என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » electionmileage
நீங்கள் தேடியது "electionmileage"
வருமான வரித்துறை போலி ஆவணங்கள் என்று நிராகரித்த குறிப்புகளை வைத்து தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் அவதூறு பிரசாரம் செய்ய தொடங்கி விட்டதாக எடியூரப்பா தெரிவித்துள்ளார். #LSpolls #electionmileage #Yeddyurappa
பெங்களூரு:
கர்நாடக மாநிலத்தில் எடியூரப்பா ஆட்சிக்காலத்தில் ராஜ்நாத் சிங், அருண் ஜெட்லி உள்ளிட்ட பாஜக தலைவர்களுக்கு ரூ.1800 கோடி லஞ்சம் அளிக்கப்பட்டதாக வெளியான தகவலை லோக்பால் விசாரிக்க வேண்டும் என்று டெல்லியில் இன்று பேட்டியளித்த காங்கிரஸ் கட்சியின் மூத்த செய்தி தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா வலியுறுத்தினார்.
இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக பதிலளித்த எடியூரப்பா, வருமான வரித்துறை போலி ஆவணங்கள் என்று நிராகரித்த குறிப்புகளை வைத்து தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் அவதூறு பிரசாரம் செய்ய தொடங்கி விட்டதாக தெரிவித்துள்ளார்.
'ஊழல் எண்ணங்களில் மூழ்கிப்போய் கிடக்கும் காங்கிரஸ் தலைவர்கள் மோடியின் செல்வாக்கை கண்டு அச்சத்தில் உறந்துப்போய் கிடக்கின்றனர். அவரது செல்வாக்கை எதிர்த்து வெற்றிபெற முடியாதவர்கள் தேர்தலுக்காக இப்படிப்பட்ட அவதூறான குற்றச்சாட்டுகளை பரப்புகின்றனர்.
காங்கிரஸ் தெரிவித்துள்ள கருத்துகள் எல்லாம் தவறானவை, ஆதாரமற்றவை. இதை வெளியிட்ட நபர் மீது அவதூறு வழக்கு தொடர்வதற்காக வழக்கறிஞருடன் ஆலோசனை நடத்தி வருகிறேன்’ எனவும் எடியூரப்பா தெரிவித்தார். #LSpolls #electionmileage #Yeddyurappa
×

X