search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Felix Auger Aliassime"

    • ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் பெலிக்ஸ் அகர் அலியாசிம், டாமி பாலுடன் மோதினர்.
    • இதில் முதல் 2 செட்டை ஆளுக்கு ஒன்றாக கைப்பற்றினர்.

    அடிலெய்டு டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் கனடா வீரரான பெலிக்ஸ் அகர் அலியாசிம், அமெரிக்காவின் டாமி பாலுடன் பலப்பரீட்சை நடத்தினார்.

    இதில் முதல் 2 செட்டை ஆளுக்கு ஒன்றாக கைப்பற்றிய நிலையில், 3-வது செட்டை பெலிக்ஸ் அகர் கைப்பற்றி வெற்றி பெற்றார். பெலிக்ஸ் இந்த ஆட்டத்தில் 7-6, 3-6 மற்றும் 6-4 என்ற செட் கணக்கில் போராடி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

    ×