search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Doordarshan Anchor"

    • நடைபயிற்சி முடித்துவிட்டு வீடு திரும்பிய கீதாஞ்சலி திடீரென சரிந்து விழுந்துள்ளார்.
    • 1989-ல் சிறந்த பெண்களுக்கான இந்திரா காந்தி பிரியதர்ஷினி விருதையும் வென்றார்.

    தேசிய ஒளிபரப்பான தூர்தர்ஷில் இந்தியாவின் முதல் ஆங்கில செய்தி தொகுபாளர்களில் ஒருவரானவ கீதாஞ்சலி ஐயர் காலமானார்.

    70 வயதான அவர் கடந்த சில நாட்களாக பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் நடைபயிற்சி முடித்துவிட்டு வீடு திரும்பிய கீதாஞ்சலி திடீரென சரிந்து விழுந்துள்ளார்.

    இந்நிலையில், மருத்துவமனைக்கு கீதாஞ்சலியை அவரது குடும்பத்தினர் அழைத்து சென்றனர். ஆனால் அவர் இறந்துவிட்டதை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

    கொல்கத்தாவின் லொரேட்டோ கல்லூரியில் பட்டம் பெற்ற கீதாஞ்சலி ஐயர் 1971-ல் தூர்தர்ஷனில் சேர்ந்து நான்கு முறை சிறந்த தொகுப்பாளர் என்ற விருதைப் பெற்றார். 1989-ல் சிறந்த பெண்களுக்கான இந்திரா காந்தி பிரியதர்ஷினி விருதையும் வென்றார்.

    ×