search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "hombale films"

    • கன்னட திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக இருப்பது ஹொம்பலே பிலிம்ஸ்.
    • ஹொம்பலே பிலிம்ஸ் பிரபாஸ் நடிப்பில் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் வெளியான சலார் திரைப்படத்தை தயாரித்து இருந்தனர்.

    கன்னட திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக இருப்பது ஹொம்பலே பிலிம்ஸ். கே.ஜி. எஃப் திரைப்படத்தை தயாரித்து கன்னட திரைப்படத்தை பான் இந்தியன் லெவலுக்கு கொண்டு சென்ற பெருமை ஹொம்பலே பிலிம்ஸ்-யே சாரும். அதைத் தொடர்ந்து இயக்கிய கே.ஜி.எஃப் 2, காந்தாரா ஆகிய திரைப்படங்கள் உலகம் முழுக்க பேசப்பட்டு  வெற்றிப்பெற்ற திரைப்படங்களாகும். ஹொம்பலே பிலிம்ஸ் தயாரிக்கும் திரைப்படங்களின் மீது எப்பொழுதும்  ரசிகர்களுக்கு ஒரு எதிர்ப்பார்ப்பு உண்டு.

    கடைசியாக ஹொம்பலே பிலிம்ஸ் பிரபாஸ் நடிப்பில் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் வெளியான சலார் திரைப்படத்தை தயாரித்து இருந்தனர். இந்நிலையில் ஹொம்பலே பிலிம்ஸ் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளனர். அதில் அவர்கள் அடுத்து பிரபாஸ் நடிப்பில் மூன்று திரைப்படங்களை தயாரிக்கவுள்ளதாக தகவலை வெளியிட்டுள்ளனர்.

    அதில் ஒன்று 2026 ஆம் ஆண்டு சலார்2 திரைப்படம், 2027 ஆம் ஆண்டு இயக்குனர் பிரஷாந்த் வர்மா இயக்க, கடைசி 3- வது படத்தை தமிழ்நாடு இயக்குனரான லோகேஷ் கனகராஜ் இயக்கும் படங்களாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

    நடிகர் பிரபாஸ் கல்கி 2898 ஏடி திரைப்படத்தை தொடர்ந்து ராஜா சாப், மற்றும் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கும் ஸ்பிரிட் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். ஹொம்பலே பிலிம்ஸ் கே.ஜி.எஃப் 3, சலார் பார்ட் 2 மற்றூம் காந்தாரா சாப்டர் 1 ஆகிய திரைப்படங்களை தயாரித்து வருகின்றனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ’கே.ஜி.எஃப்’, ‘காந்தாரா’ போன்ற படங்களை தயாரித்த நிறுவனம் ஹோம்பாலே பிலிம்ஸ்.
    • இந்நிறுவனம் திரைத்துறையில் மூவாயிரம் கோடி முதலீடு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.

    'கே.ஜி.எஃப். 1', 'கே.ஜி.எஃப் 2', 'காந்தாரா' போன்ற பிரம்மாண்டமான படங்களை தயாரித்து ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்திருக்கும் தயாரிப்பு நிறுவனம் ஹோம்பாலே பிலிம்ஸ். இந்நிறுவனத்தின் உரிமையாளரான தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர், பார்வையாளர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்து, எதிர்கால திட்டம் குறித்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.


    தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர்

    இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, " எங்கள் மீது அசைக்க முடியாத அன்பையும், ஆதரவையும் பொழியும் உங்கள் அனைவரையும் பாராட்டுகிறேன். கடந்த ஆண்டு எங்களுக்கு சிறந்த ஆண்டாகவும், நிறைவானதாகவும் இருந்தது- இது உங்கள் அன்பு மற்றும் ஆதரவினால் மட்டுமே சாத்தியமானது. அதற்காக மீண்டும் ஒரு முறை அனைவருக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன், மேலும் இந்த நட்புறவு தொடரும் என்றும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து இலக்குகளை எட்டுவோம் என்றும் நம்புகிறேன்.


    தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர்

    சினிமா, வலிமையான பொழுதுபோக்கு ஊடகம் என்பது பழங்காலத்திலிருந்தே உள்ளது. நேர்நிலையாகவோ அல்லது எதிர்நிலையாகவோ அதிர்வை ஏற்படுத்தியிருந்தாலும், அது நிம்மதி மற்றும் மகிழ்ச்சியின் மிகப்பெரிய ஊடகமாக இருந்து வருகிறது. இது நமது கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் வரலாற்றின் வலுவான சாட்சியாக இருந்து வருகிறது, இதன் மூலம் நமது அடையாளத்தை உலகிற்கு பெரிய அளவில் வெளிப்படுத்தி வருகிறோம்.


    ஹோம்பாலே பிலிம்ஸ் அறிக்கை

    பன்முகத்தன்மை கொண்ட நம் இந்தியாவிலுள்ள இளைஞர்களிடம் இருக்கும் பரந்த திறனை வெளிக்கொணர ஒரு வாய்ப்பை நமக்கு வழங்குகிறது. இந்த புதிய ஆண்டை நாங்கள் தொடங்கும்போது, நீடித்த நினைவாற்றலைக் கொண்டிருக்கக்கூடிய மற்றும் உங்கள் மீது அழியாத தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஆழ்ந்த அனுபவத்துடன், அழுத்தமான உள்ளடக்கத்தை தயாரிக்கவிருப்பதாக உறுதியளிக்கிறோம். இந்த ஆர்வத்தை மனதில் கொண்டு, எதிர் வரும் ஐந்து ஆண்டுகளில் மூவாயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்வோம் என்று உறுதியளிக்கிறோம்" என்று குறிப்பிட்டுள்ளது.

    ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் தற்போது 'சலார்', 'ரகு தாத்தா', 'டைசன்', 'ரிச்சர்ட் ஆண்டனி' போன்ற படங்களை தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

    ×