search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "hockey world cup hockey"

    ஒடிஷாவில் நடைபெற்ற உலககோப்பை ஹாக்கி தொடரில் ஆஸ்திரேலியா அணி அயர்லாந்து அணியை 2 - 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது. #HockeyWorldCup2018 #Australia #Ireland
    புவனேஸ்வர்:

    14-வது உலக கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரத்தில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இதில் பி பிரிவில் இடம் பெற்றுள்ள அயர்லாந்து, ஆஸ்திரேலியா அணிகள் மோதின.

    ஆட்டம் தொடங்கிய 11வது நிமிடத்தில் ஆஸ்திரேலிய வீரர் பிலேக் கோவர்ஸ் முதல் கோல் அடித்து தனது அணியை முன்னிலைப் படுத்தினார்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அயர்லாந்து வீரர் ஷானோ டொனொக் 14வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து ஆட்டத்தை சமனுக்கு கொண்டு வந்தார்.

    ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 34வது நிமிடத்தில் ஆஸ்திரேலியா வீரர் டிம் பிராண்ட் அபாரமாக ஒரு கோல் அடித்தார்.

    இறுதியில், ஆஸ்திரேலியா அணி அயர்லாந்து அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருதை ஆஸ்திரேலியாவின் டிமோதி பிராண்ட் பெற்றார். #HockeyWorldCup2018  #Australia #Ireland
    ஒடிஷாவில் நடைபெற்ற உலககோப்பை ஹாக்கி தொடரில் ஒலிம்பிக் சாம்பியனான அர்ஜென்டினா அணி ஸ்பெயின் அணியை 4-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது. #HockeyWorldCup2018 #Argentina #Spain
    புவனேஸ்வர்:

    14-வது உலக கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரத்தில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது.

    இதில் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள அர்ஜென்டினா, ஸ்பெயின் அணிகள் மோதின.

    ஆட்டம் தொடங்கிய 3வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் கான்செலஸ் முதல் கோல் அடித்தார். அடுத்த நிமிடத்திலேயே அர்ஜென்டினா வீரர் அகஸ்டின் மாசெல்லி ஒரு கோல் அடித்து சமனிலைக்கு கொண்டு வந்தார். இதேபோல், ஆட்டத்தின் 14வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் ஜோசபின் ருமியு ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார்.

    இதற்கும் அடுத்த வினாடியே அர்ஜெண்டினா வீரர் அகஸ்டின் மாசெல்லி பதில் கோல் அடித்து மீண்டும் சமனிலைக்கு கொண்டு வந்தார். தொடர்ந்து கிடைத்த பெனால்டி கார்னரில் கான்சலோ பெய்லாட் கோலாக்கினார்.இதையடுத்து ஆட்டத்தின் முதல் பாதியில் அர்ஜென்டினா 3-2 என முன்னிலை வகித்தது.

    இரண்டாவது பாதியில், ஆட்டத்தின் 35வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் ரோயிஸ் ஒரு கோல் அடிக்க ஆட்டம் சமனிலை பெற்றது. கடைசியாக, ஆட்டத்தின் 49வது நிமிடத்தில் பெய்லாட் மீண்டும் ஒரு கோல் அடித்தார்.

    இறுதியில், அர்ஜென்டினா அணி ஸ்பெயின் அணியை 4-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது. #HockeyWorldCup2018 #Argentina #Spain
    ஒடிஷாவில் நடைபெற்ற உலககோப்பை ஹாக்கி தொடரில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவை 5 - 0 என்ற கணக்கில் வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது. #HockeyWorldCup2018 #India #SouthAfrica
    புவனேஸ்வர்:

    14-வது உலக கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரத்தில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது. இதில் சி பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகளும் மோதின.

    ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே இந்திய வீரர்கள் சிறப்பாக ஆடினர். ஆட்டத்தின் 10வது நிமிடத்தில் மந்தீப் சிங் முதல் கோல் அடித்து அணியின் எண்ணிக்கையை தொடங்கினார். அவரை தொடர்ந்து அக்‌ஷ்தீப் சிங் 12வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். ஆட்டத்தின் முதல் பாதியில் இந்தியா 2-0 என முன்னிலை பெற்றது.

    ஆட்டத்தின் இரண்டாவது பாதியிலும் இந்திய வீரர்கள் அபாரமாக ஆடினர். இந்திய வீரர் சிம்ரன் ஜித் சிங் 43 மற்றும் 46- வது நிமிடத்தில் தலா ஒரு கோல் அடித்தார். லலித் உபாத்யாயா 45வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.

    இறுதியில், இந்திய அணி தென்னாப்பிரிக்காவை 5 - 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது. 
    #HockeyWorldCup2018 #India #SouthAfrica
    ×