search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Healthy Juice"

    தர்பூசணி கோடையில் உடலை குளிர்விக்க மிக மிக அவசியமானது. இன்று தர்பூசணியுடன் ஆரஞ்சு பழச்சாறு சேர்த்து ஜூஸ் செய்து எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    தர்பூசணி துண்டுகள் - 2 கப்                               
    ஆரஞ்சு - 2
    உப்பு - 1 சிட்டிகை                    
    தேன் - 2 டீஸ்பூன்
    ஆப்பிள் - பாதி
    ஐஸ்கட்டிகள் - சிறிதளவு

    அலங்கரிக்க :

    ஆப்பிள் துண்டுகள் - 1 டீஸ்பூன்
    புதினா இலைகள் - 3



    செய்முறை :

    ஆரஞ்சு பழத்திலிருந்து சாறு எடுத்து தனியாக வைக்கவும்.

    ஆப்பிளை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அனைத்தையும் மிக்ஸி ஜாரில் எடுத்துக்கொள்ளவும்.

    தர்பூசணியில் உள்ள விதைகளை எடுத்து விட்டு துண்டுகளாக எடுத்து வைக்கவும்.

    மிக்சியில் தர்பூசணி, ஆரஞ்சு சாறு, உப்பு, தேன், ஆப்பிள், ஐஸ்கட்டிகள் போட்டு நன்றாக அடிக்கவும்.

    அரைத்த ஜூஸை கண்ணாடி கோப்பையில் ஊற்றி பொடியாக நறுக்கிய ஆப்பிள் துண்டுகளையும் புதினா இலைகளையும் போட்டு பருகவும்.

    சத்தான தர்பூசணி ஆரஞ்சு ஜூஸ் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கிவி பழம் கொலஸ்ட்ரால், இரத்த சர்க்கரை, இரத்த அழுத்தம் ஆகியவற்றை கட்டுப்படுத்த உதவுகிறது. இன்று கிவி, ஆப்பிள் சேர்த்து ஜூஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    கிவி பழம் - 1    
    பெங்களூர் தக்காளி - 2    
    ஆப்பிள் - 1    
    இஞ்சிச் சாறு - 1/4 டீஸ்பூன்    
    தேன் - 1 டீஸ்பூன்    
    மிளகுத்தூள் - 1 சிட்டிகை.



    செய்முறை

    ஆப்பிளின் விதைகளை நீக்கி நடுப்பகுதியை தனியே எடுத்துக் கொள்ளவும்.

    கிவி பழத்தின் தோலை நீக்கிக் கொள்ளவும்.

    பிளெண்டர் (அ) மிக்ஸியில் நறுக்கிய ஆப்பிள், கிவி பழம், தக்காளியைச் சேர்த்து மைய அரைத்துக் கொள்ளவும்.

    இதனுடன் இஞ்சிச்சாறு, தேன், மிளகுத்தூள் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்யவும்.

    தேவையெனில் சிறிது நேரம் ஃபிரிட்ஜில் வைத்துக் கூலாகக் குடிக்கவும்.

    சத்தான கிவி ஆப்பிள் ஜூஸ் ரெடி.

    குறிப்பு: விட்டமின் சி மற்றும் zinc நிறைந்த கிவி பழம் ஆண்களின் உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    உடல் எடையைக் குறைக்கும் டயட்டில் உள்ளீர்களா? அப்படியெனில் அத்திப்பழ ஜூஸை உங்கள் டயட்டில் சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த ஜூஸை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    அத்திப்பழம் - கால் கிலோ
    பனங்கற்கண்டு அல்லது நாட்டு சர்க்கரை - தேவையான அளவு
    இஞ்சி - 1 துண்டு
    தேன் - 1 டீஸ்பூன்
    பால் - 1 கப்



    செய்முறை :

    அத்திப்பழத்தை சுத்தம் செய்து கொள்ளவும்.

    மிக்சியில் அத்திப்பழத்தை போட்டு அதனுடன் பனங்கற்கண்டு அல்லது நாட்டு சர்க்கரை, இஞ்சி, தேன், பால் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.

    அரைத்த ஜூஸை ஒரு தம்ளரில் ஊற்றி பருகலாம்.

    சூப்பரான சத்தான அத்திப்பழ ஜூஸ் ரெடி.

    தேவைப்பட்டால் ஐஸ் கியூப்ஸ் போட்டு பருகவும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இந்த ஜூஸை தொடர்ந்து பருகி வந்தால் நல்ல பலனை காணலாம். இன்று ஜூஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கறிவேப்பிலை - 1 கைப்பிடி
    கொத்தமல்லி - 1 கைப்பிடி
    புதினா - 1 கைப்பிடி
    எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
    இஞ்சி - சிறிய துண்டு
    உப்பு - சிறிதளவு



    செய்முறை :

    கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினாவை நன்றாக சுத்தம் செய்து கழுவி வைக்கவும்.

    இஞ்சியை தோல் நீக்கி பொடியாக நறுக்கி வைக்கவும்.

    மிக்சியில் கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா, இஞ்சி போட்டு தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து வடிகட்டி கொள்ளவும்.

    வடிகட்டிய ஜூசுடன் எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து பருகவும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    வெயில் காலத்தில் உடல் ஆரோக்கியத்திற்கு தினமும் ஜூஸ் குடிப்பது நல்லது. இன்று பாலப்பழம், தேங்காய்ப்பால் சேர்த்து ஸ்மூர்த்தி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பலாப்பழம் - 10
    தேங்காய்ப் பால் - 1 கப்
    பாதாம், முந்திரி, பிஸ்தா ஆகியவை பொடித்தது (நட்ஸ் பொடி) - 1 ஸ்பூன்
    தேன் - சுவைக்கேற்ப (தேவைப்பட்டால்)



    செய்முறை :

    மிக்சியில் பலாப்பழத்தையும், தேங்காய்ப் பாலையும் சேர்த்து நன்கு அரைக்கவும்.

    அரைத்த ஜூஸில் நட்ஸ் பொடி சேர்த்துக் கலக்கவும்.

    இதை அப்படியே கிளாஸில் ஊற்றிக் கொடுக்கலாம்.

    தேவைப்பட்டால் தேன் சேர்த்துக் கொடுக்கலாம்.

    சூப்பரான பலாப்பழம் நட்ஸ் ஸ்மூர்த்தி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    கோடை வெயில் ஆரம்பித்து விட்டது. கோடையில் உடல் சூட்டை குறைக்க அடிக்கடி ஜூஸ் குடிப்பது நல்லது. இன்று தர்பூசணி லெமன் ஜூஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    தர்பூசணி துண்டுகள் - 3
    எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
    நாட்டு சர்க்கரை அல்லது தேன் - தேவையான அளவு
    இஞ்சி - சிறிய துண்டு
    ஐஸ் கட்டிகள் - தேவையான அளவு



    செய்முறை :

    இஞ்சி துண்டை தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்.

    தர்பூசணித் துண்டுகளின் தோலை சீவி, விதைகளை நீக்கிய பின் அதனை சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும்.

    மிக்ஸியில் தர்பூசணித் துண்டுகள், தேன், துருவிய இஞ்சி, எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

    அரைத்த ஜூஸை பாத்திரத்தில் ஊற்றி, ஐஸ் கட்டிகளைப் போட்டு, சிறிது நேரம் கழித்து பருகவும்.

    சூப்பரான தர்பூசணி - லெமன் ஜூஸ் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    காலையில் குழந்தைகளுக்கு கேரட் - தேங்காய் பானம் கொடுப்பதன் மூலம் சுறுசுறுப்பு, புத்துணர்ச்சி கிடைக்கும். இன்று இந்த ஜூஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கேரட் - 2
    தேங்காய் - அரை மூடி
    தேன் அல்லது பனங்கற்கண்டு - 2 டேபிள் ஸ்பூன்
    ஏலக்காய் - 2



    செய்முறை :

    கேரட், தேங்காயை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    ஏலக்காயை பொடித்து கொள்ளவும்.

    நறுக்கிய இரண்டையும் மிக்ஸியில் போட்டு இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டவும்.

    தேன் அல்லது பனங்கற்கண்டு, பொடித்த ஏலக்காய் சேர்த்து கலந்து சிறிது நேரம் ப்ரிட்ஜில் வைத்து சில்லென்று பரிமாறவும்.

    சத்து நிறைந்த கேரட் - தேங்காய் பானம் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    உடலில் இரத்தணுக்களின் அளவு சீராக இருக்க நினைத்தால், பீட்ரூட், கேரட்டை அதிகளவு உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். இன்று இது இரண்டையும் வைத்து ஜூஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பீட்ரூட் - 3
    கேரட் - 3
    இஞ்சி - சிறிய துண்டு
    எலுமிச்சை சாறு - அரை டீஸ்பூன்
    தேன் - சுவைக்கு



    செய்முறை :

    கேரட், பீட்ரூட்டை தோல் நீக்கி சிறு துண்டுகளாக அறிந்து கொள்ளவும்.

    கேரட், பீட்ரூட், இஞ்சி, தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.

    பின்பு அரைத்ததை வடிகட்டி தேன், எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து பருகவும்.

    சத்தான பீட்ரூட் - கேரட் ஜூஸ் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    உடலில் உள்ள அதிகளவு கொழுப்பை குறைக்கும் சக்தி கொண்டது சுரைக்காய் ஜூஸ். இன்று இந்த ஜூஸை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சுரைக்காய் - 1
    மோர் - 1 கப்
    எலுமிச்சை பழம் - 1
    மிளகுத்தூள் - 1/4 டீஸ்பூன்
    உப்பு - சுவைக்கேற்ப



    செய்முறை :

    சுரைக்காய் தோலை சீவி விட்டு சிறிய துண்டுகளாக நறுக்கியோ அல்லது துருவிக் கொள்ளவும்.

    எலுமிச்சை பழத்திலிருந்து சாறு எடுத்து தனியாக வைத்து கொள்ளவும்.

    அடுப்பில் ஒரு கடாயை வைத்து சுரைக்காயைப் போட்டு லேசாக வதக்கி ஆற வைக்கவும். (எண்ணெய் ஊற்றக் கூடாது)

    வதக்கிய சுரைக்காயை மிக்ஸியில் போட்டு அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து மைய அரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.

    வடிகட்டிய ஜூஸில் மோர், மிளகுத்தூள், உப்பு, எலுமிச்சை சாறு, ஐஸ்கட்டி சேர்த்து நன்றாக கலந்து பருகலாம்.

    சுரைக்காய் ஜூஸ் ரெடி!

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×