search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "executive suicide"

    தேனி மாவட்டத்தில் நடந்த ரஜினி மன்ற நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் அவமானப்படுத்தியதால் நிர்வாகி மனவேதனையில் தூக்கில் தொங்கினார்.
    தேனி:


    தேனி அருகில் உள்ள அரண்மனைப்புதூர் வசந்தம் நகரை சேர்ந்தவர் செல்வம் (வயது46). இவர் தேனி ரத்தினம் நகர் 6-வது தெருவில் உள்ள மகளிர் தையல் தொழில் கூட்டுறவு சங்க அலுவலகத்தில் எழுத்தராக பணிபுரிந்து வந்தார். மேலும் தேனி நகர ரஜினி மன்ற துணைச் செயலாளராகவும் இருந்து வந்தார்.

    சம்பவத்தன்று வீரபாண்டியில் நடந்த ரஜினி மன்ற நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்திற்கு சென்று வருவதாக வீட்டில் கூறி சென்றார். அதன்பிறகு வீடு திரும்பவில்லை.

    மறுநாள் காலையில் கூட்டுறவு சங்க அலுவலகத்தில் தூக்கு மாட்டிய நிலையில் பிணமாக தொங்கினார். இது குறித்து அல்லிநகரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அவரது உடலை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், ரஜினி மன்ற நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்திற்கு சென்ற செல்வம் நிர்வாகிகள் நீக்கம் செய்யப்பட்டது குறித்து கேள்வி எழுப்பினார்.

    அதற்கு இது குறித்து உன்னிடம் விளக்கம் சொல்ல வேண்டியதில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் தரக்குறைவாகவும் பேசி உள்ளனர். அதன் காரணமாகவே செல்வம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.
    ×