என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "dharmapuri murder"
தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே சிட்லகாரம்பட்டியை சேர்ந்த மணி என்பவரது மகன் வெங்கடேசன் (வயது 23) கட்டிட தொழிலாளியான இவருக்கும், கானாப்பட்டியை சேர்ந்த முனுசாமி என்பவரது மகள் முனியம்மாளுக்கும் (20) கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
கடந்த மாதம் 26-ந்தேதி வெங்கடேசன் தனது மனைவி முனியம்மாளுடன் கானாப்பட்டியில் உள்ள தனது மாமியார் வீட்டுக்கு சென்றார். மாமியார் வீட்டில் விருந்து சாப்பிட்டு விட்டு அன்று இரவு வெங்கடேசன், தனது மோட்டார் சைக்கிளில் மனைவி முனியம்மாளை ஏற்றிக் கொண்டு ஊருக்கு திரும்பினார்.
இந்த நிலையில் வெங்கடேசன் ஒன்னப்ப கவுண்டனஅள்ளி மயானம் அருகில் தலையில் பலத்த காயத்துடன் இறந்து கிடந்தார். தகவல் அறிந்த பாப்பாரப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இது குறித்து போலீசார் முனியம்மாளிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது முனியம்மாள் கூறும்போது, தனது கணவர் வெங்கடேசன் மோட்டார் சைக்கிள் விபத்து ஏற்பட்டதில் இறந்தார் என கூறினார். இது குறித்து பாப்பாரப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் இறந்து போன வெங்கடேசனின் தங்கை அருள்ஜோதி என்பவர் தனது அண்ணன் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் பாப்பாரப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். இதன் பேரில் போலீசார் வெங்கடேசன் மரணம் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில், வெங்கடேசனின் மனைவி முனியம்மாளிடம் மீண்டும் விசாரணை நடத்தினர். அப்போது முனியம்மாள் முன்னுக்குப்பின் முரணாக வாக்குமூலம் அளித்தார். இதனால் முனியம்மாள் வெங்கடேசனை கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்தனர்.
போலீசாரின் தீவிர விசாரணையில் முனியம்மாள் திருமணத்துக்கு முன்பே கானாப்பட்டியை சேர்ந்தவரும், சென்னையில் உள்ள ஓட்டலில் தொழிலாளியாக பணியாற்றி வரும் விஜய் (22) என்பவரை காதலித்து வந்ததும் திருமணத்துக்கு பிறகும் அவர்களுக்கிடையில் பழக்கம் நீடித்து வந்ததும் தெரிந்தது.
சம்பவத்தன்று தனது கணவர் வெங்கடேசனுடன் தான் பைக்கில் வருவதாக தனது கள்ளக்காதலனுக்கு தகவல் தெரிவித்தார். தயாராக காத்திருந்த கள்ளக்காதலன் விஜய் ஓ.ஜி.அள்ளி மயானம் அருகே வெங்கடேசன் ஓட்டி வந்த பைக்கை மறித்து இரும்பு பைப்பால் வெங்கடேசனை தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த வெங்கடேசன் உயிரிழந்தார். பின்னர் விஜய் அங்கிருந்து தப்பியோடியதும் விபத்தில் இறந்ததாக முனியம்மாள் நாடகம் ஆடியதும் விசாரணையில் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து விஜய் மற்றும் முனியமமாள் ஆகிய இருவரையும் பாப்பாரப்பட்டி போலீசார் நேற்று கைது செய்தனர். பின்னர் அவர்களை பென்னாகரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
தருமபுரி மாவட்டம் பாப்பரப்பட்டி அருகே உள்ள வல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 55) கூலி தொழிலாளி.
இவருக்கு அமரா(48) என்ற மனைவியும், சத்யா (30) என்ற மகளும், முருகன்(28), ஞானமூர்த்தி (25), கேசவன் (19) உள்ளிட்ட 3 மகன்களும் உள்ளனர்.
இதில் கட்டிட மேஸ்திரியான முருகன் தனக்கு சொந்தமான இடத்தில் வீடுகட்டி வருகிறார். கட்டுமான செலவு அதிகரித்து விட்டதால் நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் தந்தையிடம் சென்று பணம் கேட்டுள்ளார்.
அப்போது தந்தை மகனுக்கிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. தன்னிடம் பணம் இல்லை என்றும், இருந்தாலும் கொடுக்க முடியாது என்றும் தந்தை சரவணன் மறுத்து உள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த முருகன் கோபத்தில் தன்னுடைய தந்தையை கீழே தள்ளி விட்டுள்ளார். அப்போது தடுமாறி கீழே விழுந்த சரவணனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சரவணன் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.
இது குறித்து பாப்பாரப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி முருகனை கைது செய்தனர்.
பெங்களூரு:
தருமபுரியை சேர்ந்தவர் பழனிவேல் (வயது44). இவரது மனைவி கவிதா (37) இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். பழனிவேல் பெங்களூருவில் கார் டிரைவராக பணியாற்றினார். பெங்களூரு சந்திராநகர் லே-அவுட் அருந்ததிநகர் பகுதியில் குடும்பத்துடன் தங்கி இருந்தார். தினமும் குடித்து விட்டு வந்து மனைவி மற்றும் மகன்களுடன் தகராறு செய்தார்.
நேற்று முன்தினம் இரவு மீண்டும் குடித்து விட்டு வந்து தகராறு செய்து விட்டு அவர் தூங்கி விட்டார். தினம் தினம் தகராறு செய்யும் அவருடன் வாழ்வதை விட அவரை கொன்று விடுவதே மேல் என்று நினைத்து அவரது மனைவியும், மகன்களும் அவரது கழுத்தை நெறித்து கொன்று விட்டனர்.
நேற்று காலை அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்ய முயற்சி செய்ததாகவும், அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்ததாக கூறிய அவரது குடும்பத்தினர் அவரது உடலை தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
ஆனால் அவரது உடலை பரிசோதித்த தனியார் ஆஸ்பத்திரி அவர் இறந்து பல மணி நேரம் ஆனதை கண்டுபிடித்து விட்டார். உடலை எடுத்து செல்லுமாறு ஆஸ்பத்திரி நிர்வாகம் கூறி விட்டது.
பின்னர் கவிதாவும், அவரது மகன்களும் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் பழனிவேலின் உடலை தருமபுரிக்கு கொண்டு செல்ல முயற்சி செய்தனர். அவரது வீட்டுக்கு அருகில் இருந்தவர்கள் இது குறித்து சந்திராநகர் லே-அவுட் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து சென்று பழனிவேல் பிணத்தை கைப்பற்றி விக்டோரியா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இன்று அங்கு பிரேத பரிசோதனை நடைபெற உள்ளது.
இந்த நிலையில் பழனிவேலின் மனைவி மற்றும் மகன்களை போலீசார் விசாரித்தபோது அவர்கள் கொலை செய்ததை ஒப்புக் கொண்டனர். இதைத் தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்தனர். #Tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்