என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Diamond Jewel"

    • ரத்தன் டாடா, டாடா குழுமத்தின் தலைவராக 21 ஆண்டுகள் பணி வகித்தவர்.
    • ரத்தன் டாடா உடல் அரசு மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

    டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா (வயது86) வயது முதிர்வு காரணமாக அண்மையில் உயிரிழந்தார். பிரபல தொழில் அதிபரான ரத்தன் டாடா, டாடா குழுமத்தின் தலைவராக 21 ஆண்டுகள் பணி வகித்தவர்.

    உயிரிழந்த ரத்தன் டாடா உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக மும்பையில் வைக்கப்பட்டு இருந்தது. இதை தொடர்ந்து மும்பையில் உள்ள வொர்லி மயானத்திற்கு எடுத்துவரப்பட்டது. அங்கு ரத்தன் டாடா உடலுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மகாராஷ்டிரா முதலமைச்சர், மத்திய அமைச்சர்கள் மற்றும் பலர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் அரசு மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

    மறைந்த ரத்தன் டாடாவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக சூரத்தைச் சேர்ந்த நகை வியாபாரி 11,000 வைரக் கற்களை வைத்து அவரின் உருவத்தை வடிவமைத்து அசத்தியுள்ளார். இது தொடர்பான வீடியோ இன்ஸ்டாகிராமில் தற்போது வைரலாகி வருகிறது.

    எழும்பூரில் உள்ள ராஜா முத்தையா திருமண மண்டபத்தில் நடைபெற்ற வைர நகை கண்காட்சியில் ரூ.14 லட்சம் மதிப்புள்ள வைர நகை திருட்டு போனதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #JewelRobbery
    சென்னை:

    சென்னை எழும்பூரில் உள்ள ராஜா முத்தையா திருமண மண்டபத்தில் வைர நகை கண்காட்சி நடைபெற்று வருகிறது. அங்கு நிறைய பொதுமக்கள் வந்துபோய்க்கொண்டு இருக்கிறார்கள். கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் கண்காணிப்பு கேமரா பொருத்தி உள்ளனர்.

    நேற்று நகைகளை சரிபார்த்தபோது ரூ.14 லட்சம் மதிப்புள்ள வைர நகையை காணவில்லை. யாரோ திருடிச்சென்று உள்ளனர். இது குறித்து எழும்பூர் போலீசில், கண்காட்சி நடத்துபவர்கள் புகார் தெரிவித்தனர். இதையொட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆராய்ந்து வருகிறார்கள்.  #JewelRobbery
    ×