என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » hc extends bail period
நீங்கள் தேடியது "HC Extends Bail Period"
மருத்துவ சிகிச்சைக்காக பீகார் முன்னாள் முதல் மந்திரி லாலு பிரசாத் யாதவுக்கு அளித்த ஜாமினை வரும் 20-ம் தேதி வரை நீட்டித்து ராஞ்சி உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. #LaluPrasad
ராஞ்சி:
பீகாரில் நடந்த கால்நடை தீவன ஊழல் வழக்கில் தண்டனை பெற்று ராஞ்சி நகரில் உள்ள பிர்ஸா முன்டா சிறையில் அடைக்கப்பட்டிருந்த பீகார் முன்னாள் முதல் மந்திரி லாலு பிரசாத் யாதவை ஆறுவார காலம் மருத்துவ சிகிச்சைக்காக ஜாமினில் விடுவித்து ராஞ்சி ஐகோர்ட் கடந்த மே மாதம் 11-ம் தேதி உத்தரவிட்டது.
இதைதொடர்ந்து, கடந்த மே மாதம் ராஞ்சியில் உள்ள ரிம்ஸ் மருத்துவமனையில் இருமுறை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த லாலு பிரசாத் யாதவ், மூல நோய் அறுவை சிகிச்சைக்காக மே மாதம் 19-ம் தேதி பாட்னாவில் இருந்து மும்பை புறப்பட்டு சென்றார்.
மும்பை நகருக்கு வந்தடைந்ததும் லாலுவுக்கு குறைந்த ரத்த அழுத்தம் மற்றும் நெஞ்சு வலி ஏற்பட்டதால் மும்பை நகரில் உள்ள ஏசியன் நெஞ்சக நோய் மருத்துவமனையில் உடனடியாக லாலு அனுமதிக்கப்பட்டார்.
அங்கு தீவிர சிகிச்சை பகுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு மருத்துவர்கள் குழு சிகிச்சை அளித்தனர். உடல்நிலை தேறிய பின்னர் மும்பை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட லாலு கடந்த 8-7-2018 பாட்னாவில் உள்ள தனது வீட்டுக்கு திரும்பினார். அப்போது அவரது ஜாமின் ஆகஸ்ட் 14-ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டது.
இதற்கிடையில், உடல்நிலை மீண்டும் மோசமடைந்ததால் கடந்த 6-ம் தேதி மும்பைக்கு அழைத்து வரப்பட்ட லாலு ஏசியன் நெஞ்சக நோய் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், லாலுவின் ஜாமினை நீட்டிக்குமாறு ராஞ்சி ஐகோர்ட்டில் அவரது வழக்கறிஞர் பிரபாத் குமார் மனு தாக்கல் செய்திருந்தார்.
இதை பரிசீலித்த ஐகோர்ட் நீதிபதி அபரேஷ் குமார், மருத்துவ சிகிச்சைக்காக லாலுவுக்கு முன்னர் அளிக்கப்பட்ட ஜாமினை வரும் 20-ம் தேதி வரை நீட்டித்து இன்று உத்தரவிட்டுள்ளார். #LaluPrasad

×

X