.சி.-எப்.சி.கோவா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டம் கோல் எதுவுமின்றி டிராவில் முடிந்தது. 14-வது ஆட்டத்தில் ஆடிய கோவா அணி 7 வெற்றி, 4 டிரா, 3 தோல்வியுடன் புள்ளி பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது. டெல்லி அணி 14 ஆட்டத்தில் விளையாடி 2 வெற்றி, 5 டிரா, 7 தோல்வியுடன் 8-வது இடத்தில் இருக்கிறது.

    நாளை (புதன்கிழமை) இரவு 7.30 மணிக்கு பெங்களூருவில் நடைபெறும் 70-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு எப்.சி.-கேரளா பிளாஸ்டர்ஸ் எப்.சி. அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது. #IndianSuperLeague

    ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் டெல்லி அணி 3-1 என்ற கோல் கணக்கில் சென்னை அணியை வீழ்த்தி இந்த சீசனில் முதலாவது வெற்றியை ருசித்தது. #ISL2018 #DelhiDynamos #ChennaiyinFC
    சென்னை:

    10 அணிகள் இடையிலான 5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த 58-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னையின் எப்.சி. அணி, டெல்லி டைனமோஸ் எப்.சி.யை சந்தித்தது. 16-வது நிமிடத்தில் டெல்லி டைனமோஸ் அணி முதல் கோல் அடித்தது.



    அந்த அணி வீரர் டேனியல் இந்த கோலை அடித்தார். 38-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி சென்னை அணி வீரர் ரபெல் அகஸ்டா பதில் கோல் திருப்பினார். முதல் பாதியில் இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலை வகித்தன. பிற் பாதியின் கடைசி கட்டத்தில் டெல்லி அணி அடுத்தடுத்து 2 கோல்கள் போட்டு அதிர்ச்சி அளித்தது. அந்த அணி வீரர்கள் பிக்ரம்ஜித் சிங் 78-வது நிமிடத்திலும், நந்தகுமார் சேகர் 82-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். அதன் பிறகு சென்னை அணி கோல் அடிக்க போராடினாலும் அதற்கு பலன் எதுவும் கிடைக்கவில்லை. முடிவில் டெல்லி அணி 3-1 என்ற கோல் கணக்கில் சென்னை அணியை வீழ்த்தி இந்த சீசனில் முதலாவது வெற்றியை ருசித்தது.

    12-வது ஆட்டத்தில் ஆடிய டெல்லி அணி ஏற்கனவே 4 டிராவும், 7 தோல்வியும் கண்டு இருந்தது. 12-வது ஆட்டத்தில் விளையாடிய சென்னை அணி சந்தித்த 9-வது தோல்வி இதுவாகும். இவ்விரு அணிகளும் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

    மும்பையில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி எப்.சி.-கேரளா பிளாஸ்டர்ஸ் எப்.சி. அணிகள் மோதுகின்றன. #ISL2018 #DelhiDynamos #ChennaiyinFC
    ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியின் 31-வது லீக் ஆட்டத்தில் எப்.சி.கோவா அணி 3-2 என்ற கோல் கணக்கில் டெல்லி டைனமோசை தோற்கடித்தது. #ISL2018 #FCGoa #DelhiDynamos
    கோவா:

    5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் நேற்றிரவு கோவா நேரு ஸ்டேடியத்தில் அரங்கேறிய 31-வது லீக் ஆட்டத்தில் எப்.சி.கோவா அணி 3-2 என்ற கோல் கணக்கில் டெல்லி டைனமோசை தோற்கடித்தது. ஒரு கட்டத்தில் கோவா அணி 1-2 என்ற கோல் கணக்கில் பின்தங்கி இருந்த நிலையில் பிரான்டன் பெர்னாண்டஸ் (82-வது நிமிடம்), எடு பெடியா (89-வது நிமிடம்) ஆகியோர் கோல் போட்டு அந்த அணிக்கு வெற்றியை தேடித்தந்தனர்.



    கோவா அணி 4 வெற்றி, ஒரு டிரா, ஒரு தோல்வி என்று 13 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடம் வகிக்கிறது. டெல்லி அணிக்கு இது 4-வது தோல்வியாகும். இன்றைய ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி)- மும்பை சிட்டி (இரவு 7.30 மணி) அணிகள் மோதுகின்றன. 
    டெல்லியில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் டெல்லி டைனமோஸ் மற்றும் ஜாம்ஷெட்பூர் எப்.சி. அணிகளுக்கு எதிரான போட்டி சமனில் முடிந்தது. #ISL2018 #DelhiDynamos #JamshedpurFC
    புதுடெல்லி:

    5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டெல்லியில் நடைபெற்ற போட்டியில் டெல்லி டைனமோஸ் மற்றும் ஜாம்ஷெட்பூர் எப்.சி. அணிகள் மோதின.

    ஆட்டத்தின் 39-வது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூரை சேர்ந்த செர்ஜியோ சிடோன்சா முதல் கோல் அடித்து தனது அணிக்கு முன்னிலை பெற்றுக் கொடுத்தார். இதையடுத்து, முதல் பாதி முடிவில் ஜாம்ஷெட்பூர் அணி ஒரு கோல் அடித்து முன்னிலை பெற்றது.

    இதேபோல், ஆட்டத்தின் இரண்டாவது பாதியில், டெல்லி அணியின் லாலியன்ஜுவாலா சாங்கே 55-வது நிடத்திலும், அட்னா கமோனா 58-வது நிமிடத்திலும் ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினர்.

    இதற்கு பதிலடியாக, ஜாம்ஷெட்பூர் அணியின் ஜோஸ் லூயிஸ் 72வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.

    இறுதியில், டெல்லி டைனமோஸ் மற்றும் ஜாம்ஷெட்பூர் எப்.சி அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 2 - 2  என்ற கோல் கணக்கில் சமனிலை பெற்றது. இந்த ஆட்டத்தின் முடிவில் ஜாம்ஷெட்பூர் அணி புள்ளிப் பட்டியலில் ஜாம்ஷெட்பூர் அணி முதலிடம் பிடித்துள்ளது. #ISL2018 #DelhiDynamos #JamshedpurF
    ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியின் 23-வது லீக் ஆட்டத்தில் கவுகாத்தி அணி 2-0 என்ற கோல் கணக்கில் டெல்லியை வீழ்த்தியது #ISL2018 #DelhiDynamos #NorthEastUnited
    புதுடெல்லி:

    10 அணிகள் பங்கேற்றுள்ள 5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் டெல்லியில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் நேற்றிரவு அரங்கேறிய 23-வது லீக் ஆட்டத்தில் டெல்லி டைனமோஸ் அணி, நார்த் ஈஸ்ட் யுனைடெட்டை (கவுகாத்தி) எதிர்கொண்டது.

    முதல் பாதியில் கோல் ஏதும் விழாத நிலையில் கடைசி 10 நிமிடங்களில் கவுகாத்தி அணியினர் அமர்க்களப்படுத்தினர். 82-வது நிமிடத்தில் பெடரிகோ காலெகோ, 90-வது நிமிடத்தில் கேப்டன் பார்த்தோலோம் ஒக்பேச் ஆகியோர் கவுகாத்தி அணிக்காக கோல் போட்டனர். முடிவில் கவுகாத்தி அணி 2-0 என்ற கோல் கணக்கில் டெல்லியை வீழ்த்தியது. இதுவரை தோல்வியே சந்திக்காத கவுகாத்தி அணி 3 வெற்றி, 2 டிரா என்று 11 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது. டெல்லி அணிக்கு விழுந்த 3-வது உதை இதுவாகும்.

    இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் லீக் ஆட்டத்தில் பெங்களூரு எப்.சி.-அட்லெடிகோ டி கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.  #ISL2018 #DelhiDynamos #NorthEastUnited
    இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து(ஐ.எஸ்.எல்.) தொடரில் 20-வது லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி அணி 2-0 என்ற கோல் கணக்கில் டெல்லி டைனமோசை தோற்கடித்து 2-வது வெற்றியை பெற்றது. #ISL2018 #MumbaiCity #DelhiDynamos
    மும்பை:

    இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து(ஐ.எஸ்.எல்.) தொடரில் மும்பையில் நேற்றிரவு அரங்கேறிய 20-வது லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி அணி 2-0 என்ற கோல் கணக்கில் டெல்லி டைனமோசை தோற்கடித்து 2-வது வெற்றியை பெற்றது. மோடோ சோகோவ் (30-வது நிமிடம்), அர்னால்டு இசோகோ (77-வது நிமிடம்) ஆகியோர் கோல் போட்டு உள்ளூர் ரசிகர்களை குதூகலப்படுத்தினர். இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் லீக் ஆட்டத்தில் கோவா-புனே அணிகள் சந்திக்கின்றன. 
    ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி அணிக்கும், டெல்லி டைனமோஸ் அணிக்கும் இடையிலான ஆட்டம் சமனிலையில் முடிந்தது. #ISL2018 #DelhiDynamos #ChennaiyinFC
    5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் சென்னையின் எப்.சி, டெல்லி டைனமோஸ் அணிகள் மோதின.

    ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்து இரு அணிகளும் நிதானமாக ஆடின. கோல் அடிக்க கிடைத்த வாய்ப்புகளை இரண்டு அணியினரும் பயன்படுத்தி கொள்ளவில்லை. இதனால் எந்த அணியும் ஒரு கோல் கூட அடிக்கவில்லை.

    இறுதியில், சென்னையின் எப்.சி. அணிக்கும், டெல்லி டைனமோஸ் அணிக்கும் இடையிலான ஆட்டம் சமனிலையில் முடிந்தது. #ISL2018 #DelhiDynamos #ChennaiyinFC
    கொச்சியில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் கேரளா - டெல்லி அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. #ISL2018 #KeralaBlasters #DelhiDynamos
    கொச்சி:

    5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் கொச்சி நேரு ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த 13-வது லீக் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் எப்.சி.-டெல்லி டைனமோஸ் எப்.சி. அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.



    பிற்பாதி ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் (48-வது நிமிடம்) கேரளா அணியின் வினீத் இடது காலால் பந்தை உதைத்து கோலாக்கினார். 84-வது நிமிடத்தில் டெல்லி அணி வீரர் அன்ட்ரிஜா காலுட்ஜெரோவிச் பதில் கோல் திருப்பினார். முடிவில் இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. 3-வது ஆட்டத்தில் ஆடிய கேரளா அணி ஒரு வெற்றி, 2 டிரா கண்டுள்ளது. 3-வது ஆட்டத்தில் களம் கண்ட டெல்லி அணி 2 டிரா, ஒரு தோல்வி கண்டு இருக்கிறது. ஜாம்ஷெட்பூரில் இன்று நடக்கும் லீக் ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் எப்.சி.-அட்லெடிகோ டி கொல்கத்தா (இரவு 7.30 மணி) அணிகள் சந்திக்கின்றன. #ISL2018 #KeralaBlasters #DelhiDynamos
    ஐ.எஸ்.எல். கால்பந்து 10-வது லீக் ஆட்டத்தில் டெல்லி டைனமோஸ்-அட்லெடிகோ டி கொல்கத்தா அணிகள் இன்று மோதுகின்றன. #ISL2018 #DelhiDynamos #AtleticoDeKolkata
    புதுடெல்லி:

    10 அணிகள் இடையிலான 5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கடந்த மாதம் 29-ந்தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்திய கால்பந்து அணி சீனாவுடன் சர்வதேச நட்புறவு போட்டியில் ஆடியதால் அதற்கு ஏற்றவாறு ஐ.எஸ்.எல். தொடரில் 10 நாட்கள் இடைவெளி விடப்பட்டு இருந்தது.



    இந்த நிலையில் 10 நாட்கள் ஓய்வுக்கு பிறகு இன்று மீண்டும் போட்டி தொடங்குகிறது. டெல்லி நேரு ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு அரங்கேறும் 10-வது லீக் ஆட்டத்தில் டெல்லி டைனமோஸ்-அட்லெடிகோ டி கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. முன்னாள் சாம்பியனான கொல்கத்தா அணி இதுவரை ஆடியுள்ள 2 ஆட்டங்களிலும் (கேரளா, கவுகாத்திக்கு எதிராக) தோல்வியை தழுவியுள்ளது. டெல்லி அணி தனது முதல் ஆட்டத்தில் புனே சிட்டி அணியுடன் டிரா கண்டது. இரு அணிகளும் இந்த சீசனில் தங்களது முதலாவது வெற்றிக்கு வரிந்து கட்டும் என்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது. 
    ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் புனே சிட்டி மற்றும் டெல்லி டைனமோஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 1-1 என சமனில் முடிந்தது. #ISL2018 #FCPuneCity #DelhiDynamos
    டெல்லி:

    5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி சமீபத்தில் தொடங்கியது. இதில் சென்னையின் எப்.சி., பெங்களூரு எப்.சி., நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி), எப்.சி.கோவா, மும்பை சிட்டி, ஜாம்ஷெட்பூர், அட்லெடிகோ டி கொல்கத்தா, கேரளா பிளாஸ்டர்ஸ், டெல்லி டைனமோஸ், புனே சிட்டி ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் உள்ளூர், வெளியூர் அடிப்படையில் 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்குள் நுழையும்.

    டெல்லியில் நேற்றிரவு நடந்த லீக் ஆட்டத்தில் எப்.சி. புனே சிட்டி அணியும், டெல்லி டைனமோஸ் அணியும் சந்தித்தன.

    இரு அணிகளும் தொடக்கத்தில் இருந்தே பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தின. முதல் பாதியின் இறுதியில் டெல்லி அணியின் ராணா கராமி ஒரு கோல் அடித்து தனது அணிக்கு முன்னிலை தேடிக் கொடுத்தார். இதனால் முதல் பாதியில் டெல்லி அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.

    இதன் தொடர்ச்சியாக, ஆட்டத்தின் இறுதியில், புனே அணியின் டிகோ கார்லஸ் ஒரு கோல் அடித்தார். இதன்மூலம்  1-1 என ஆட்டம் சமனிலையில் முடிந்தது. #ISL2018 #FCPuneCity #DelhiDynamos
    ×