என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Gujarat Board results"
- மிக குறைந்த தேர்ச்சி விகிதம் கொண்ட மாவட்டமாக தாஹோத் இருக்கிறது.
- மாநிலத்தின் தாய் மொழியான குஜராத்தியில் 96 ஆயிரம் மாணவர்கள் தோல்வி.
குஜராத் மாநிலத்தில் 10-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் கடந்த வாரம் வெளியானது. இதில் ஒட்டுமொத்தத்தில் 64.62 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். மாநிலத்தின் சூரத் மாவட்டத்தில் அதிகபட்சமாக 76 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.
மிக குறைந்த தேர்ச்சி விகிதம் கொண்ட மாவட்டமாக தாஹோத் இருக்கிறது. இந்த மாவட்டத்தில் மொத்தமாக 40.5 சதவீதம் பேர் தான் தேர்ச்சி பெற்றனர். 272 பள்ளிகளில் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. 1084 பள்ளிகளில் 30 சதவீதத்திற்கும் குறைவான தேர்ச்சி விகிதம் பதிவாகி இருக்கிறது.
இதில் மிகவும் அதிர்ச்சிகர தகவல், 157 பள்ளிகளை சேர்ந்த மாணவர்களில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை. மறு தேர்வுக்கு விண்ணப்பித்த 1 லட்சத்து 65 ஆயிரத்து 690 மாணவர்களில் 27 ஆயிரத்து 446 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கிரேடு வாரியாக 6 ஆயிரத்து 111 மாணவர்கள் A1 கிரேடிலும், 44 ஆயிரத்து 480 மாணவர்கள் A2 கிரேடிலும், 1 லட்சத்து 27 ஆயிரத்து 652 மாணவர்கள் B2 கிரேடிலும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாநிலத்தின் தாய் மொழியான குஜராத்தியில் 96 ஆயிரம் மாணவர்களும், கணித பாடத்தில் 1 லட்சத்து 96 ஆயிரம் மாணவர்களும் தோல்வி அடைந்தனர்.