search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "free scooter"

    ம.பி. மாநிலத்துக்கான தேர்தல் அறிக்கையை பா.ஜனதா வெளியிட்டுள்ளது. அதில் 12-ம் வகுப்பு பொது தேர்வில் 75 சதவித மதிப்பெண்களுக்கு மேல் பெறும் மாணவிகளுக்கு இலவசமாக ஸ்கூட்டி வழங்கப்படும். என்று கூறப்பட்டுள்ளது. #MadhyaPradeshelection #bjpelectionmanifesto

    போபால்:

    230 தொகுதிகளை கொண்ட மத்திய பிரதேச மாநில சட்டசபைக்கு வருகிற 28-ந்தேதி தேர்தல் நடக்கிறது.

    பா.ஜனதா தொடர்ந்து 4-வது முறையாக ஆட்சியை கைப்பற்றும் ஆர்வத்தில் உள்ளது. காங்கிரஸ் கட்சி 15 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை வெல்லும் வேட்கையில் இருக்கிறது.

    இந்த நிலையில் மத்திய பிரதேச மாநிலத்துக்கான தேர்தல் அறிக்கையை பா.ஜனதா வெளியிட்டுள்ளது. மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி, முதல்- மந்திரி சிவ்ராஜ்சிங் சவுகான் ஆகியோர் இதை வெளியிட்டனர்.

    இளைஞர்கள், பெண்கள், விவசாயிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பல்வேறு வாக்குறுதிகளை அளித்துள்து. பா.ஜனதா தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

    ஏழைகளுக்கு இலவச கல்வி வசதி அளிக்கப்படும். 12-ம் வகுப்பு பொது தேர்வில் 75 சதவித மதிப் பெண்களுக்கு மேல் பெறும் மாணவிகளுக்கு இலவசமாக ஸ்கூட்டி வழங்கப்படும்.

    மாநிலத்தில் உள்ள இளைஞர்கள் முன்னேற்றம் அடையும் வகையில் ஆண்டுக்கு 10 லட்சம் வேலை வாய்ப்புகள் மற்றும் சுயமாக தொழில் முனையும் வாய்ப்புகள் உருவாக்கப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.5 லட்சம் கோடி அளவுக்கு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் தொழில் துறை திட்டங்கள் செயல் படுத்தப்படும். 10 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வசதி செய்து தரப்படும்.

    விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ரூ.40 ஆயிரம் கோடிக்கு கடன் வழங்கப்படும். சாகுபடி நிலப்பரப்பு அடுத்த 5 ஆண்டுகளில் 80 லட்சம் ஹெக்டேர்களாக அதிகரிக்கப்படும்.

    இவ்வாறு தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளனர். #MadhyaPradeshelection #bjpelection manifesto

    ×