என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "hormone replacement"
- உடல் இயக்க செயல்பாடுகளில் ஈடுபடுவதும் முக்கியமானது.
- உடல் எடையை குறைப்பதற்கு சீரான உணவு அவசியம்.
குழந்தைகள் உள்பட வயது வித்தியாசமின்றி அனைத்து தரப்பினரையும் பாதிக்கும் பிரச்சினையாக உடல் பருமன் உருவெடுத்திருக்கிறது.எப்படியாவது உடல் எடையை குறைத்துவிட வேண்டும் என்று பலரும் பல்வேறு வழிமுறைகளை பின்பற்றுகிறார்கள்.
குறுகிய காலத்தில் உடல் எடையை குறைப்பதற்கான முயற்சிகளிலும் சிலர் ஈடுபடுகிறார்கள். அது ஆபத்தானது. பக்க விளைவுகளையும், பல்வேறு உடல்நல பிரச்சினைகளையும் உண்டாக்கிவிடும். பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் உடல் எடையை குறைக்க உதவும் விஷயங்கள் குறித்து பார்ப்போம்.
கலோரிகள்:
உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் உட்கொள்ளும் உணவில் இருக்கும் கலோரிகளை விட அதிக கலோரிகளை செலவிட வேண்டும். குறைந்த கலோரிகளை கொண்ட உணவுப்பொருட்களை உண்பதும், அதிக உடல் இயக்க செயல்பாடுகளில் ஈடுபடுவதும் முக்கியமானது. ஒட்டுமொத்தமாக தினமும் உட்கொள்ளும் கலோரிகளின் அளவு 500 முதல் ஆயிரம் வரை இருக்குமாறு பார்த்துக்கொள்வதும் எடை குறைப்புக்கு வித்திடும்.
உணவு தேர்வு:
உடலுக்கு ஆபத்து விளைவிக்காமல் உடல் எடையை குறைப்பதற்கு சீரான உணவு அவசியம். பழங்கள், காய்கறிகள், புரதம் நிறைந்த உணவுகள், முழு தானியங்களை உண்ணுங்கள். பதப்படுத்தப்பட்ட உணவுகள், குளிர் பானங்கள், கொழுப்பு அதிகம் கலந்த உணவுகளை தவிருங்கள்.
உணவின் அளவு:
உடல் எடையை குறைக்க வேண்டும் என்றால் உணவுக்கட்டுப்பாடு முக்கியமானது. சத்தான உணவுப்பொருட்களை அதிகமாக உட்கொண்டால் இன்னும் உடல் எடை அதிகரிக்கக்கூடும். அதனால் உணவை அளவோடு சாப்பிடுங்கள். கிண்ணத்திலோ, தட்டிலோ அளவு எடுத்து தினமும் அதே அளவில் உணவு சாப்பிடுவதை உறுதி செய்யுங்கள். அதை விட அதிகமாக உண்பதும், சாப்பிடாமல் பட்டினியாக இருப்பதும் உடல் எடை இழப்புக்கு பலம் சேர்க்காது. உடல் பருமன் பிரச்சினையை அதிகரிக்கச் செய்துவிடும்.
உடற்பயிற்சி:
தினமும் உடற்பயிற்சி செய்யும் வழக்கத்தை தொடர்வது எடை இழப்புக்கும், ஆரோக்கியத்துக்கும் அவசியமானது. குறைந்தபட்சம் 30 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்வது நல்லது. ஜாக்கிங், சைக்கிள் ஓட்டுதல், நடைப் பயிற்சி, உடலுக்கு வலுசேர்க்கும் கடினமான பயிற்சி என எந்த பயிற்சியாகவும் இருக்கலாம்.
உடற்பயிற்சி திட்டம்:
உடல் எடை குறைப்புக்கு வித்திடும் உடற் பயிற்சிகளின் பட்டியலை முதலில் தேர்வு செய்ய வேண்டும். அந்த பயிற்சிகள் உடல் எடை குறைப்புக்கு எந்த அளவுக்கு உதவும் என்பதை தெரிந்து கொண்டு அதற்கேற்ப பயிற்சிகளை தொடங்க வேண்டும். ஆரம்ப நிலையிலேயே கடினமான பயிற்சிகளை மேற்கொள்ளக் கூடாது. படிப்படியாகவே பயிற்சியை அதிகப் படுத்த வேண்டும். அப்படி திட்டமிட்டு பயிற்சி மேற்கொள்வது அதிக கலோரிகளை எரிக்க உதவும். விரைவாக எடை இழப்புக்கும் வித்திடும்.
தூக்கம்:
உடல் எடையை குறைக்க விரும்பினால் போதுமான அளவுக்கு தூக்கம் பெறுவது முக்கியம். தூக்கமின்மை பிரச்சினையை எதிர்கொண்டால் வளர்சிதை மாற்றம் மற்றும் பசியைக் கட்டுப்படுத்தும் ஹார்மோன்களின் செயல்பாடுகளும் பாதிப்புக்குள்ளாகும்.
கண்காணித்தல்:
வீட்டில் எடை மிஷின் ஒன்றை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். ஒவ்வொரு வாரமும் உடல் எடையை பரிசோதியுங்கள். அதன் மூலம் உடல் எடையை கண்காணிப்பதோடு எவ்வளவு எடை குறைந்திருக்கிறது என்பதை அறிய முடியும். ஒவ்வொரு வாரமும் உடல் எடை சீரான இடைவெளியில் குறைந்து வருகிறதா? என் பதையும் கவனியுங்கள்.
அவ்வாறு இல்லாமல் திடீரென உடல் எடை அதிகரித்தாலோ, சட்டென்று எடை குறைந்தாலோ உணவு, உடற்பயிற்சி வழக்கத்தில் மாற்றத்தை கொண்டு வாருங்கள். உடற்பயிற்சி நிபுணர், ஊட்டச்சத்து நிபுணர்களை அணுகி அவர்களின் ஆலோசனைப்படி செயல்படுவது சிறப்பானது. இந்த வழக்கங்களை பின்பற்றி வந்த சிலருக்கு 4 மாதங்களில் 20 கிலோ வரை உடல் எடை குறைந்திருக்கிறது.
விரைவாக உடல் எடை குறைவது ஆபத்தானது என்பதை நினைவில் கொள்ள வேண்டியது அவசியமானது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்