search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "FC Pune City"

    ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் புனேவை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது சென்னையின் எப்.சி. அணி. #ISL2018 #FCPuneCity #ChennaiyinFC
    5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னையின் எப்.சி மற்றும் எப்.சி புனே சிட்டி அணிகள் மோதின.

    ஆட்டத்தின் 9-வது நிமிடத்தில் புனே அணியை சேர்ந்த ஆஷ் குர்னியன் முதல் கோல் அடித்து தனது அணிக்கு முன்னிலை பெற்றுக் கொடுத்தார்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, சென்னை அணியை சேர்ந்த மாலிசன் ஆல்வ்ஸ் 54-வது நிமிடத்திலும், கிரிகோரி நெல்சன் 56-வது நிமிடத்திலும், இனிகோ கால்டெரின் 69-வது நிமிடத்திலும், தோய் சிங் 72வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்து தனது அணிக்கு வலு சேர்த்தனர்.

    ஆட்டத்தின் இறுதியில் புனே அணியை சேர்ந்த ஜோனாதன் 90-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.

    இதன்மூலம், சென்னையின் எப்.சி அணி 4- 2 என்ற கோல் கணக்கில் புனே அணியை வீழ்த்தி இந்த தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. #ISL2018 #FCPuneCity #ChennaiyinFC
    புனேவில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் கேரளா பிளாஸ்டர்ஸ் மற்றும் புனே சிட்டி அணிகளுக்கு எதிரான போட்டி சமனில் முடிந்தது. #ISL2018 #KeralaBlasters #FCPunecity
    புனே:

    5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இதில் புனேவில் நேற்று நடைபெற்ற போட்டியில் கேரளா பிளாஸ்டர்ஸ் மற்றும் எப்.சி. புனே சிட்டி அணிகள் மோதின.

    ஆட்டத்தின் 13-வது நிமிடத்தில் புனே அணியின் மார்கோ ஸ்டன்கோவிக் முதல் கோல் அடித்து தனது அணிக்கு முன்னிலை பெற்றுக் கொடுத்தார். இதையடுத்து, முதல் பாதி முடிவில் புனே அணி ஒரு கோல் அடித்து முன்னிலை பெற்றது.

    இதேபோல், ஆட்டத்தின் இரண்டாவது பாதியில், கேரளா பிளாஸ்டர்ஸ் அணியின் நிகோலா கிரெம்வரிக் ஒரு கோல் அடித்து 1-1 என ஆட்டத்தை சமனிலைப்படுத்தினார். 

    இறுதியில், எப்.சி. புனே சிட்டி அணி மற்றும் கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 1- 1 என்ற கோல் கணக்கில் சமனிலை பெற்றது. இந்த ஆட்டத்தின் முடிவில் புள்ளிப் பட்டியலில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. #ISL2018 #KeralaBlasters #FCPunecity
    புனேவில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் எப்.சி புனே சிட்டி அணியை 3 - 0 என்ற கோல் கணக்கில் பெங்களூரு எப்.சி. அணி வீழ்த்தி வெற்றி பெற்றது. #ISL2018 #BengaluruFC #FCPuneCity
    புனே:

    5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இதில் புனேவில் நடைபெற்ற போட்டியில் பெங்களூரு எப்.சி, எப்.சி. புனே சிட்டி அணிகள் மோதின.

    ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்து இரு அணிகளும் நிதானமாக ஆடின. முதல் பாதியின் இறுதியில் பெங்களூரு அணியை சேர்ந்த சுனில் சேத்ரி அடுத்தடுத்து 41 மற்றும் 43 வது நிமிடங்களில் கோல் அடித்து தனது அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார்.

    இதையடுத்து, முதல் பாதியில் பெங்களூரு அணி 2-0 என முன்னிலை வகித்தது. பெங்களூரு அணியினரின் ஆட்டத்துக்கு புனே அணியினரால் ஈடுகொடுக்க முடியவில்லை.



    ஆட்டத்தின் 64வது நிமிடத்தால் மிக்கு ஒரு கோல் அடித்தார். அதன்பின் ஆட்ட நேர இறுதிவரை எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.

    இறுதியில், பெங்களூரு அணி புனே அணியை 3 - 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. அத்துடன் புள்ளிப்பட்டியலில்  முதலிடத்தையும் பெற்றுள்ளது. #ISL2018 #BengaluruFC #FCPuneCity
    மும்பையில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் புனே அணியை 2-0 என்ற கோல் கணக்கில் மும்பை அணி வீழ்த்தி வெற்றி பெற்றது. #ISL2018 #MumbaiCityFC #FCPuneCity
    மும்பை:

    5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மும்பையில் நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை சிட்டி எப்.சி, எப்.சி புனே சிட்டி அணிகள் மோதின.

    ஆட்டத்தின் 25-வது நிமிடத்தில்  மும்பை மொடோ சுகோ முதல் கோல் அடித்தார். தொடர்ந்து, ரபெல் பாஸ்டோஸ் 45வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இதையடுத்து, 2-0 என்ற கோல் கணக்கில் முதல் பாதியில் முன்னிலை வகித்தது.

    ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் எந்த அணியினரும் கோல் அடிக்கவில்லை. இறுதியில், மும்பை அணி 2-0 என்ற கோல் கணக்கில் புனே அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. மும்பை அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. 

    இந்தப் போட்டியில் தோல்வியடைந்தன் மூலம் நடப்பு ஐஎஸ்எல் கால்பந்து சீசனின் முதல் 2 போட்டிகளிலும் புனே அணி தோல்வியடைந்துள்ளது. #ISL2018 #MumbaiCityFC #FCPuneCity
    ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் புனே சிட்டி மற்றும் டெல்லி டைனமோஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 1-1 என சமனில் முடிந்தது. #ISL2018 #FCPuneCity #DelhiDynamos
    டெல்லி:

    5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி சமீபத்தில் தொடங்கியது. இதில் சென்னையின் எப்.சி., பெங்களூரு எப்.சி., நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி), எப்.சி.கோவா, மும்பை சிட்டி, ஜாம்ஷெட்பூர், அட்லெடிகோ டி கொல்கத்தா, கேரளா பிளாஸ்டர்ஸ், டெல்லி டைனமோஸ், புனே சிட்டி ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் உள்ளூர், வெளியூர் அடிப்படையில் 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்குள் நுழையும்.

    டெல்லியில் நேற்றிரவு நடந்த லீக் ஆட்டத்தில் எப்.சி. புனே சிட்டி அணியும், டெல்லி டைனமோஸ் அணியும் சந்தித்தன.

    இரு அணிகளும் தொடக்கத்தில் இருந்தே பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தின. முதல் பாதியின் இறுதியில் டெல்லி அணியின் ராணா கராமி ஒரு கோல் அடித்து தனது அணிக்கு முன்னிலை தேடிக் கொடுத்தார். இதனால் முதல் பாதியில் டெல்லி அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.

    இதன் தொடர்ச்சியாக, ஆட்டத்தின் இறுதியில், புனே அணியின் டிகோ கார்லஸ் ஒரு கோல் அடித்தார். இதன்மூலம்  1-1 என ஆட்டம் சமனிலையில் முடிந்தது. #ISL2018 #FCPuneCity #DelhiDynamos
    ×