என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "DMK Youth Wing Team"
- ஆலோசனை கூட்டத்தில் அமைப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.
- 2024 பாராளுமன்றத் தேர்தல் பணிகளை மேற்கொள்ளுதல் தொடர்பாக ஆலோசிக்கப்பட உள்ளது.
சென்னை:
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தி.மு.க. இளைஞர் அணியின் மாவட்ட, மாநகர, மாநில அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் துணைச் செயலாளர்கள் முன்னிலையில் இன்று (திங்கட்கிழமை) மாலை 4.30 மணிக்கு சென்னை அன்பகம், அண்ணா மன்றத்தில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் அமைப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளை மக்களுக்குப் பயனுள்ள வகையில் கொண்டாடுதல், இல்லந்தோறும் இளைஞர் அணி உறுப்பினர் சேர்த்தல், 2024 பாராளுமன்றத் தேர்தல் பணிகளை மேற்கொள்ளுதல் தொடர்பாக இதில் ஆலோசிக்கப்பட உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடக்கிறது.
- கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை மாலையில் அன்பகத்தில் நடைபெறும் இளைஞர் அணி அமைப்பாளர்களிடம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளக்குகிறார்.
சென்னை:
தி.மு.க. இளைஞர் அணி மாநில மாநாடு அடுத்த மாதம் (டிசம்பர்) 17-ந்தேதி சேலத்தில் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் மாவட்ட வாரியாக நடந்து வருகிறது.
இந்த மாநாட்டில் 4 லட்சம் பேரை திரட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. கலந்து கொள்பவர்கள் அனைவருக்கும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் டி.சர்ட் வழங்கப்படுகிறது.
இந்த டி.சர்ட்டுகள் முன்கூட்டியே அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் அனுப்பப்படுகிறது.
அவர்கள் இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர்கள் மூலம் வினியோகிப்பார்கள். தொலை தூர மாவட்டங்களில் இருந்து முன்கூட்டியே வருபவர்கள் தங்குவதற்காக தர்மபுரி, ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் திருமண மண்டபங்கள், ஓட்டல்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.
இது தொடர்பாக நாளை (26-ந்தேதி) சென்னை அக்கார்டு ஓட்டலில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடக்கிறது.
இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை மாலையில் அன்பகத்தில் நடைபெறும் இளைஞர் அணி அமைப்பாளர்களிடம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளக்குகிறார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் பொதுச்செயலாளர் துரைமுருகன், கே.என்.நேரு, ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்ட மாநில நிர்வாகிகளும் பங்கேற்கிறார்கள்.
இளைஞர் அணி மாநாட்டை மிக பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டு ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்