search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Govind Vasantha"

    • விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான '96' படத்தை இயக்கி பிரபலமான இயக்குனர் பிரேம் குமார்.
    • நடிகர் கார்த்தியை வைத்து மெய்யழகன் படத்தை பிரேம் குமார் இயக்கி வருகிறார்.

    விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான '96' படத்தை இயக்கி பிரபலமான இயக்குனர் பிரேம் குமார். தமிழ் சினிமாவில் தெய்வீக காதல் கதையை கூறிய திரைப்படங்களில் 96 திரைப்படம் முக்கியமானவை.

    அதைத்தொடர்ந்து நடிகர் கார்த்தியை வைத்து மெய்யழகன் படத்தை பிரேம் குமார் இயக்கியுள்ளார்.'கார்த்தியின் 27'-வது படமான இந்த படத்தை சூர்யா- ஜோதிகாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ளது.

    இப்படத்தில் அரவிந்த்சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் இந்தாண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

    படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை கோயம்புத்தூரில் மிக பிரம்மாண்ட முறையில் நடைப்பெறவுள்ளது. 96 திரைப்படத்திற்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா இப்படத்திற்கும் இசையமைத்துள்ளார். இதனால் இப்படத்தின் பாடல்கள் மீது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    96 படத்தில் தனது பாடல்களை பயன்படுத்தியது குறித்த இளையராஜாவின் கருத்து சர்ச்சைக்குள்ளாகிய நிலையில், இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா, என்னவானாலும் தான் இளையராஜாவின் ரசிகன் என்று கூறியிருக்கிறார்.
    பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி - திரிஷா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 96 படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. படத்தின் வெற்றிக்கு படத்தின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் முக்கிய காரணமாக அமைந்தன. படத்தில் இளையராஜாவின் பிரபல பாடல்களை பயன்படுத்தி இருந்தார்கள்.

    இதுபற்றி இளையராஜா சமீபத்தில் அளித்த பேட்டியில், எனது பாடல்களை பயன்படுத்தியது தவறு. அந்த காலத்துக்கு தகுந்தாற்போன்ற பாடலை இசையமைத்து இருக்கலாமே. இது அவர்களின் இயலாமை மற்றும் ஆண்மை இல்லாத்தனம்” என்று சாடினார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. இளையராஜாவின் கருத்துக்கு சமூக வலைத்தளங்களில் ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பின.

    இந்த நிலையில், படத்தின் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு என்னவானாலும் இளையராஜாவின் ரசிகன் தான் என்று குறிப்பிட்டுள்ளார்.

    மேலும் அந்த வீடியோவில் இளையராஜா இசையமைத்து தளபதி படத்தில் இடம்பெற்றிருந்த கண்மணி கண்ணால் ஒரு சேதி என்ற பாடலின் பின்னணி இசையை வாசிக்கிறார்.

    கோவிந்த் வசந்தாவின் பெருந்தன்மையான இந்த கருத்தை வரவேற்று பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.

    தனது பாடல்களை ‘96’ படத்தில் பயன்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள இளையராஜா, அப்படி செய்வது இது அவர்களின் இயலாமை மற்றும் ஆண்மை இல்லாத்தனத்தை காட்டுவதாக கூறினார்.
    இளையராஜா இசையமைத்த பாடல்கள் கச்சேரிகளில் பாடப்பட்டு வந்தன. இதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்தார். தனது பாடல்களை அனுமதி இல்லாமல் மேடை கச்சேரிகளில் பாடக்கூடாது என்று அறிவித்தார். மீறி பாடினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.

    வெளிநாடுகளில் இளையராஜா இசையில் உருவான பாடல்களை எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடி வந்தார். அவருக்கும் இளையராஜா நோட்டீசு அனுப்பினார். இது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சமீபத்தில் திரைக்கு வந்த சில படங்களில் இளையராஜாவின் பாடல்கள் பயன்படுத்தப்பட்டு இருந்தன. விஜய் சேதுபதி, திரிஷா நடித்து திரைக்கு வந்த ‘96’ படத்திலும் இளையராஜாவின் பழைய பாடல்களை பயன்படுத்தி இருந்தார்கள். இதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்தார்.



    அந்த படத்தில் “எனது பாடல்களை பயன்படுத்தியது தவறு. அந்த காலத்துக்கு தகுந்தாற்போன்ற பாடலை இசையமைத்து இருக்கலாமே. இது அவர்களின் இயலாமை மற்றும் ஆண்மை இல்லாத்தனம்” என்று சாடினார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. இளையராஜாவின் கருத்துக்கு சமூக வலைத்தளங்களில் ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பின.

    இந்த நிலையில் ‘96’ படத்தில் பணியாற்றிய ஒருவர் ‘96’ படத்தில் நாங்கள் பயன்படுத்திய இளையராஜாவின் ஒவ்வொரு பாடலுக்கும் அனுமதி பெறப்பட்டது. அந்த பாடல்களுக்கு ராயல்டியும் கொடுக்கப்பட்டது என்று ட்விட்டரில் பதில் அளித்துள்ளார்.

    சாதி அரசியலையும், சாதிய ஒடுக்கு முறைகளையும் கேள்வி கேட்டு அதற்கான தீர்வைச் சொல்லும் படமாக உறியடி 2 வந்துள்ளதாக படத்தை இயக்கி நடித்திருக்கும் விஜய் குமார் கூறினார். #Uriyadi2 #VijayKumar
    இளம் இயக்குநர் விஜய்குமார் இயக்கி நடித்த உறியடி திரைப்படம் சிறிய பட்ஜெட்டில் உருவாகினாலும், தமிழ் சினிமாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மாற்று சினிமாவை நோக்கி இளைஞர்கள் வீறுநடை போடுவது சினிமாவிற்கு ஆரோக்கியமானது. அந்த வகையில் உறியடி படத்தில் பேசிய சாதிய அரசியலை, இன்னும் வலிமையாக பேச உள்ளது உறியடி 2. சூர்யா தயாரித்துள்ள இப்படத்தை எழுதி இயக்கி நடித்திருக்கும் விஜய்குமார், "உறியடி, உறியடி 2 படங்கள் பற்றி பேசினார்.

    "தற்போதைய சமூகத்தில் சாதிப்பிரிவினை தான் பெரும் பிரச்சனை. அதுதான் உறியடி, உறியடி 2 வருவதற்கான காரணம். எனக்குக் கம்யூனிச சிந்தனையோ, புத்தகம் படிக்கிற பழக்கமோ இல்லை. எனக்கு ரொம்ப பிடிச்சது சினிமா. அதை ஆத்மார்த்தமா கொடுக்கிறது தான் என் திறமைக்கு நான் கொடுக்குற மரியாதை. களத்துல இறங்கி மக்களுக்காக நான் எதுவும் செய்யவில்லை. ஆனா, மக்களைச் சுலபமா அணுகுற விசயம் சினிமா. சாதி அரசியலையும், சாதிய ஒடுக்கு முறைகளையும் கேள்வி கேட்டு அதற்கான தீர்வைச் சொல்லும் படமாக உறியடி 2 வந்துள்ளது.



    இந்த படம் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இல்லாமல் வேறுவிதமாக உருவாக்கப்பட்டுள்ளது. முதல் பாகத்தில் நடித்த நடிகர்கள், சுதாகர் உள்ளிட்ட யூடியூப் பிரபலங்களும் நடித்திருக்கிறார்கள். உறியடியில் பணிபுரிந்த தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் இதிலும் பணிபுரிந்துள்ளனர். கோவிந்த் வசந்தா இந்த படத்திற்கு இசையமைக்கிறார். படம் கோடை விடுமுறையில் வெளியாக இருக்கிறது. #Uriyadi2 #VijayKumar

    ×