search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hydrogen Peroxide Treatment"

    • ஹைட்ரஜன் பெராக்சைடு சிகிச்சை தொடர்பான சமந்தாவின் இன்ஸ்டாகிராம் பதிவு வைரலானது.
    • மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் யாரும் தாங்களாகவே மருந்துகள் எடுக்கக் கூடாது.

    மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்ட நடிகை சமந்தா, சில வருட சிகிச்சைக்குப் பின் தற்போது குணமடைந்துள்ளார். இதனையடுத்து நடிப்பில் அவர் கவனம் செலுத்தி வருகிறார்.

    சமந்தா அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஃபிட்னஸ் தொடர்பான பல்வேறு பதிவுகளை பகிர்ந்து வருகிறார்.

    சமீபத்தில், சமந்தா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் 'நெபுலைசர்' கருவியை தனது மூக்கில் வைத்தவாறு ஒரு புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். அத்துடன் "ஒரு பொதுவான வைரலுக்கு மருந்து எடுத்துக் கொள்ளும் முன், ஒரு மாற்றுவழியை முயற்சி செய்து பாருங்கள். அதில் ஒரு வழி, ஹைட்ரஜன் பெராக்சைடு மற்றும் காய்ச்சி வடிகட்டிய நீர் ஆகியவற்றின் கலவையுடன் நெபுலைஸ் செய்வது" என்று குறிப்பிட்டிருந்தார்.

    ஹைட்ரஜன் பெராக்சைடு சிகிச்சை தொடர்பான சமந்தாவின் இந்த இன்ஸ்டாகிராம் பதிவு சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை கிளப்பியது.

    இதனையடுத்து, பலரும் சமூக வலைத்தளங்களில் சமந்தாவை விமர்சிக்க ஆரம்பித்தனர். குறிப்பாக பேட்மிட்டன் வீராங்கனையும் நடிகர் விஷ்ணு விஷாலின் மனைவியுமான ஜுவாலா கட்டா இந்த விவகாரம் தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

    அதில், 'மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் யாரும் தாங்களாகவே மருந்துகள் எடுக்கக் கூடாது என்று கூறப்பட்டு வரும் நிலையில் சமந்தாவின் இந்த கருத்து ஏற்றுக்கொள்ள கூடியது அல்ல. சமந்தா கூறுவது போல் யாரும் செய்ய வேண்டாம். உடல்நிலை சரியில்லை என்றால் உடனே மருத்துவரை அணுகி அவர்களுடைய அறிவுரையின்படி தான் மருந்துகளை எடுக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

    இறுதியாக இத்தகைய விமர்சனங்களுக்கு சமந்தா பதில் அளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், என்னுடைய சொந்த அனுபவத்தை தான் நான் பகிர்ந்தேன். இருப்பினும் பொதுவெளியில் மருத்துவ ஆலோசனைகளை வழங்கும் போது அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதையும் அவர் ஒப்புக் கொண்டுள்ளார். 

    ×