என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » e coli bacteria
நீங்கள் தேடியது "e coli bacteria"
அமெரிக்கா- கனடா நாடுகளின் மக்கள் ரோமெயின் என்ற கீரையை அதிகம் பயன்படுத்துவதால் இ கோலி என்ற பாக்டீரியா மனிதனை தாக்குகிறது. எனவே இந்த கீரையை பார்த்தாலே மக்கள் பீதியடையும் நிலை உள்ளது. #Ecolibacteria #Spinach
வாஷிங்டன்:
அமெரிக்க நாடுகளில் இ கோலி என்ற பாக்டீரியா மனிதனை தாக்குகிறது. இவற்றின் தாக்குதலுக்குள்ளாகும் நபர்கள் உயிரிழக்கும் சம்பவங்களும் நடக்கின்றன.
கடந்த கோடை காலத்தில் அமெரிக்காவில் 5 பேர் இந்த பாக்டீரியா தாக்குதலால் உயிரிழந்தனர். இ கோலி பாக்டீரியா எப்படி மனிதனை தாக்குகிறது என்பதை கண்டுபிடிக்க ஆய்வுகள் நடந்தன.
அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளில் ரோமெயின் என்ற கீரையை மக்கள் அதிகமாக பயன்படுத்துவது வழக்கம். இந்த கீரையில் இ கோலி பாக்டீரியா பரவி அவை மனிதனை தாக்குவது தெரியவந்தது.
இதையடுத்து இந்த கீரையை யாரும் பயன்படுத்த வேண்டாம். கடைகளிலும் இவற்றை விற்க கூடாது என்று அமெரிக்கா, கடனா அரசுகள் அறிவித்துள்ளன. இதனால் இந்த கீரையை பார்த்தாலே மக்கள் பீதியடையும் நிலை உள்ளது.
தற்போது அமெரிக்காவில் 32 பேரும், கனடாவில் 18 பேரும் இ கோலி பாக்டீரியா தாக்குதலால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். பாக்டீரியா மேலும் பரவராமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. #Ecolibacteria #Spinach
×

X