என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Hong Kong Open"
- ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடர் ஹாங்காங்கில் நடந்து வருகிறது.
- கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி ஏமாற்றம் அளித்தது.
ஹாங்காங்:
ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடர் ஹாங்காங்கில் நடைபெற்று வருகிறது.
இந்த தொடரில் இன்று நடந்த கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சுமித் ரெட்டி, சிக்கி ரெட்டி ஜோடி- மலேசியா ஜோடியுடன்மோதியது.
இதில் இந்திய ஜோடி 11-21, 20-22 என்ற கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியது.
இதேபோல், பெண்கள் இரட்டையர் பிரிவிலும் இந்தியாவின் கோபிசந்த்-ஜாலி ஜோடி தோல்வி அடைந்தது.
- ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடர் ஹாங்காங்கில் நடந்து வருகிறது.
- கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி வெற்றி பெற்றது.
ஹாங்காங்:
ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடர் ஹாங்காங்கில் நடைபெற்று வருகிறது.
இந்த தொடரில் நேற்று நடந்த கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சுமித் ரெட்டி, சிக்கி ரெட்டி ஜோடி- சக நாட்டு கிருஷ்ணபிரியா கூடாரவல்லி, தருண் கோனா ஜோடியை 21-9, 21-10 என்ற கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியது.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஆகர்ஷி காஷ்யப், ஜப்பான் வீராங்கனையிடமும், தன்யா ஹேமந்த் இந்தோனேசியா வீராங்கனையிடமும் தோல்வி அடைந்தனர்.
ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் போட்டி அங்குள்ள கோவ்லூன் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்றில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 18-21, 30-29, 21-18 என்ற செட் கணக்கில் சக நாட்டு வீரர் பிரனாயை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் சமீர் வர்மா, சீனாவின் சென் லாங்கை சந்திக்க இருந்தார். காயம் காரணமாக சென் லாங் போட்டியில் இருந்து விலகியதால் சமீர் வர்மா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு கால்இறுதிக்குள் நுழைந்தார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 24-26, 20-22 என்ற நேர்செட்டில் தென்கொரியாவின் சங் ஜி ஹூயனிடம் தோற்று வெளியேறினார். சங் ஜி ஹூயனிடம் சிந்து தோற்பது இது 6-வது முறையாகும். #HongKongOpen #PVSindhu #Srikanth
ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் போட்டி அங்குள்ள கோவ்லூன் நகரில் நடந்து வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 21-15, 13-21, 21-17 என்ற செட் கணக்கில் 14-ம் நிலை வீராங்கனையான தாய்லாந்தின் நிட்சான் ஜின்டாபோலை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 9-வது இடத்தில் உள்ள இந்திய வீராங்கனை சாய்னா நேவால் 21-10, 10-21, 19-21 என்ற செட் கணக்கில் 2-ம் நிலை வீராங்கனையான ஜப்பானின் அகானே யமாகுஷியிடம் தோல்வி கண்டு வெளியேறினார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் சமீர் வர்மா 21-17, 21-14 என்ற நேர்செட்டில் தாய்லாந்து வீரர் சுப்பான்யு அவிஹிங்சனோனை வீழ்த்தி 2-வது சுற்றுக்குள் நுழைந்தார். மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 21-11, 21-15 என்ற நேர்செட்டில் ஹாங்காங் வீரர் வோங் விங் கி வின்சென்டை சாய்த்தார். இன்னொரு ஆட்டத்தில் இந்திய வீரர் சாய் பிரனீத் 21-16, 11-21, 15-21 என்ற செட் கணக்கில் தாய்லாந்து வீரர் கோசித் பெட்ராடாப்பிடம் தோல்வி கண்டு நடையை கட்டினார். மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் காஷ்யப் 16-21, 13-21 என்ற நேர்செட்டில் இந்தோனேஷியா வீரர் அந்தோணி சினிசுகாவிடம் தோல்வி அடைந்து வெளியேறினார். #HongKongOpen #PVSindhu #Srikanth
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்