என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » england vd pakistan
நீங்கள் தேடியது "England vd Pakistan"
பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது போட்டியில் ப்ளங்கெட் பந்தை சேதப்படுத்திய செயலில் ஈடுபடவில்லை என்று ஐசிசி உறுதிப்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் சவுத்தாம்ப்டனில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 373 ரன்கள் குவித்தது. பின்னர் 374 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களம் இறங்கியது. தொடக்க வீரர் பகர் ஜமான் சதம் விளாசியதால் பாகிஸ்தான் அணி வெற்றியை நோக்கி சென்று கொண்டிருந்தது. இறுதியில் 361 ரன்கள் குவித்து 12 ரன்னில் தோல்வியைத் தழுவியது.
இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ப்ளங்கெட் பந்தை விரல் நகத்தால் சுரண்டியது போன்ற வீடியோ வெளியானதால் சர்ச்சை கிளம்பியது. இந்நிலையில் போட்டிக்கான அதிகாரிகள் வீடியோவை ஆய்வு செய்தனர். அப்போது ப்ளங்கெட் தவறு செய்யவில்லை என்பது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து ஐசிசி தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘ப்ளங்கெட் பந்தை சேதப்படுத்தும் விதமான எந்தவொரு செயலிலும் ஈடுபடவில்லை. பந்தை சேதப்படுத்தினாரா? என்பதை ஓவர்-பை-ஓவராக போட்டிக்கான அதிகாரிகள் பரிசோதனை செய்தனர். பின்னர் அவ்வாறு செய்யவில்லை என்பது உறுதி செய்தனர்’’ என்று பதிவிட்டுள்ளது.
இதனால் ப்ளங்கெட் உலகக்கோப்பைக்கான இங்கிலாந்து அணியில் விளையாடுவதில் எந்த பிரச்சனையும் இல்லை.

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் பந்தை சேதப்படுத்தினாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 373 ரன்கள் குவித்தது. பின்னர் 374 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களம் இறங்கியது.
தொடக்க வீரர் பகர் ஜமான் சதம் விளாசியதால் பாகிஸ்தான் அணி வெற்றியை நோக்கி சென்று கொண்டிருந்தது. இறுதியில் 361 ரன்கள் குவித்து 12 ரன்னில் தோல்வியைத் தழுவியது.
இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் பந்தை விரல் நகத்தால் சுரண்டியது தற்போது வீடியோவில் தெரியவந்துள்ளது. பந்து ரிவர்ஸ் ஸ்விங் ஆகவில்லை என்றால், சில வீரர்கள் பந்தை சேதப்படுத்துவார்கள். அப்படி என்றால் பந்து ஒரு பக்கம் தேய்ந்து ரிவர்ஸ் ஸ்விங் ஆகும். இதனால் ப்ளங்கெட் ரிவர்ஸ் ஸ்விங் செய்வதற்காக இப்படி செய்திருப்பாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது. அவர் பந்தை சுரண்டிய பின் பந்து வீசும்போது, ஒருபக்கம் பந்து மிகவும் சேதமாகியிருந்தது தெளிவாக வீடியோவில் பதிவாகியுள்ளது.
ஒருவேளை அந்த வீடியோவை பார்த்து விசாரணை மேற்கொண்டால் ப்ளங்கெட் சிக்குவதற்கு வாய்ப்புள்ளது. கடந்த ஆண்டு தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கேப் டவுன் டெஸ்டின்போது பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஸ்மித், வார்னர், பான்கிராப்ட் ஆகியோர் சிக்கி தடைபெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Errr....What's going on here? Did Liam Plunkett just scratch the ball with his finger nails? Please investigate this @ICC@TheRealPCB@ECB_cricket@aaliaaaliya@Asharzaidi78@YasirAliHashmi1@AhmerNajeeb@msarosh@ArfaSays_@XeeshanQayyum@BasitSubhani@emclub77@iNabeelHashmipic.twitter.com/fSEUPdzCBT
— H Studio (@Hstudio18) May 12, 2019
பாகிஸ்தானுக்கு எதிராக 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர் 50 பந்தில் சதம் விளாச, இங்கிலாந்து 373 ரன்கள் குவித்தது.
இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோதிய 2-வது ஒருநாள் போட்டி கிரிக்கெட் போட்டி பகல்-இரவு ஆட்டமாக நேற்று சவுத்தாம்ப்டனில் நடந்தது. முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 373 ரன் குவித்தது.
பட்லர் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். அவர் 50 பந்தில் 4 பவுண்டரி, 9 சிக்சருடன் 100 ரன்னை தொட்டார். பட்லர் 55 பந்தில் 110 ரன்னும் (6 பவுண்டரி, 9 சிக்சர்), ஜேசன் ராய் 87 ரன்னும், கேப்டன் மோர்கன் 48 பந்தில் 71 ரன்னும் (6 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர்.
பின்னர் விளையாடிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 361 ரன் குவித்தது. இதனால் இங்கிலாந்து அணி 12 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பகர் ஜமான் சதம் அடித்தும் பலன் இல்லாமல் போனது. அவர் 106 பந்தில் 138 ரன்னும் (12 பவுண்டரி, 4 சிக்சர்), ஆஷிப் அலி, பாபர் ஆசம் தலா 51 ரன்னும் எடுத்தனர்.
ப்ளங்கெட், டேவிட் வில்லே தலா 2 விக்கெட்டும், கிறிஸ் வோக்ஸ், மொயீன் அலி, அடில் ரஷீத் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.
இந்த வெற்றி மூலம் 5 போட்டி கொண்ட தொடரில் இங்கிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. முதல் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது.

×

X