search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "EVM Protection"

    சத்தீஸ்கர் மாநிலத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையின் பாதுகாப்பு கருதி, வாசலில் சுவர் எழுப்பி சீல் வைத்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #ChhattisgarhElections #EVMProtection
    ராய்ப்பூர்:

    90 தொகுதிகளை கொண்ட சத்தீஸ்கர் மாநிலத்துக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. நக்சலைட்டுகள் ஆதிக்கம் நிறைந்த 18 தொகுதிகளுக்கு முதல் கட்டமாக கடந்த 12-ந்தேதியும், மீதமுள்ள 72 தொகுதிகளுக்கு 20-ந்தேதியும் வாக்குப்பதிவு நடைபெற்றது. ஒட்டுமொத்தமாக 74 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.

    வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சீலிடப்பட்டு, வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. டிசம்பர் 11-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் அதிக நாட்கள் இருப்பதால் வாக்கு எந்திரங்களை பாதுகாப்பது சவாலானதாக இருக்கும். எனவே, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    தலைநகர்  ராய்ப்பூரில் மின்னணு வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு பாதுகாப்பாக ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.



    இந்நிலையில், பீமதாரா மாவட்ட தலைமையகத்தில் 3 தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளள. வாக்கு எந்திரங்கள் உள்ள அறையை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். அதிலும் திருப்தி ஏற்படாததால், அந்த அறையின் வாசலில் செங்கற்களால் சுவர் எழுப்பி முற்றிலும் அடைத்துவிட்டனர். வன்முறைக் கும்பல்கள் வாக்குப்பதிவு எந்திரத்தை சூறையாடிவிடக்கூடாது என்பதற்காக இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது. #ChhattisgarhElections #EVMProtection

    ×