search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Egypt internet"

    எகிப்து நாட்டில் இணைய வழி குற்றத்தை தடுக்கும் வகையில் வலைத்தளங்களை கட்டுப்படுத்தும் சட்ட மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டது. #Egypt #Internet
    கெய்ரோ:

    எகிப்து நாட்டில் இணைய வழி குற்றத்தை தடுக்கும் வகையில் வலைத்தளங்களை கட்டுப்படுத்தும் சட்ட மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டது. தேசபாதுகாப்பு மற்றும் பொருளாதாரத்துக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலான வலைத்தளங்களை முடக்க இச்சட்டம் வழிவகை செய்யும்.



    நாடாளுமன்றத்தில் நடந்த ஓட்டெடுப்பில் இந்த சட்ட மசோதா நிறைவேறியது. இதையடுத்து அதிபர் அப்தெல் பாட்டா அல்-சிசி இந்த புதிய சட்டத்துக்கு நேற்று ஒப்புதல் அளித்தார்.

    இந்த சட்டத்தின் படிஇணையத்தில் சர்ச்சைக்குரிய வலைத்தளங்களை உருவாக்கி நடத்துபவர்கள் மற்றும் அந்த வலைத்தள பக்கங்களை பயன்படுத்துபவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் அல்லது அபராதம் செலுத்த வேண்டி இருக்கும்.

    நாட்டின் நிலையற்ற தன்மை மற்றும் பயங்கரவாதம் போன்றவற்றை எதிர்கொள்ள புதிய சட்டம் உதவும் என அரசு தரப்பில் கூறப்படுகிறது.

    ஆனால், நாட்டில் உள்ள அனைத்து அரசியல் எதிரிகளையும் நசுக்கவே இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளதாக மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன.

    மேலும் இந்த சட்டம் கையெழுத்தாவதற்கு முன்னதாகவே சுமார் 500 வலைத்தளங்கள் முடக்கப்பட்டுவிட்டதாக கெய்ரோவை தலைமையகமாக கொண்ட சுதந்திரமான சிந்தனை மற்றும் கருத்து வெளிப்பாட்டுச் சங்கம் தெரிவித்துள்ளது.  #Egypt #Internet #Tamilnews
    ×