search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "home minister rajnath singh"

    புல்வாமா தாக்குதலில் 40 வீரர்கள் உயிரிழந்த சோகம் இன்னும் நீங்காத நிலையில் இந்த ஆண்டு ஹோலி பண்டிகை கொண்டாட போவதில்லை என மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். #RajnathSingh #Holi #PulwamaAttack
    புதுடெல்லி:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த மாதம் 14ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய கார் குண்டு தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலியாகினர். இச்சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், புல்வாமா தாக்குதலில் 40 வீரர்கள் உயிரிழந்த சோகம் இன்னும் நீங்காத நிலையில் இந்த ஆண்டு ஹோலி பண்டிகை கொண்டாட போவதில்லை என மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

    ஏற்கனவே, கடந்த 2017-ம் ஆண்டில் சத்தீஸ்கரில் நக்சல்கள் தாக்குதலில் 25 சி.ஆர்.பி.எப். வீரர்கள் கொல்லப்பட்டபோது, ராஜ்நாத் சிங் ஹோலி பண்டிகையை கொண்டாடவில்லை என்பது நினைவிருக்கலாம். #RajnathSingh #Holi #PulwamaAttack
    காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூட்டில் படுகாயம் அடைந்து எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட போலீஸ் டிஐஜியை ராஜ்நாத் சிங் சந்தித்து நலம் விசாரித்தார். #RajnathSingh #Pulwama #AmitKumar #AIIMS
    புதுடெல்லி:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 துணை ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.

    இதற்கிடையே, கடந்த 18ம் தேதி புல்வாமா மாவட்டத்தில் ஜெய்ஷ் இ முகம்மது இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதிகளை தேடும் பணியில் மாநில போலீசார் ஈடுபட்டனர்.

    அப்போது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் போலீஸ் டி.ஐ.ஜி. அமித் குமார் வயிற்றில் குண்டு பாய்ந்தது.
    இதையடுத்து, உயிருக்கு ஆபத்தான நிலையில், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கொண்டு செல்லப்பட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்நிலையில், காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்து எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட போலீஸ் டிஐஜியை உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இன்று சந்தித்து நலம் விசாரித்தார். #RajnathSingh #Pulwama #AmitKumar #AIIMS
    தலைநகர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று மாலை சந்தித்து ஆலோசனை நடத்தினார். #MekedatuDam #Modi #BanwarilalPurohit #RajnathSingh
    புதுடெல்லி:

    கர்நாடக அரசு மேகதாதுவில் புதிய அணையை கட்டுவதற்கான சாத்தியக்கூறு அறிக்கையை மத்திய நீர்வள ஆணையத்திடம் வழங்கியது. அந்த ஆணையம் அதை ஏற்றுக்கொண்டு, விரிவான திட்ட அறிக்கையை தயாரிப்பதற்கான ஒப்புதலை அளித்துள்ளது. இது தமிழ்நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
     
    தமிழக சட்டசபையில் நேற்று கர்நாடக அரசுக்கு மத்திய நீர்வளக்குழுமம் வழங்கிய அனுமதியை திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தியும், தமிழ்நாட்டின் இசைவின்றி எவ்வித கட்டுமான பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது என்பதை வலியுறுத்தியும் தனி தீர்மானம் கொண்டு வரப்பட்டு, ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.



    இந்நிலையில், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று காலை கொடி நாள் நிகழ்ச்சிகளை கவர்னர் மாளிகையில் முடித்து விட்டு, மதியம் 1 மணியளவில் விமானம் மூலம் டெல்லி சென்றார். அதைத்தொடர்ந்து, மாலை 5.30 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது, மேகதாது அணை பிரச்சினையால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள நிலை குறித்து பிரதமரிடம், அவர் விளக்கினார்.

    இதையடுத்து, உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கையும் கவர்னர் பன்வாரிலால் புரோகித் சந்தித்து பேசினார். #MekedatuDam #Governor #Modi #RajnathSingh
    பஞ்சாப் மந்திரி சித்துவின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால், அவருக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு வழங்கவேண்டும் என உள்துறைக்கு காங்கிரஸ் கடிதம் எழுதியுள்ளது. #Congress #Sidhu #CISF #RajnathSingh
    புதுடெல்லி:

    பஞ்சாப் மாநிலத்தின் மந்திரியாக பதவி வகித்து வருபவர் நவ்ஜோத் சிங் சித்து. இவர் முன்னாள் கிரிக்கெட் வீரர்.

    இந்நிலையில், பஞ்சாப் மந்திரியான நவ்ஜோத் சிங் சித்து உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால், அவருக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு வழங்க வேண்டும் என உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்குக்கு காங்கிரஸ் கடிதம் எழுதியுள்ளது. 

    இதுதொடர்பாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜிவாலா மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்குக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில் அவர் கூறியதாவது:



    காங்கிரஸ் சார்பில் பிரசாரம் செய்ய நவ்ஜோத் சிங் சித்து நியமனம் செய்யப்பட்டுள்ளார். பஞ்சாபில் பிரசாரம் செய்யும்போது அந்த மாநில போலீசார் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

    ஆனால், சித்து இந்தியா முழுவதும் சென்று பிரசாரம் செய்து வருகிறார். அவருக்கு பல்வேறு மிரட்டல்கள் வந்துள்ளன.
    எனவே, சித்துவுக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார். #Congress #Sidhu #CISF #RajnathSingh
    டெல்லியில் மறைந்த காவலர்களின் நினைவாக அனுசரிக்கப்படும் காவலர் வீர வணக்க நாளில் பிரதமர் மோடி காவலர்களுக்கு மரியாதை செலுத்தினார். #NationalPoliceDay #PMModi
    புதுடெல்லி:

    1959-ம் ஆண்டு லடாக் பகுதியில் சீன படையினரால் கொல்லப்பட்ட காவலர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஆண்டுதோறும் அக்டோபர் 21-ம் தேதி காவலர் நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது.

    அதனையொட்டி, டெல்லியில் பிரதமர் மோடி மறைந்த காவலர்களுக்கான நினைவு இடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். மேலும், உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், பாஜகவின் மூத்த தலைவரான அத்வானி ஆகியோரும் மரியாதை செலுத்தினர்.



    இதேபோல், தமிழகத்தில் சென்னை மற்றும் புதுச்சேரியிலும் காவலர் நினைவுநாள் கொண்டாடப்படுகிறது. புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி காவலர்களுக்கு மரியாதை செலுத்தினார். 21 குண்டுகள் முழங்க நடைபெற்ற இந்த காவலர் நினைவு நாள் நிகழ்ச்சியில் அமைச்சர், காவல்துறை தலைவர் ஆகியோர் பங்கேற்றனர். #NationalPoliceDay #PMModi
    கேரளாவில் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இன்று பார்வையிட உள்ளார். #KeralaFloods #KeralaRain #RajnathSingh
    புதுடெல்லி:

    தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கேரளாவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் கேரளாவில் உள்ள அணைகள் மற்றும் ஏரிகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக ஒரே நேரத்தில் 22 அணைகள் திறந்து விடப்பட்டுள்ளது.

    இடுக்கி, மலப்புரம், கண்ணூர், வயநாடு ஆகிய மாவட்டங்களில் கனமழை காரணமாக இதுவரை 37 பேர் பலியாகினர். மீட்புப் பணிக்காக ராணுவம், கப்பற்படையினர் மற்றும் பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். 

    கனமழை பாதிப்பு குறித்து அம்மாநில முதல்வர் பினராயி விஜயனிடம் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

    இதற்கிடையே, வெள்ளம் பாதித்த பகுதிகளை கேரளா முதல் மந்திரி பினராயி விஜயன் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா உள்பட பலர் பார்வையிட்டனர்.

    இந்நிலையில், மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இன்று கேரளா செல்கிறார். கனமழையல் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை அவர் பார்வையிடுகிறார். அதன்பின்னர், மாநில முதல்வர் மற்றும் அதிகாரிகளை சந்தித்து மீட்பு பணிகள் தொடர்பாக ஆலோசனை நடத்துகிறார். #KeralaFloods #KeralaRain #RajnathSingh
    அசாம் குடிமக்கள் பதிவேடு தொடர்பாக பொதுமக்களிடம் பயத்தை உருவாக்கும் செயல் கடும் கண்டனத்துக்கு உரியது என உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் மாநிலங்களவையில் இன்று தெரிவித்தார். #MonsoonSession #NRCBill #RajnathSingh
    புதுடெல்லி:

    அசாம் மாநிலத்தில் வசிப்போர் குறித்த தேசிய குடிமக்கள் இறுதி வரைவு பதிவேடு சமீபத்தில் வெளியிடப்பட்டது.

    இந்த பதிவேட்டில் சுமார் 40 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டு உள்ளதற்கு காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன. 

    இந்த விவகாரம் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் கடும் அமளியை ஏற்படுத்தியது. மாநிலங்களவை கடந்த இரு தினங்களாக ஒத்தி வைக்கப்பட்டது.

    இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் மாநிலங்களவையில் இன்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

    அசாம் குடியுரிமை பட்டியல் தொடர்பான பணிகள், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது 1985ம் ஆண்டு தொடங்கியது.  மன்மோகன் சிங் பிரதமராக பதவி வகித்தபோது இது தொடர்பான பணிகள் நடைபெற்று வந்தன.

    இதுதொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் சுப்ரீம் கோர்ட் கண்காணிப்பின் கீழ் நடந்து வருகிறது. இப்போது வெளியிடப்பட்டுள்ள இந்த பட்டியல் இறுதியானதல்ல. ஒவ்வொருவருக்கும் மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படும்.  

    இந்த விவகாரம் தொடர்பாக தேவையற்ற குற்றச்சாட்டுகளை கூறுவது துரதிர்ஷ்டவசமானது. அசாம் குடிமக்கள் பதிவேடு தொடர்பாக பொதுமக்களிடம் பயத்தை உருவாக்கும் செயல் கடும் கண்டனத்துக்கு உரியது என தெரிவித்துள்ளார். #MonsoonSession #NRCBill #RajnathSingh
    காஷ்மீரில் ஆட்சி கவிழ்ப்புக்கு பின்னர் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஸ்ரீநகர் வந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக கவர்னர் வோராவுடன் ஆலோசனை நடத்தினார். #RajnathinJK #Rajnath #Vohra
    ஜம்மு:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மெகபூபா முப்தி தலைமையிலான கூட்டணி அரசுக்கு அளித்துவந்த ஆதரவை பா.ஜ.க. சமீபத்தில் விலக்கி கொண்டது. இதைதொடர்ந்து அங்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி கவிழ்ந்தது. கவர்னர் வோரா தலைமையில் ஜனாதிபதி ஆட்சி நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இருநாள் பயணமாக நேற்று காஷ்மீர் சென்றடைந்தார். அவருடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால், உள்துறை செயலாளர் ராஜிவ் கவுபா உள்ளிட்ட உயரதிகாரிகளும் சென்றுள்ளனர்.

    ஸ்ரீநகரில் உள்ள விமானப்படை தளம் வந்த ராஜ்நாத் சிங்கை வரவேற்றனர். அதன்பின்னர், அங்கிருந்து கவர்னர் மாளிகை சென்றார். அம்மாநில கவர்னர் என்.என்.வோராவை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

    அப்போது, மாநிலத்தில் நிலவும் சட்டம்-ஒழுங்கு மற்றும் அமர்நாத் யாத்திரைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பான ஆலோசனை நடைபெற்றது.

    இன்று அமர்நாத் கோவிலுக்குச் செல்லும் அவர், அங்கு பனி லிங்கத்தை தரிசிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. #RajnathinJK #Rajnath #Vohra
    ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். #RajnathSingh #JammuKashmirIssue
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவில் உள்ள தனியார் மருத்துவமனை நிகழ்ச்சியில் உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பங்கேற்றார். அதன்பின் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும், அங்கு முழு அமைதி திரும்ப வேண்டும் என்பது மட்டுமே அரசின் விருப்பமாக உள்ளது. இதற்கான பணிகளில் தான் மத்திய அரசு ஈடுபட்டு வருகின்றது.

    காஷ்மீரில் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்தி அங்கு அமைதியை கொண்டு வருவது எங்களின் மிகப்பெரிய இலக்கு. பயங்கரவாதிகளை தேடி அழிக்கும் பணிகளில் ஈடுபட நமது பாதுகாப்பு படை எப்போதும் தயாராக உள்ளது.

    மாநிலத்தில் அமைதி ஏற்பட, அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். பயங்கரவாதிகளின் எந்தவிதமான தாக்குதல் முயற்சியையும் முறியடிக்க பாதுகாப்பு படைகள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன என தெரிவித்தார். #RajnathSingh #JammuKashmirIssue
    எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ. இடைத்தேர்தல்களில் பாஜக பெற்ற தோல்வி என்பது, நீண்ட தூரம் தாண்டுவதற்கு இரண்டு அடி பின்னால் செல்வதற்கு நிகரானது என உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். #RajnathSingh #BypollResults
    போபால்:

    மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் மத்தியப்பிரதேசம் மாநிலத்துக்கு நேற்று சென்றார். அங்கு போலீசாருக்கான பயிற்சி மையம் திறப்பு விழாவில் இன்று கலந்து கொண்டார்.



    அங்கு பாஜக ஆட்சியின் நான்கு ஆண்டு கால சாதனைகள் குறித்து பேசினார். அப்போது, இடைத்தேர்தல்களில் பாஜக பெற்ற தோல்வி குறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேட்டனர். அதற்கு ராஜ்நாத் சிங் சமாளிப்பாக பதிலளித்துள்ளார்.

    அப்போது அவர் கூறுகையில், சமீபத்தில் நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவுகளில் பாஜக பெற்ற தோல்வி என்பது, நீண்ட தொலைவை தாண்டுவதற்கு ஒருவர் இரண்டடி பின்னால் செல்வது போலாகும் என குறிப்பிட்டுள்ளார். #RajnathSingh #BypollResults
    மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கின் மகனும், உ.பி. எம்.எல்.ஏ.வுமான பங்கஜ் சிங்க்க்கு வாட்ஸ் அப்பில் கொலை மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். #RajnathSingh #PankajSingh
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பாஜக எம் பிக்கள் சிலரின் வாட்ஸ் அப்பில் கொலை மிரட்டல் வந்தது. அதில், மூன்று நாள்களில் 10 லட்சம் ரூபாய் தரவேண்டும். இல்லையேல் நீங்கள் கொல்லப்படுவீர்கள் என பதிவிட்டிருந்தது.

    மீரான்புர் கத்ரா தொகுதி  வீர் விக்ரம் சிங், தத்ரால் தொகுதி மன்வேந்திர சிங், தாராபாங்கி தொகுதி பிரேம் பிரகாஷ் பாண்டே உள்பட 12 எம்.எல்.ஏ.க்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது.

    இதுதொடர்பாக அவர்கள் போலீசில் புகார் கொடுத்துள்ளனர். முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் உத்தரவின் பேரில் கொலை மிரட்டல் விடுத்த நபர்களை பிடிக்க சிறப்பு புலனாய்வு படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.



    இந்நிலையில், மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கின் மகனும், உ.பி. எம்.எல்.ஏ.வுமான பங்கஜ் சிங்குக்கு வாட்ஸ் அப்பில் கொலை மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், பிரபல தாதா தாவூத் இப்ராகிம் கூட்டாளிகளுக்கு இதில் தொடர்பிருக்கலாம் என சந்தேகிக்கிறோம். கொலை மிரட்டல் விடுத்த எண் டெக்சாசில் இருந்து வந்துள்ளது. இதுகுறித்து விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளோம் என தெரிவித்துள்ளனர்.

    மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கின் மகனும், உ.பி. எம்.எல்.ஏ.வுமான பங்கஜ் சிங்குக்கு வாட்ஸ் அப்பில் கொலை மிரட்டல் விடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #RajnathSingh #PankajSingh
    ×