search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "green houses"

    வரும் ஆண்டிலும் முதல்-அமைச்சரின் சூரிய மின் சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் 20 ஆயிரம் வீடுகள் கட்டித் தரப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #TamilNaduBudget #TNBudget2019 #Budget2019 #OPS
    சென்னை:

    தமிழக சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் உள்ள அம்சங்கள் வருமாறு:-

    பிரதம மந்திரி வீட்டு வசதித் திட்டத்தின் (ஊரகம்) கீழ், 2019-2020-ம் ஆண்டில் ஒரு லட்சம் வீடுகள் கட்டுவதற்கு இந்த அரசு உத்தேசித்துள்ளது.

    ஒரு வீட்டிற்கு அலகுத்தொகை 1.20 லட்சம் ரூபாய் என மத்திய அரசு நிர்ணயித்து, அத்தொகையை மத்திய அரசும், மாநில அரசும் முறையே 60 சதவீதம் மற்றும் 40 சதவீதம் என ஏற்றுள்ளன.

    கான்கிரீட் மேற்கூரை அமைப்பதற்காக மாநில அரசு, கூடுதல் நிதியாக 50 ஆயிரம் ரூபாயை ஒவ்வொரு வீட்டிற்கும் வழங்குகிறது. இதனால் ஒரு வீட்டிற்கான அலகுத்தொகை 1.70 லட்சம் ரூபாயாகவும், அதில் மாநில அரசின் பங்குத் தொகை 98 ஆயிரம் ரூபாயாகவும் உள்ளது.

    2019-2020-ம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 2,276.14 கோடி ரூபாய் பிரதம மந்திரி வீட்டு வசதித் திட்டத்திற்காக (ஊரகம்) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டைப் போன்றே, வரும் ஆண்டிலும் முதல்-அமைச்சரின் சூரிய மின் சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் 20 ஆயிரம் வீடுகள் கட்டித் தரப்படும்.

    இத்திட்டத்திற்காக 2019-2020ம் அண்டிற்கான வரவு-செலவுத் திட்டத்தில் 420 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    2019-2020-ம் ஆண்டிற்கான வரவு-செலவு திட்ட மதிப்பீடுகளில், 18,273.96 கோடி ரூபாய் ஊரக வளர்ச்சித் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது. #TamilNaduBudget #TNBudget2019 #Budget2019 #OPS
    ×