search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gauri Vratham"

    • கவுரி தேவியை ஆவாகனம் செய்து வழிபடலாம்.
    • நைவேத்தியமாக சர்க்கரை பொங்கல் வைக்கலாம்.

    இன்று (வியாழக்கிழமை) திரைலோக்கிய கவுரி விரத தினமாகும். இன்று கவுரி தேவியை பெண்கள் வழிபட்டால் அளவற்ற பலன்களைப் பெற முடியும். இன்றிரவு வீட்டில் கலசம் அமைத்து கவுரி தேவியை ஆவாகனம் செய்து வழிபடலாம். நைவேத்தியமாக சர்க்கரை பொங்கல் வைக்கலாம்.

    கலசம் அருகே 16 விளக்குகள் ஏற்றி வைத்து தீப-தூப ஆராதனை செய்து வழிபடுவது கூடுதல் நன்மைகளைத் தரும். இன்று கவுரி தேவியை வழிபடும் பெண்களுக்கு கேட்கும் வரம் கிடைக்கும்.


    திருமண வயதில் உள்ள பெண்கள் இன்றிரவு கவுரியை மனம் உருக வழிபட்டால் நிச்சயம் விரைவில் கல்யாணம் கைகூடும். நல்ல கணவர் தேடி வருவார்.

    வீட்டில் கவுரி பூஜை செய்து முடிந்ததும், அருகில் உள்ள பெண்களுக்கு மங்கலப் பொருட்கள் கொடுத்து ஆசிப்பெறலாம். இது வீட்டில் செல்வ கடாட்சம் ஏற்பட செய்யும்.

    ×