என் மலர்
நீங்கள் தேடியது "Ezhumin Trailer"
வி.பி.விஜி இயக்கத்தில் விவேக், தேவயானி நடிப்பில் உருவாகி வரும் ‘எழுமின்’ படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. #EzhuminTrailer
வையம் மீடியாஸ் வழங்கும் படம் ‘எழுமின்’. இதில் விவேக், தேவயானி, பிரவீன், ஸ்ரீஜித், வினித், சுகேஷ், கிருத்திகா, தீபிகா, அழகம் பெருமாள், பிரேம் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.
கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்துக்கு கணேஷ் சந்திரசேகர் இசை அமைத்துள்ளார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி இருக்கிறார் வி.பி.விஜி. சமீபத்தில் வெளியான ‘உரு’ படத்தை தயாரித்த இவர், இந்த படத்தில் இயக்குனராக அறிமுகமாகிறார்.

தற்காப்பு கலைகளை தங்களது விருப்பமாக தேர்ந்தெடுத்து அதில் சாதிக்க நினைக்கும் ஆறு சிறுவர்களை பற்றிய கதையாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் இடம் பெறும் எழுச்சி மிகு பாடல் ஒன்றை யோகி பி பாடி இருக்கிறார். தற்போது இப்படத்தின் டிரைலரை மே 21ம் தேதி வெளியிட இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். இந்த டிரைலரை வெளியிடுபவர் யார் என்று சஸ்பென்ஸாக வைத்துள்ளனர்.






