search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Glycemic foods"

    • பி.சி.ஒ.எஸ் இருப்பவர்கள் குறைந்த கிளைசெமிக் உணவுகளை எடுக்க வேண்டும்.
    • ஆரோக்கியமற்ற உணவுகளை தவிர்க்க வேண்டும்.

    நீர்க்கட்டி பிரச்சனை என்னும் பாலிசிஸ்டிக் ஓவரியன் இருக்கும் பெண்களுக்கு இது குறிப்பிடத்தக்க தாக்கத்தை உண்டு செய்கிறது என்கிறது ஆய்வுகள். பி.சி.ஒ.எஸ் பிரச்சனை கொண்டு இருப்பவர்கள் குறைந்த கிளைசெமிக் உணவுகளை எடுத்துகொள்ள வேண்டும். ஏனெனில் சில கார்போஹைட்ரேட்டுகள் போன்ற உணவுகளை விட இன்சுலின் அளவு அதிகமாகவோ அல்லது விரைவாகவோ இவை உண்டாக்காது.

    குறைந்த கிளைசெமிக் உணவுகளில் உள்ள முழு தானியங்கள், பருப்பு வகைகள், கொட்டைகள், விதைகள், பழங்கள், மாவுச்சத்துள்ள காய்கறிகள் மற்றும் பதப்படுத்தப்படாத குறைந்த கார்போஹைட்ரேட் உணவுகள் அடங்கும்.

    அழற்சி எதிர்ப்பு உணவு பெர்ரி, கொழுப்பு நிறைந்த மீன், இலைகள் கொண்ட காய்கறிகள், கீரைகள் மற்றும் ஆலிவ் எண்ணெய் போன்ற அழற்சி எதிர்ப்பு உணவுகள் எடுத்துகொள்ளலாம்.

    இதய நோய்களின் ஆபத்து அல்லது தாக்கத்தை குறைக்க உயர் ரத்த அழுத்த உணவை தவிர்த்து உணவு முறைகளை மாற்ற மருத்துவர்கள் பரிந்துரை செய்வார்கள். இவையும் பி.சி.ஓ.எஸ் அறிகுறிகளை நிர்வகிக்க உதவுதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது.

    மீன், கோழி, பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றூம் குறைந்த கொழுப்புள்ள பால் பொருள்கள் கொண்ட டயட்டை 8 வாரங்கள் தொடர்ந்து பின்பற்றியவர்கள் மற்றவர்களை காட்டிலும் இன்சுலின் எதிர்ப்பு மற்றும் தொப்பை கொழுப்பு குறைவதை கண்டதாக 2015-ம் ஆண்டு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

    ஆரோக்கியமான பி.சி.ஓ.எஸ் உணவில் இயற்கை உணவுகள், பதப்படுத்தப்படாத உணவுகள், உயர் நார்ச்சத்து கொண்ட உணவுகள், சால்மன், டுனா, மத்தி மற்றும் கானாங்கெளுத்தி உள்ளிட்ட கொழுப்பு மீன்கள், காலே, கீரைகள், அடர்ந்த பச்சை நிற காய்கறிகள், சிவப்பு திராட்சை, பெர்ரி பழங்கள், கருப்பட்டை, அடர் சிவப்பு பழங்கள், காய்களில் ப்ரக்கோலி, காலிஃப்ளவர், உலர்ந்த பீன்ஸ் வகைகள், பயறு வகைகள், ஆலிவ் எண்ணெய், அவகேடோ மற்றும் தேங்காயெண்ணெய் போன்ற ஆரோக்கியமான கொழுப்புகள், பைன் கொட்டைகள், அக்ரூட் பருப்புகள், பாதாம் மற்றும் பிஸ்தா உள்ளிட்ட கொட்டைகள், கருப்பு சாக்லேட், மசாலாவில் இலவங்கப்பட்டை போன்றவை ஆரோக்கியமான உணவு முறையில் பின்பற்ற வேண்டியவை.

    கர்ப்பப்பை நீர்க்கட்டி பிரச்சனை உள்ள பெண்கள் ஆரோக்கியமற்ற உணவுகளை தவிர்க்க வேண்டும். குறிப்பாக ரீபைண்ட் செய்யப்பட்ட கார்போஹைட்ரேட் உணவுகள், வெள்ளை ரொட்டி, சுத்திகரிக்கப்பட்ட உணவுகள், துரித உணவுகள், வறுத்த உணவுகள், சோடாக்கள் மற்றும் எனர்ஜி பானங்கள் போன்ற சர்க்கரை பானங்கள், பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள், திடமான கொழுப்புகள், அதிகப்படியான சிவப்பு இறைச்சி போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

    ×