search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "discovered"

    நெதர்லாந்து நாட்டில் உள்ள மியூசியத்தில் இருந்து 2012ம் ஆண்டு திருட்டுபோன பிகாசோ ஓவியம் 6 ஆண்டுகளுக்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. #PicassoPainting
    புசாரெஸ்ட்:

    உலகப் புகழ் பெற்ற ஓவியரான பிகாசோவின் ஓவியங்கள் பல்வேறு அருங்காட்சியகங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இதில், நெதர்லாந்து நாட்டின் ரோட்டர்டாம் நகரில் உள்ள குன்ஸ்தல் மியூசியத்தில் வைக்கப்பட்டிருந்த பிகாசோவின் 7 ஓவியங்கள் , 2012-ம் ஆண்டு திருட்டு போனது. இதையடுத்து தனி குழு அமைக்கப்பட்டு ஓவியங்களை மீட்பதற்கான பணி நடைபெற்றது.

    ஓவியங்களை திருடிய வழக்கில் தொடர்புடைய ருமேனியர்கள் கைது செய்யப்பட்டு 2014ம் ஆண்டு தண்டனை வழங்கப்பட்டது. ஆனால், திருட்டுபோன ஓவியங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை.



    இந்நிலையில், திருட்டு போன ஓவியங்களில் ஒரு ஓவியம் 6 ஆண்டுகளுக்குப் பிறகு ருமேனியாவின் துல்சியா கவுண்டியில் சனிக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நெதர்லாந்தைச் சேர்ந்த எழுத்தாளரான மீரா பெட்டிகு என்பவர் இதனை கண்டுபிடித்து புசாரெஸ்டில் உள்ள நெதர்லாந்து தூதரகத்தில் ஒப்படைத்துள்ளார். அதன் மதிப்பு 9 லட்சத்து 5 ஆயிரம் டாலர்கள் ஆகும்.

    தற்போது ருமேனிய அதிகாரிகளின் பாதுகாப்பில் உள்ள அந்த ஓவியம், பிகாசோவின் ஓவியம்தானா? என உறுதிப்படுத்தப்பட்டபிறகு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். #PicassoPainting

    அறந்தாங்கி அருகே மண்ணில் புதைந்து கிடந்த பெருமாள் சிலையை சிறுவர்கள் கண்டெடுத்தனர்.

    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த மைவயல் கிராமத்தில் காளிதாஸ் என்பவருக்கு சொந்தமான திடல் உள்ளது. இந்த திடலில் சாகுபடி சமயத்தில், காளிதாஸ் வயல்களுக்கு வேலை பார்க்க வரும் வேலை ஆட்கள் குடும்பத்துடன் தங்கி இருந்து வேலை பார்ப்பது வழக்கம்.

    சமீபகாலமாக இயந்திரம் மூலம் சாகுபடி செய்வதால், வேலை ஆள்களின் தேவை குறைந்து விட்டது. இதனால் அந்த திடல் பயன்பாடுஇல்லாமல் புதர் மண்டிக் கிடந்தது. இந்த நிலையில் அந்த இடத்தின் உரிமையாளர் காளிதாஸ் ஜேசிபி இயந்திரம் மூலம் புதர்களை அகற்றி சீரமைத்தார்.

    சீரமைக்கப்பட்ட இடத்தில் நேற்று காலை சில சிறுவர்கள் விளையாடிக் கொண்டு இருந்தனர். அப்போது ஜேசிபி இயந்திரம் தோண்டி வைத்திருந்த மணல் குவியலில் சுமார் முக்கால் அடி உயரமுள்ள, சங்கு, சக்கரங்களை இருகைகளில் ஏந்தியபடி, பெருமாள் அமர்ந்திருக்கும் உலோகத்திலான சிலை கிடந்தது. சிறுவர்கள் இதுகுறித்து பெரியர்வர்களிடம் தெரிவித்தனர்.

    இதுதொடர்பான இடத்தின் உரிமையாளர் காளிதாஸ், அறந்தாங்கி தாசில் தாருக்கு தகவல் தெரிவித்தார். அவர் வருவாய்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின்பேரில் வருவாய்த் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பெருமாள் சிலையை மீட்டனர். மேலும் சிலை ஐம்பொன் சிலையாக என்ற கோணத்திலும் விசாரித்து வருகின்றனர்.

    அறந்தாங்கி அருகே மண்ணில் புதையுண்டு கிடந்த பெருமாள் சிலை கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×