என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "first look poster"

    ஹாப்பி ராஜ் படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார்.

    இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ்-ன் அடுத்த படத்தை அறிமுக இயக்குனரான மரியா ராஜா இளஞ்செழியன் இயக்குகிறார். அவர் பிரதீப் ரங்கநாதனின் 'லவ் டுடே' படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியவர்.

    இந்தப் படத்தில் ஜிவி பிரகாஷ்-க்கு ஜோடியாக ஸ்ரீ கௌரி பிரியா நடிக்கிறார். மேலும் இந்த படத்தின் மூலம் 11 வருடங்களுக்குப் பிறகு தமிழ் சினிமாவிற்கு அப்பாஸ் கம்பேக் கொடுக்கிறார். இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார்.

    மேலும் இப்படத்தை பியாண்ட் பிக்சர்ஸ் (Beyond Pictures) நிறுவனம் தயாரிக்கிறது.

    இந்த படத்தின் டைட்டில் போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டது. படத்திற்கு ஹேப்பி ராஜ் என பெயரிடப்பட்டுள்ளது. இப்படம் ஒரு ரொமாண்டிக் காமெடி படமாக இருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

    இன்று மாலை 'ஹாப்பி ராஜ்' படத்தின் First Look போஸ்டர் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில், நடிகர் துல்கர் சல்மான் ஹாப்பி ராஜ் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

    வித்தியாசமான களத்தில் உருவாகியுள்ள "சாவு வீடு" நவம்பர் மாதம் திரைக்கு வருகிறது.

    ஆண்டன் அஜித் புரடக்சன்ஸ் நிறுவனம் சார்பில், ஆண்டன் அஜித் தயாரித்து இயக்கியுள்ள திரைப்படம் "சாவு வீடு".

    புதுமையான களத்தில் வித்தியாசமான கமர்சியல் படமாக உருவாகியுள்ள இப்படம் வரும் நவம்பர் திரைக்கு வருகிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடமும் திரை ஆர்வலர்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

    சாவு வீடு எனும் தலைப்பே வித்தியாசமான சுவாரஸ்யத்தை ஏற்படுத்த, வீட்டுச் சுவற்றில் வித்தியாசமாக மாட்டி வைக்கப்பட்டிருக்கும் கதாப்பாத்திரங்களின் சாவுப்புகைப்படங்கள் நிறைந்திருக்கும், வித்தியாசமான ஃபர்ஸ்ட் லுக், பார்த்தவுடன் ஆவலைத் தூண்டுகிறது.

    இப்படத்தினை பற்றி அறிமுக இயக்குநர் ஆண்டன் அஜித் கூறுகையில்," ஒரு சாவு வீடு, அங்கு எதிர்பாராமல் நடக்கும் ஒரு அதிரடி திருப்பம், அதைத்தொடர்ந்து நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து, கலகலப்பான நகைச்சுவையுடன் மாறுபட்ட கமர்ஷியல் படமாக இப்படத்தை உருவாக்கியுள்ளோம்.

    கதையை எழுதுவதற்கு முன்பே தலைப்பை எழுதிவிட்டேன். கதைக்கு இதைவிட பொருத்தமான தலைப்பு இருக்காது. படம் பார்க்கும் போது ரசிகர்கள் கண்டிப்பாக அதை உணர்வார்கள். ரசிகர்களுக்கு இப்படம் ஒரு வித்தியாசமான அனுபவமாக இருக்கும்.

    சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

    கைதி, மாஸ்டர் படங்களில் நடித்த உதய் தீப், பேட்டை படத்தில் நடித்த ஆதேஷ்பாலா ஆஷிகா, ராட்சசன் யாசர், மாஸ்டர் அஜய், கவிதா சுரேஷ், பிரேம் K. சேஷாத்ரி, ஷ்யாம் ஜீவா, பவனா ஆகியோர் முக்கிய காதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில் நவம்பர் இறுதியில் திரைக்கு கொண்டுவர படக்குழு திட்டமிட்டுள்ளது.


    கே.பி.ஜெகன் தற்போது 'ரோஜா மல்லி கனகாம்பரம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.

    கோலிவுட்டில் புதிய கீதை, கோடம்பாக்கம், ராமன் தேடிய சீதை ஆகிய படங்களை இயக்கியவர் கே.பி.ஜெகன்.

    இப்படங்களை இயக்கியதோடு, மாயாண்டி குடும்பத்தார், மிளகா, நாகராஜ சோழன் எம்.ஏ, எம்.எல்.ஏ உள்பட பல படங்களிலும் அவர் நடித்துள்ளார்.

    இந்நிலையில், கே.பி.ஜெகன் தற்போது 'ரோஜா மல்லி கனகாம்பரம்' என்ற படத்தை இயக்கி வருகிறார். இயக்குவதுடன் இப்படத்தில் நாயகனாகவும் அவர் நடிக்கிறார்.

    இப்படத்தை 'யுனைடெட் ஆர்ட்ஸ்', எஸ். கே. செல்வகுமார் தயாரிக்கிறார். படத்தின் டைட்டில் டீஸர் ஏற்கனவே வெளியானது.

    இந்நிலையில், ரோஜா மல்லி கனகாம்பரம் படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

    இதனை, விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாழ்த்துகளுடன் பகிர்ந்துள்ளார்.

    அதில் அவர்," வாழ்த்துகள் அன்பு அண்ணன் ஜெகன் சார். இந்த படம் உங்கள ஒரு நல்ல நடிகராகவும், ஒரு சிறந்த இயக்குனராகவும் நிலை நிறுத்தும்.. லவ் யூ" என குறிப்பிட்டுள்ளார்.

     

    • சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு SK23 படத்தின் டைட்டில் டீசரை படக்குழு வெளியிட்டது.
    • ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசை அமைக்கிறார்.

    சிவகார்த்திகேயன் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தனது 23-வது திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

    அடுத்ததாக சிபி சக்கரவர்த்தியின் இயக்கத்தில் 24-வது படத்தில் நடிக்க உள்ளார். சுதா கொங்கரா இயக்கத்தில் 25-வது படமான 'பராசக்தி' படத்திலும் நடித்து வருகிறார்.

    இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    இந்த படத்தை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசை அமைக்கிறார்.

    இன்று சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு SK23 படத்தின் டைட்டில் டீசரை படக்குழு வெளியிட்டது. படத்திற்கு மதராஸி என்ற தலைப்பு வைத்துள்ளனர். அதனுடன், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டது.

    ஆக்சன் கலந்த கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது.

    திரைப்படம் ஒரு அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. திரைப்படத்தின் ஆடியோ உரிமையை ஜங்கிலி மியூசிக் நிறுவனம் வாங்கியுள்ளது. இந்நிலையில், மதராஸி படத்தின் 2வது லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

     

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 167-வது படத்திற்கு ‘தர்பார்’ என பெயரிடப்பட்டு, அதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று காலை வெளியானது. இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். #Thalaivar167 #ARM
    ‘பேட்ட’ படத்தை தொடர்ந்து ரஜினி அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இது ரஜினி நடிக்கும் 167-வது படமாகும். இந்த படத்திற்கான முன் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வந்த படக்குழு, தற்போது படப்பிடிப்புக்கு முழுமையாக தயாராகி விட்டது. 



    இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். ரஜினியின் ‘பேட்ட’ படத்துக்கும் முருகதாசின் ‘கத்தி’ படத்துக்கும் இசையமைத்த அனிருத், இந்தப் படத்துக்கும் இசையமைக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நாளை தொடங்க உள்ளது.

    இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று காலை வெளியிடப்பட்டது. இந்த படத்திற்கு ‘தர்பார்’ என பெயரிடப்பட்டு, பர்ஸ்ட் லுக் போஸ்டரை, தயாரிப்பு நிறுவனமான லைகா வெளியிட்டுள்ளது.

    படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் குறித்த தகவல்களை படக்குழு விரையில் வெளியிடும். ஏ.ஆர்.முருகதாஸ் - ரஜினிகாந்துடன் முதன்முறையாக இணைவதால், இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. #Thalaivar167 #ARM
    ×