search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "disqualification case"

    எடப்பாடி அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீர் செல்வம் மற்றும் 11 எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை தொடங்கியது. #SupremeCourt #OPanneerSelvam
    புதுடெல்லி:

    அ.தி.மு.க. பிளவுபட்ட போது முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியும் செயல்பட்டது.

    அப்போது சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. இதில் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 11 பேர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வாக்களித்தனர். என்றாலும் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றார்.


    பின்னர் இரு அணிகளும் ஒன்றாக இணைந்தன. இந்த நிலையில் அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் 11 எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.க. கொறடா சக்கரபாணி, தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த மனுவை நீதிபதிகள் விசாரித்து தள்ளுபடி செய்தனர். இதைத் தொடர்ந்து ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர்.

    இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட சுப்ரீம் கோர்ட்டு இன்று விசாரணையை தொடங்கியது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. #SupremeCourt #OPanneerSelvam
    தகுதி நீக்கம் வழக்கு குறித்து 18 எம் எல் ஏக்களிடம் கருத்து கேட்டு முடிவெடுக்கப்படும் என அமமுக துணை பொது செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார். #TTVDhinakaran #MLAsDisqualificationCase
    சென்னை:

    தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. முதலில் இவ்வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு மாறுபட்ட தீர்ப்பினை வழங்கியதால், இவ்வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு மாற்றப்பட்டது. மூன்றாவது நீதிபதி சத்தியநாராயணன் இவ்வழக்கை விசாரித்து இன்று தீர்ப்பு வழங்கினார்.

    அப்போது, 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும். தகுதிநீக்கம் தொடர்பாக சபாநாயகர் எடுத்த முடிவில் தவறு இல்லை என்று நீதிபதி அறிவித்தார். தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் தாக்கல் செய்த மனுக்களையும் தள்ளுபடி செய்தார்.



    இதுபற்றி டிடிவி தினகரன் கூறுகையில், தகுதி நீக்கம் வழக்கு குறித்து 18 எம்எல்ஏக்களிடம் கருத்து கேட்டு முடிவெடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வதா அல்லது தேர்தலை சந்திப்பதா என 18 பேரிடமும் நாளை கருத்து கேட்க உள்ளேன்.

    நீதிமன்ற தீர்ப்பு அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தாது. தமிழகத்தில் இடைத்தேர்தல் வருமா என்பது சந்தேகமாக உள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பு நேரத்தில் ஸ்லீப்பர் செல்கள் வெளியே வருவார்கள் என தெரிவித்துள்ளார். #TTVDhinakaran #MLAsDisqualificationCase
    தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. #MLAsDisqualificationCase
    சென்னை:

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆளுநரிடம் கடிதம் கொடுத்த டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர், சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த ஐகோர்ட்,  மாறுபட்ட தீர்ப்பு வழங்கியது. வழக்கை விசாரித்த இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு கூறியதால் 3-வது நீதிபதியாக விமலா நியமிக்கப்பட்டார். ஆனால் அவரை சுப்ரீம் கோர்ட்டு மாற்றிவிட்டு சத்யநாராயணனை 3-வது நீதிபதியாக நியமித்தது.

    இதையடுத்து புதிய நீதிபதி சத்யநாராயணன் கடந்த மாதம் இரு தரப்பு வழக்கறிஞர்களையும் அழைத்து அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்து கடந்த ஜூலை மாதம் 23-ம் தேதி விசாரணையை தொடங்கினார். 



    அரசுத் தரப்பு வாதம், டிடிவி தினகரன் தரப்பு வாதம், தேர்தல் ஆணையம் தரப்பு வாதம் முடிவடைந்த நிலையில், சபாநாயகர் தரப்பு வழக்கறிஞர் தனது வாதத்தை ஆகஸ்டு 31-ம் தேதி நிறைவு செய்தார். இத்துடன், அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்தது. இதையடுத்து வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் நீதிபதி. 

    இந்நிலையில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது நீதிபதி சத்திய நாராயணன் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்குகிறார். இந்த தீர்ப்பு தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. #MLAsDisqualificationCase
    தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை ஏன் வாபஸ் பெறவில்லை? என்பதற்கு தங்க தமிழ்செல்வன் விளக்கம் அளித்துள்ளார். #thangatamilselvan
    சென்னை:

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தமிழக கவர்னரிடம் மனு கொடுத்த டி.டி.வி.தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்து சட்டசபை சபாநாயகர் உத்தரவிட்டார்.

    இந்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் கடந்த ஜூன் மாதம் 14-ந்தேதி மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார்கள். அதில், சபாநாயகரின் உத்தரவை சரி என்று தலைமை நீதிபதியும், தவறு என்று நீதிபதி எம்.சுந்தரும் கூறியிருந்தனர்.

    இதையடுத்து டி.டி.வி.தினகரனின் ஆதரவாளரும், வழக்கில் ஒரு மனுதாரருமான தங்க தமிழ்செல்வன், தலைமை நீதிபதியை கடுமையாக விமர்சனம் செய்து, ஊடகங்களுக்கு பேட்டிகொடுத்தார்.

    இதையடுத்து அவர் மீது, ஐகோர்ட்டில், கோர்ட்டு அவமதிப்பு வழக்கை பெண் வக்கீல் ஸ்ரீமதி என்பவர் தாக்கல் செய்தார். இந்த கோர்ட்டு அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு ஏற்பது குறித்து தமிழக அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயணின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர் இந்த வழக்கை பரிசீலித்துவிட்டு, தங்க தமிழ்செல்வனை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி உத்தரவிட்டார்.

    அதன்படி, தங்க தமிழ்செல்வன் நேற்று மாலையில் வக்கீல்கள் தமிழ்மணி, டி.மோகன் ஆகியோருடன் ஆஜரானார். அப்போது தலைமை நீதிபதி குறித்து தெரிவித்த விமர்சனத்துக்கு, நிபந்தனையற்ற மன்னிப்பை அவர் கோரினார்.

    இதற்கு பதில் அளித்த அட்வகேட் ஜெனரல், நிபந்தனையற்ற மன்னிப்பை எல்லாம் ஐகோர்ட்டில் தான் கேட்கவேண்டும் என்று கருத்து கூறினார். இதையடுத்து, கோர்ட்டு அவமதிப்பு புகாருக்கு விளக்கம் அளிக்க தங்க தமிழ்செல்வன் தரப்பில் 6 வார காலஅவகாசம் கேட்கப்பட்டது. இந்த கோரிக்கையை அட்வகேட் ஜெனரல் ஏற்றுக்கொண்டார்.

    இதையடுத்து ஐகோர்ட்டை விட்டு வெளியில் வந்த தங்க தமிழ்செல்வன், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    என் மீது தொடரப்பட்ட கோர்ட்டு அவமதிப்பு வழக்கு குறித்து விளக்கம் அளிக்க நேரில் ஆஜராகும்படி அட்வகேட் ஜெனரல் உத்தரவிட்டார். அதன்படி இன்று (நேற்று) ஆஜரானேன். பின்னர் இந்த வழக்கிற்கு விளக்கம் அளிக்க காலஅவகாசம் கேட்டதால், ஆகஸ்டு 29-ந்தேதி நேரில் ஆஜராகும்படி அட்வகேட் ஜெனரல் உத்தரவிட்டார்.

    தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து நான் தொடர்ந்த வழக்கை வாபஸ் பெறுவேன் என்று முன்பு கூறினேன். தற்போது வழக்கை வாபஸ் பெறவேண்டிய சூழ்நிலை இல்லை. இந்த வழக்கை தற்போது விசாரிக்கும் 3-வது நீதிபதி எம்.சத்தியநாராயணன் மீது நம்பிக்கை உள்ளது. இந்த வழக்கு விரைவாக முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கை உள்ளது. அதனால், வழக்கை வாபஸ் பெறவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #thangatamilselvan
    ×